பொறுப்புடன் செயற்படுங்கள்; இந்தியா- பாகிஸ்தானிடம் இலங்கை கோரிக்கை

பாகிஸ்தானுக்கான விமான சேவையும் இரத்து

0 612

ஒட்டுமொத்த பிராந்­தி­யத்தின் பாது­காப்பு, சமா­தானம் மற்றும் ஸ்திரத்­தன்மை ஆகி­ய­வற்றை உறு­தி­செய்­யக்­கூ­டிய முறை­யில் செயற்­ப­டு­மாறு இந்­தியா மற்றும் பாகிஸ்­தா­னிடம் இலங்கை வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. வெளி­நாட்டு அலு­வல்கள் அமைச்சு நேற்று  வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே இந்த வேண்­டு­கோளை முன்­வைத்­துள்­ளது.

குறித்த அறிக்­கையில், இந்­திய புல்­வாமா பகு­தியில் மத்­திய ரிசேர்வ் பொலிஸ் படை பாது­காப்பு அணி மீது நடாத்­தப்­பட்ட கொடூ­ர­மான பயங்­க­ர­வாத தாக்­கு­தலைத் தொடர்ந்து இடம்­பெற்­று­வரும் சமீ­பத்­திய முரண்­பா­டுகள் தொடர்பில் இலங்­கை­யா­னது ஆழ்ந்த கவ­லை­ய­டை­கின்­றது.

இலங்­கை­யா­னது, கிட்­டத்­தட்ட மூன்று தசாப்­த­கால கொடூ­ர­மான பயங்­க­ர­வா­தத்தில் பாதிக்­கப்­பட்ட நாடு என்ற வகையில் புல்­வா­மாவில் இடம்­பெற்ற இந்த பயங்­க­ர­வாத தாக்­கு­தலை தெளி­வாக கண்­டிப்­ப­துடன் பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான அதன் எல்லா தோற்­றங்கள் மற்றும் வடி­வங்­க­ளுக்கு எதி­ராக உறு­தி­யுடன் நிற்­கின்­றது.

இலங்­கை­யா­னது தென்-­னா­சிய பிராந்­தி­யத்தில் சமா­தனம் மற்றும் ஸ்திரத்­தன்மை ஆகி­ய­வற்றை கட்­டி­யெ­ழுப்­பவும், கலந்­து­ரை­யாடல் மற்றும் நம்­பிக்கையை கட்­டி­யெ­ழுப்பல் ஆகி­ய­வற்றின் ஊடாக இரு­த­ரப்பு பிரச்­சி­னை­களை தீர்த்தல் உட்­பட, பதற்­றத்தை தணித்தல் தொடர்பில் அனைத்து முயற்­சி­க­ளுக்கும் வலு­வான ஆத­ரவை தெரி­விக்­கின்­றது.

இந்த சூழ்­நி­லையில், ஒட்டு மொத்த பிராந்­தி­யத்தின் பாது­காப்பு, சமா­தானம் மற்றும் ஸ்திரத்­தன்மை ஆகி­ய­வற்றை உறு­தி­செய்­யக்­கூ­டிய முறை­யிலும் செயற்­ப­டு­மாறு இந்­தியா மற்றும் பாகிஸ்­தா­னிடம் இலங்கை வேண்­டுகோள் விடுக்­கின்­றது என குறித்த அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

விமான சேவைகள் இரத்து

இதே­வேளை பாகிஸ்­தானின் கராச்சி மற்றும் லாஹூர் விமான நிலை­யங்­க­ளுக்­கான விமா­னங்கள் நேற்று முதல் இரத்துச் செய்­யப்­ப­டு­வ­தாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கூறி­யுள்­ளது.

பாகிஸ்­தானின் வான்­ப­ரப்பில் விமா­னங்கள் பய­ணிக்க அந்த நாட்டு விமானப் போக்­கு­வ­ரத்து அதி­கா­ரிகள் தடை விதித்­துள்­ளதால் இந்த விமானப் பய­ணங்கள் இரத்து செய்­யப்­பட்­டுள்­ளன.

இந்­திய மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு­நா­டு­க­ளுக்­கி­டையில் பதற்றம் அதி­க­ரித்­துள்ள நிலையில் பாகிஸ்தான் அதி­கா­ரிகள் இந்­ந­ட­வ­டிக்­கையை எடுத்­துள்­ளனர்.

இந்­திய விமானப் படை நேற்று முன்­தினம் பாகிஸ்தான் வான்பரப்பில் ஊடுருவி பாகிஸ்தானின் சில பகுதிகளில் நடத்திய தாக்குதலுக்கு பதிலாக இந்தியாவின் இரண்டு போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியுள்ளதைத் தொடர்ந்து அங்கு பதற்ற நிலை தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-விடிவெள்ளி

Leave A Reply

Your email address will not be published.