ஒஸாமா பின் லேடனது மகனின் குடி­யு­ரி­மையை சவூதி அரே­பியா பறித்­தது

0 631

அல்­கைதா அமைப்பின் தலை­வ­ராக இருந்த ஒஸாமா பின் லேடனின் மகன் ஹம்ஸா பின் லாடெனின் குடி­யு­ரி­மை­யினை சவூதி அரே­பிய அதி­கா­ரிகள் நீக்­கி­யுள்­ள­தாக உள்ளூர் ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ளன.

கடந்த வருடம் நவம்பர் மாதம் அது தொடர்­பான அரச ஆணை வெளி­யி­டப்­பட்­ட­தாக தெரி­வித்­துள்ள சவூதி அரே­பிய நாளி­த­ழான ஒகாஸ், அந்த சம­யத்தில் அது தொடர்­பான தகவல் வெளி­யி­டப்­ப­ட­வில்லை எனவும் கடந்த வெள்­ளிக்­கி­ழமை தெரி­வித்­தது.

இந்த செய்தி தொடர்பில் சவூதி அரேபிய அதிகாரிகள் தமது தரப்பிலிருந்து எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.

இதனிடையே, அல்கைதா அமைப்பின் முக்கிய தலைவராக ஹம்ஸா பின் லேடனை வர்ணித்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அவர் எங்கிருக்கிறார் என்பது தொடர்பில் தகவலளிப்போருக்கு ஒரு பில்லியன் டொலர் பரிசு வழங்கவுள்ளதாக கடந்த வியாழக்கிழமை அறிவித்தது.

மேற்கு நாடுகளின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்கான பல்வேறு அழைப்புக் களை இணையத்தளம் மூலமாக விடுத்துள்ள ஹம்ஸா 2011 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் வைத்து அமெரிக்கப் படையினரால் அவரது தந்தை படுகொலை செய்யப்பட்டமைக்கு பழிவாங்குவதாக சபதமெடுத்துள்ளதாகவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி நியூயோர்க்கில் அமைந்துள்ள உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் ஆகியவற்றின் மீதான தாக்குதல்களின் சூத்திரதாரியாக ஒஸாமா பின்லாடன் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இந்தத் தாக்குதலில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 77 பேர் உள்ளடங் கலாக சுமார் 3,000 பேர் கொல்லப்பட்டனர்.

2017 ஆம் ஆண்டு அமெரிக்க அதிகாரி களினால் ஹம்ஸா பின்லேடன் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.