மிஹிந்தலை தூபி விவகாரம்: இரு மாணவர்களும் விடுதலையாகலாம்

0 712

மிஹிந்­தலை பிர­தே­சத்தில் பௌத்த புரா­தன சின்­னங்கள் மீது ஏறி படம்­பி­டித்த குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்ட மூதூரைச் சேர்ந்த இரு மாண­வர்கள் தொடர்­பான வழக்கு இன்­றைய தினம் விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்டு அவர்கள் விடு­விக்­கப்­ப­டலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

குறித்த மாண­வர்­க­ளுக்கு எதி­ரான குற்­ற­வியல் அறிக்­கையை பொலிசார் இன்­றைய தினம் நீதி­மன்றில் தாக்கல் செய்­வார்கள் என்றும் குறித்த அறிக்­கையில் பாரிய குற்­றச்­சாட்­டுக்கள் எதுவும் இல்லை என்றும் தொல்­பொ­ரு­ளியல் திணைக்­கள அதி­காரி ஒருவர் ‘விடி­வெள்ளி’க்குத் தெரி­வித்தார்.

இம் மாண­வர்கள் இரு­வரும் கடந்த புதன் கிழமை மீண்டும் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­ட­போது, தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் மதிப்­பீட்டு அறிக்கை மற்றும் பொலி­சாரின் குற்­ற­வியல் அறிக்கை ஆகி­ய­வற்றை வெள்ளிக்­கி­ழமை (இன்று) தாக்கல் செய்­யு­மாறு நீதிவான் அறி­வு­றுத்­தினார். இதற்­க­மைய இன்­றைய தினம் இவ்­வ­ழக்கு விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­படும் என்றும் இம்­மா­ண­வர்கள் சிறு அப­ரா­தத்­துடன் விடு­விக்­கப்­ப­டலாம் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இதே­வேளை நேற்­றைய தினம் இந்த விவ­காரம் தொடர்பில் கைது செய்­யப்­பட்­டுள்ள மாண­வர்­களின் உற­வி­னர்கள் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் மற்றும் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகி­யோரைச் சந்தித்து மாணவர்களின் விடுதலைக்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.