அதிகாரப் பகிர்வை நாம் ஆதரிப்போம்

20ஆவது திருத்தத்திற்கு ஆதரவில்லை என்கிறார் அமைச்சர் ரவூப் ஹக்கீம்

0 738

அதி­கா­ரத்தை பகிர்ந்து தீர்­வு­களை நோக்கிப் பய­ணிக்க ஏதேனும் திருத்­தங்கள் கொண்­டு­வந்தால் அதற்கு நாம் முழு­மை­யான ஆத­ரவை வழங்­குவோம். ஆனால் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கு­வ­தற்கு இது சரி­யான தரு­ண­மல்­ல­வென அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை நீக்கும் 20 ஆவது திருத்த சட்டம் குறித்து கருத்து தெரி­விக்­கும்­போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறு­கையில்,

நிறை­வேற்று அதி­கா­ரத்தை நீக்கும் சரி­யான தருணம் இது­வல்ல, இப்­போது ஜனா­தி­பதி தேர்தல் ஒன்­றுக்­கான கால­கட்டம் நிலவி வரு­கின்ற நிலையில் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கு­வது என்­பது சரி­யா­ன­தல்ல. ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்றி பெற­வேண்டும் என்ற நோக்கில் சிலர் இதனை கையில் எடுக்கப் பார்க்­கின்­றனர்.  அதி­காரப் பர­வ­லாக்கல் குறித்து ஏதேனும் திருத்­தங்கள் கொண்­டு­வந்து அர­சியல் முரண்­பா­டு­க­ளுக்கு தீர்வை எட்ட நினைத்தால் அதற்கு நாம் ஒத்­து­ழைப்பு வழங்கத் தயா­ராக உள்ளோம். ஆனால் இப்­போது நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை கையி­லெ­டுக்க வேண்டாம். இது ஒரு­சி­ல­ரது தனிப்­பட்ட தேவைக்­காக மட்­டுமே கையா­ளப்­ப­டு­கின்­றது. ஆகவே அதற்கு ஆத­ரவு வழங்கப் போவ­தில்லை.

மேலும்,  ஜனா­தி­பதி அண்­மையில் செய்த ஆட்சிக் கவிழ்ப்­பினால் இரண்டு மாதங்கள் எல்லா வேலைத்­திட்­டங்­களும் தடைப்­பட்­டி­ருந்­தன. ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் இரு துரு­வங்­க­ளாக இருந்­தாலும், இன்று அவர்­களின் புகைப்­ப­டங்கள் எல்லா இடங்­களிலும் ஒன்­றாக உள்­ளன. இந்­நி­லையில் இந்த வரு­டத்­துக்குள் தேர்தல் வர­வுள்­ளது. அதில் எந்தக் கட்சி வெற்­றி­பெறும் என்று எல்­லோரும் ஆவ­லுடன் காத்­தி­ருக்­கின்­றனர். ஜனா­தி­பதி வேட்­பாளர் தெரி­விலும் என்ன நடக்­கப்­போ­கி­றது என்று தெரி­யாமல் உள்­ளது. சமூ­கத்­துக்கு நன்­மை­யான வேட்­பா­ளரை நாங்கள் ஆத­ரிப்போம். இந்­நி­லையில் மாகாண சபை மற்றும் பாரா­ளு­மன்றத் தேர்­தல்­களில் எங்களது உறுப்பினர்களை சரியாகத் தெரிவுசெய்ய வேண்டும். தேர்தல் முறையிலுள்ள வாய்ப்புக்களை நாங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.