பதிவு செய்யப்படாத முகவர்களூடாக ஹஜ், உம்ராவுக்கு செல்ல வேண்டாம்
பொதுமக்களுக்கு அரச ஹஜ் குழு வலியுறுத்து
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்து கொள்ளப்படாத எந்தவோர் ஹஜ், உம்ரா முகவர் நிலையங்களினூடாகவும் ஹஜ், உம்ரா பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என அரச ஹஜ் குழு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
திணைக்களத்தில் பதிவு செய்து கொண்டிராத போலி ஹஜ், உம்ரா முகவர்கள் ஊடாக பயணங்களை மேற்கொண்ட பயணிகள் இம்முகவர் நிலையங்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகளைச் செய்துள்ளதனாலே இவ் அறிவுறுத்தல் விடுக்கப்படுவதாக அரச ஹஜ் குழுவின் தலைவர் எம்.ரி. சியாத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்;
திணைக்களத்தில் பதிவு செய்யப்படாத முகவர் நிலையங்கள் ஊடாக பயணங்களை மேற்கொள்பவர்கள் தொடர்பில் திணைக்களமோ ஹஜ் குழுவோ எந்தப் பொறுப்பினையும் ஏற்காது. அவ்வாறான முறைப்பாடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதிலும் பிரச்சினைகள் உருவாகும்.
எனவே பயணிகள் பதிவு செய்யப்பட்ட முகவர் நிலையங்களினூடாகவே பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
-Vidivelli