பழைய முறைமையில் என்றாலும் மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்கு ஒத்துழைக்க தயார்

சட்டத்தரணிகள் சங்க பிரதிநிதிகளிடம் மஹிந்த தெரிவிப்பு

0 624

ஜன­நா­ய­கத்­திற்கு மதிப்­ப­ளித்து பழைய முறை­மை­யி­லேனும் மாகாண சபைத் தேர்­தலை நடத்­து­வ­தற்கு ஆத­ர­வ­ளிக்கத் தயா­ரா­வுள்­ள­தாக தெரி­வித்­துள்ள எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ, உரிய காலத்தில் தேர்­தல்கள் நடத்­தப்­ப­டு­மென்று மக்­க­ளுக்கு வாக்­கு­று­தி­ய­ளித்து, ஆட்­சியைக் கைப்­பற்­றி­யதன் பின்னர் அவர்­களை அர­சாங்கம் ஏமாற்­றி­யுள்­ளது எனவும் தெரி­வித்­துள்ளார்.

சட்­டத்­த­ர­ணிகள் சங்க பிர­தி­நி­திகள் நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை விஜே­ராம மாவத்­தையில் அமைந்­துள்ள எதிர்க்­கட்சித் தலை­வரின் உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்தில் அவரை சந்­தித்­தி­ருந்­தனர். இந்த சந்­திப்­பின்­போதே மஹிந்த ராஜபக் ஷ இதனைத் தெரி­வித்­துள்ளார்.

இந்த சந்­திப்­பின்­போது தொடர்ந்தும் கருத்து தெரி­வித்த அவர்,

புதிய முறை­மையில் தேர்தல் நடத்­தப்­பட்டால் எதிர்க்­கட்­சிக்கு நன்மை கிடைத்­தாலும், கிடைக்­கா­விட்­டாலும் அது குறித்து சிந்­திக்­காது, ஜன­நா­ய­கத்­திற்கு மதிப்­ப­ளித்து பழைய முறை­மை­யி­லேனும் தேர்தல் நடத்­தப்­ப­டு­மானால் அதற்கு நாம் இணங்­குவோம். எந்த முறை­மையில் தேர்­தலை நடத்த வேண்டும் என்­ப­தை­விட தேர்தல் நடை­பெற வேண்­டி­யது முக்­கி­ய­மாகும்.

நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்து,  தமது பிர­தான குறிக்கோள் தேர்­தல்­களை உரிய காலத்தில் நடத்­து­வது எனத் தெரி­வித்­தது. தற்­போது ஆட்­சிக்கு வந்­ததன் பின்னர்  நல்­லாட்சி அர­சாங்­கமே தேர்­தலை காலம் தாழ்த்தி மக்­களின் நம்­பிக்­கையை இழந்­துள்­ள­தோடு, மக்­களின் எதிர்­பார்ப்­புக்­க­ளையும் நிறை­வேற்­றாது அவர்­களை ஏமாற்­றி­யுள்­ளது என்றார்.

சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்­தினால் மாகாண சபைத் தேர்­தல்கள் உரிய காலத்தில் நடத்­தப்­பட வேண்டும் என்­பதை வலி­யு­றுத்தி உயர் நீதி­மன்­றத்தில் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள நிலையில், அதற்கு மஹிந்த ராஜபக் ஷவின் ஆத­ர­வினை தாம் எதிர்பார்ப்பதாக இந்த சந்திப்பில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் கூறினர். அத்தோடு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான ஆவணப் பிரதிகளும் மஹிந்த ராஜபக் ஷவிடம் கையளிக்கப்பட்டன.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.