பாதாள குழுவுடன் தொடர்புபடுத்திய விவகாரம்: குற்றப்புலனாய்வு பிரிவில் முஜிபுர் முறைப்பாடளிப்பு

0 873

பாதாள உல­கத்­த­லைவர் மாகந்­துர மதூஷ் மற்றும் கஞ்­சி­பான இம்ரான் போன்­றோ­ரு­டன் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தொடர்பு வைத்­தி­ருப்­ப­தாகக் குறிப்­பிட்டு முகப்­புத்­த­கத்தில் பதி­வேற்­றிய நபரை கைது செய்­யு­மாறு வலி­யு­றுத்தி முஜிபுர் ரஹ்மான் எம்.பி. குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவில் முறைப்­பா­டொன்றை கைய­ளித்­துள்ளார்.

இதே­வேளை, குறித்த பதிவின் மூலம் தனக்கு உயிர் அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் இது தொடர்பில் துரி­த­மாக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்க நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டு ­மெனக் கோரி சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரி­ய­விடம் கடி­த­மொன்­றையும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. சமர்ப்­பித்­துள்ளார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போது இது விட­ய­மாகக் கருத்து தெரி­வித்த அவர்,

பாதாள உல­கத்­த­லைவர் மாகந்­துர மதூஷ் கைதின் பின்னர் அதனை பின்­ன­ணி­யாகக் கொண்டு பல்­வே­றுப்­பட்ட கருத்­துக்கள் வெளி­யாகி வரு­கின்­றன. இதன் அடிப்­ப­டையில் கடந்த காலங்­களில் பாதாள உலகத் தலை­வர்­க­ளான மாகந்­துர மதூஷ் மற்றும் இம்ரான் போன்­றோ­ருடன் எனக்குத் தொடர்­புள்­ள­தா­கவும் இம்ரான் என்­பவர் எனது கட்­டி­டத்தில் வாட­கைக்கு இருந்­த­தா­கவும் குறிப்­பிட்டு சமூக வலைத்­த­ளங்­களில் பதி­­வொன்று வைர­லாகப் பர­வி­யி­ருந்­தது.

மஹிந்த ராஜபக் ஷவின் அர­சாங்­கத்­துக்கு எதி­ராக கடந்த காலங்­களில் கடும் எதிர்ப்­பினை வெளி­யிட்டு இருந்­த­மையை கார­ண­மா­கக்­கொண்டு, மதூஷின் கைதை பின்­ன­ணி­யாக வைத்து எனக்குப் பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்தும் வகை­யி­லேயே இவ்­வா­றான பதி­வுகள் வெளி­யி­டப்­பட்டு வரு­கின்­றன. இத­னூ­டாக எதிர்­கா­லத்தில் எனக்கு உயிர் அச்­சு­றுத்­தல்கள் ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புக்­களும் அதிகம் காணப்­ப­டு­கின்­றன. அதன் கார­ண­மாக குறித்த முகப்­புத்­தக பதி­வுக்­க­மைய குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த அந்தக் கட்­டி­டத்தின் உரி­மை­யா­ளரும் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

இவ்­வி­ட­யம் குறித்து கடந்த வாரம் கொழும்பு குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­விடம்  முறைப்­பா­டொன்­றி­னையும் முன்­வைத்­தி­ருந்தேன். இருப்­பினும் அவ­ம­திப்பு முறைப்­பா­டுகள் தொடர்பில் விசா­ரிப்­ப­தற்­கான அதி­காரம் எமக்கு கிடை­யாது என்று பொலிசார் குறிப்­பிட்­டனர்.

இது­போன்ற முகப்­புத்­தக பதிவு எனது அர­சியல் வாழ்க்­கைக்கு சிக்­கலை ஏற்­ப­டுத்தும் வகையில் அமைந்­துள்­ளது என்­பதை பொலி­சா­ருக்கு தெளி­வு­ப­டுத்­தி­யுள்ளேன். அது­மாத்­தி­ர­மின்றி இந்த முகப்­புத்­தக பதிவு என்­மீ­தான உயிர் அச்­சு­றுத்­த­லா­கவே சோடிக்­கப்­பட்­ட­தாகக் கரு­து­கிறேன்.

இந்த விட­யங்கள் குறித்து குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வுக்கு விளக்­க­ம­ளித்­துள்ளேன். எனவே  இது­கு­றித்து பொலிசார் விசா­ர­ணை­களை மேற்­கொள்­வார்கள் என்று எதிர்­பார்ப்­ப­தா­கவும் இந்த விடயம் குறித்து விசா­ர­ணைகள் செய்து குற்­ற­வா­ளி­களை கைது­செய்ய நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கோரி சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரி­ய­வுக்கு கடி­தத்­தி­னூ­டாக அறி­வித்­துள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

அத்­துடன் இது விட­ய­மாக உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்­கும்­படி சபா­நா­ய­க­ரிடம் எழுத்­து­மூலம் கோரிக்கை விடுத்­துள்­ள­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்­துள்ளார்.

2009 ஆம் ஆண்டு மாகாண சபை தேர்­தலில் போட்­டி­யி­டும்­போது பாதாள குழு­வி­னரை பயன்­ப­டுத்தி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ அச்சுறுத்தினார். அத்தோடு தேர்தல் பிரசாரங்கள் நடத்தமுடியாதபடி தடுத்தார். எனக்கு ஆதரவாக இருந்தவர்களின் வீடுகளுக்கு பாதாள உலக குழுவினரை அனுப்பி அச்சுறுத்தல் விடுத்தார். இப்போது எமக்கு பாதாள குழுவினருடன் தொடர்பிருப்பதாக சுய அரசியல் இலாபத்திற்காக இட்டுக்கட்டுகின்றனர் என்றும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.