மாவனெல்லை – வணாத்தவில்லு விவகாரம்: வெடிபொருட்கள் எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட வேன் சிக்கியது

0 798

மாவ­னெல்­லை­யி­லி­ருந்து எம்.எப்.எம்.பஸீர்

கண்டி மற்றும் மாவ­னெல்லை ஆகிய பிர­தான நக­ரங்­களை அண்­மித்த பகு­தி­களில் ஒரே இரவில்  நான்கு இடங்­களில் புத்தர் சிலைகள் அடித்து சேத­மாக்­கப்­பட்ட  விசா­ர­ணை­களில் ஓர் அங்­க­மாக புத்­தளம் – வணாத்­த­வில்லு பகு­தியில் பெருந்­தொகை வெடி­பொ­ருட்கள் சி.ஐ.டி.யினரால் மீட்­கப்­பட்­டன. இந்த வெடி­பொ­ருட்­களை வணாத்­த­வில்லு – லக்டோ தென்­னந்­தோப்­புக்கு எடுத்துச் செல்லப் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாகக் கூறப்­படும்  என்.டப்­ளியூ. பி.ஏ. 2855 எனும் வெள்ளை வேனை சி.ஐ.டி.யினர் கைப்­பற்­றி­யுள்­ளனர். வெடி­பொருள் கடத்­தலின் பின்னர் குறித்த வேன்  கடந்த ஜன­வரி 20 ஆம் திகதி பிறி­தொ­ரு­வ­ருக்கு விற்­பனை செய்­யப்­பட்­டி­ருந்த நிலையில், கெக்­கு­னு­கொல்ல பகு­தியில் வைத்து சி.ஐ.டியி­னரால் கைப்­பற்­றப்­பட்­ட­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவின் விஷேட விசா­ரணை அறை உப பொலிஸ் பரி­சோ­தகர் டயஸ் மாவ­னெல்லை நீதிவான் உபுல் ராஜ­க­ரு­ணா­வுக்கு நேற்று அறி­வித்தார்.

அத்­துடன் குறித்த வேனை அரச இர­சா­யன பகுப்­பாய்­வுக்கு உட்­ப­டுத்­தவும் இதன்­போது அவர் நீதி­வா­னிடம் அனு­மதி பெற்­றுக்­கொண்டார்.

புத்தர் சிலை உடைப்பு விவ­காரம் குறித்த வழக்கு  நேற்று விசா­ர­ணைக்கு வந்­தது. இதன்­போது மாவ­னெல்லை பொலிஸ் நிலை­யத்தின் பொலிஸ் பரி­சோ­தகர் ரண­சிங்க மற்றும் சி.ஐ.டி.யின் உப­பொலிஸ் பரி­சோ­தகர் டயஸ் உள்­ளிட்ட குழு­வினர் விசா­ர­ணை­யா­ளர்கள் சார்பில் ஆஜ­ரா­கினர்.

முதலில் நேற்று வழக்கு விசா­ர­ணைக்கு வந்­த­போது, சி.ஐ.டி. தடுப்புக் காவ­லி­லுள்ள வணாத்­த­வில்­லுவில் வைத்து கைது செய்­யப்­பட்ட  4 சந்­தேக நபர்­க­ளான மொஹம்மட் ஹனீபா முபீன், மொஹம்மட் ஹமாஸ், மொஹம்மட் நக்பி, மொஹம்மட் நளீம் ஆகியோர் மன்றில் ஆஜர் செய்­யப்­ப­ட­வில்லை. அவர்கள் தடுப்புக் காவலில் வைத்து விசா­ரிக்­கப்­ப­டு­வதால் இவ்­வாறு ஆஜர் செய்­யப்­ப­ட­வில்லை.  எனினும்  விளக்­க­ம­றி­யலில் உள்ள பெண் ஒருவர் உள்­ளிட்ட 13 சந்­தேக நபர்­களில் 12 பேர் மட்­டுமே மன்றில் ஆஜர் செய்­யப்­பட்­டனர். ஐந்­தா­வது சந்­தேக நபர், அம்மை நோய் கார­ண­மாக வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெறு­வ­தாக சிறை அதி­கா­ரிகள் நீதி­மன்­றுக்கு அறி­வித்­தனர்.

இத­னை­ய­டுத்து மேல­திக விசா­ரணை அறிக்­கையை முதலில் சமர்ப்­பித்த மாவ­னெல்லை பொலிஸ் நிலை­யத்தின் பொலிஸ் பரி­சோ­தகர் ரண­சிங்க, தாம் முன்­னெ­டுக்கும் அனைத்து விசா­ர­ணை­க­ளையும் சி.ஐ.டி.யிடம் இன்று முதல் (நேற்று) கைய­ளிப்­ப­தாக அறி­வித்தார்.

இந்­நி­லையில் குற்­ற­வியல் சட்­டத்தின் 125 ஆம் அத்­தி­யா­யத்தின் கீழ் விசா­ர­ணை­களை சம்­பூ­ர­ண­மாகப் பொறுப்­பேற்ற சி.ஐ.டி. அச்­சட்­டத்தின் 124 ஆம் அத்­தி­யா­யத்தின் கீழ் விசா­ர­ணை­க­ளுக்­கான உத்­த­ர­வு­க­ளையும் பெற்­றுக்­கொண்­டது.

இதன்­போது மன்­றுக்கு விசா­ர­ணை­களை தெளி­வு­ப­டுத்­திய சி.ஐ.டி., இந்த விவ­கா­ரத்தின் பிர­தான இரு சந்­தேக நபர்­க­ளாக கரு­தப்­படும் (சாதிக் அப்­துல்லா, சாஹித் அப்­துல்லா) இரு­வ­ரையும் தேடி விசா­ர­ணைகள் தொடர்­வ­தாக சுட்­டிக்­காட்­டி­யது. அவர்கள் இருப்­பி­டங்­களை விட்டு தலை­ம­றை­வாகி, அடிக்­கடி ஒவ்­வொரு இடங்­க­ளுக்கு மாறிக்­கொண்­டி­ருப்­ப­தாகத் தகவல் கிடைத்­துள்­ள­தா­கவும் அதனை மைய­ப்ப­டுத்தி விசா­ர­ணைகள் தொடர்­வ­தா­கவும்  சி.ஐ.டி. தெரி­வித்­தது.

அத்­துடன் கைதாகி விளக்­க­ம­றி­ய­லி­லுள்ள சந்­தேக நபர்கள் பிர­தான சந்­தேக நபர் தொடர்பில் தக­வல்­களை அறிந்­தி­ருந்தும் அவர்கள் மறைப்­ப­தாக சி.ஐ.டி. குறிப்­பிட்­டது.

இந்­நி­லையில்  சிறைச்­சா­லையில் வைத்து முதல் நான்கு சந்­தேக நபர்­க­ளிடம் மட்டும் மேல­திக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் சி.ஐ.டி.யின் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் டயஸ் நீதி­வா­னுக்கு கூறினார்.

இதன்­போது முதல் நான்கு சந்­தேக நபர்கள் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி, தமது சேவை பெறுநர் சி.ஐ.டி.யினரின் விசா­ர­ணையின் போது அச்­சு­றுத்­தப்ப்ட்­ட­தா­கவும் தாக்­கப்­பட்­ட­தா­கவும் குற்றம் சுமத்­தினார்.  சிறைச்­சாலை அதி­கா­ரியின் நேரடிக் கட்­டுப்­பாட்டில் விசா­ரணை செய்­யவே நீதி­மன்றம் அனு­ம­தித்­த­தா­கவும் எனினும், தமது சேவை பெறு­நர்கள் விசா­ர­ணை­களின் போது, சி.ஐ.டி. அதி­கா­ரி­களால் அச்­சு­றுத்­தப்படுள்­ளமை நியா­ய­மான விசா­ர­ணைகள் தொடர்பில் கேள்வி எழு­வ­தாக  அந்த சட்­டத்­த­ரணி சுட்­டிக்­க­ட­டினார்.

பிர­தான இரு சந்­தேக நபர்­களை கடந்த மூன்று மாதங்­க­ளாகப் பிடிக்­காமல்  கைதா­கி­யுள்ள இவர்கள் மேல் முழுப் பழி­யையும் சுமத்த சி.ஐ.டி. முயற்­சிப்­ப­தாக அவர் கூறினார்.

‘பிர­தான சந்­தேக நபர்­களை கைது­செய்ய சி.ஐ.டி. என்ன விசா­ர­ணை­களை நடாத்­தி­யது.  அவர்கள் இருப்­பி­டங்­களை மாற்றி மாற்றி வரு­வ­தாகக் கூறு­கின்­றனர். அது தொடர்பில் விசா­ரித்­தார்­களா? அவர்கள் செல்லும் வாக­னங்­க­ளை­யேனும் கைப்­பற்­றி­னரா? எவையும் நடக்­க­வில்லை’ என அந்த சட்­டத்­த­ரணி பிர­தான சந்­தேக நபர்கள் தொடர்பில் முன்­னெ­டுக்­க­பப்டும் விசா­ர­ணை­களின் மந்­த­கதி தொடர்பில் அதி­ருப்தி வெளி­யிட்டார்.

எவ்­வா­றா­யினும் விசா­ர­ணை­களின் போது சந்­தேக நபர்­களை அச்­சு­றுத்­தி­ய­தாக முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்டை சி.ஐ.டி. மறுத்­தது. பாதிக்­கப்­பட்ட தரப்­பினர் சார்பில் மாவ­னெல்லை நீதி­மன்றின்  சட்­டத்­த­ர­ணிகள் அனை­வரும் முன்­னி­லை­யா­காத நிலையில்,  விசா­ர­ணை­களின் போது அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டி­ருப்பின் சிறைச்­சா­லைகள் சட்­டத்தின் பிர­காரம் சிறை அத்­தி­யட்­சகர், ஆணை­யா­ள­ரிடம் முறை­யி­ட­லா­மென அவர்கள் சுட்­டிக்­க­ட­டினர்.

எனினும் அவ்­வாறு எந்த முறைப்­பாடும் நேற்­று­வரை கிடைக்­க­வில்­லை­யென சிறை அதி­காரி ஒருவர் நீதி­வா­னுக்கு தெரி­வித்தார்.

இத­னை­ய­டுத்து, பிர­தான சந்­தேக நப­ராகக் கருதித் தேடப்­படும் சாதிக் அப்­துல்லா, சாஹித் அப்­துல்லா ஆகிய சகோ­த­ரர்­க­ளுக்கு தங்க இட­ம­ளித்­த­தாக கூறி மாவ­னெல்லை பொலி­ஸாரால் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் கம்­பொளை – உலப்­பனை பகு­தியைச் சேர்ந்த பெண் ஒருவர் உள்­ளிட்ட இருவர் கைது செய்­யப்­பட்­டி­ருந்த நிலையில் அவர்கள் சார்பில் சட்­டத்­த­ரணி தெஹ்லான் ஆஜ­ரானார். அவர், குறித்த பெண்­ணை­யேனும் பிணையில் விடு­விக்­கு­மாறும்,. இந்தக் குற்­றங்கள் தொடர்­பிலோ அதனைச் செய்த பிர­தான சந்­தேக நபர்கள் தொடர்­பிலோ  குறித்த பெண் எத­னையும் அறிந்­தி­ருக்­க­வில்லை என சுட்­டிக்­காட்டி வாதிட்டார்.  அதனால் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் அவ­ருக்கு எதி­ராக சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்டு நியா­ய­மற்­றது எனவும் கூறினார்.

எனினும், முன்­வைக்­கப்­பட்ட அனைத்து விட­யங்­க­ளையும் ஆராய்ந்த நீதிவான்  அவற்றை பதிவு செய்­து­கொள்­வ­தாக அறி­வித்­த­துடன், குறித்த பெண்­ணுக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்கள் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் 3 (ஆ) பிரிவின் கீழ் உள்­ளதால் தனக்கு பிணை­ய­ளிக்கும் அதி­காரம் இல்லை என சுட்­டிக்காட்டி பிணை விண்­ணப்­பத்தை நிரா­க­ரித்தார்.

அதன்­படி அக்தாப், முப்தி, முனீப், இர்ஷாத், அஸீஸ், முஹம்மட் பெளஸான்,  முஸ்­தபா மொஹம்மட் பயாஸ், பயாஸ் அஹமட்,  மொஹம்மட் இப்­ராஹீம், ஆகில் அஹமட், அப்துல் ஜப்பார் பதுர்தீன், சித்தி நஸீரா இஸ்­ஸதீன் ஆகிய 13 பேரையும் எதிர்­வரும் மார்ச் 13 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க நீதிவான் உத்­த­ர­விட்டார்.

கடந்த 2018 டிசம்பர் 25 ஆம் திகதி அதி­காலை நேரத்தில் குரு­நாகல் மாவட்டம் பொது­ஹர பொலிஸ் பிரிவின் கட்­டு­பிட்­டிய வீதியில்  கோண்­வல பகு­தியில் அமை­யப்­பெற்­றுள்ள ஆலயம் ஒன்றில் இந்து கட­வுள்­களைக் குறிக்கும் உரு­வச்­சி­லைகள் அடை­யாளம் தெரி­யா­தோரால் அடித்து நொறுக்கி சேத­மாக்­கப்­பட்­டன.  இந்த சம்­பவம் தொடர்பில் பொது­ஹர பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தி­ருந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் அதா­வது, கடந்த 2018 டிசம்பர் 26 ஆம் திகதி இத­னை­யொத்த ஒரு சம்­பவம் யட்­டி­நு­வர – வெலம்­பட  பொலிஸ் பிரிவில் பதி­வா­னது.

அதி­காலை 3.00 மணி­ய­ளவில் வெலம்­பட பொலிஸ் பிரிவின் லெயம்­க­ஹ­வல பகு­தியில் மூன்­றரை அடி உய­ர­மான புத்தர் சிலை அடை­யாளம் தெரி­யா­தோரின் தாக்­கு­த­லுக்­குள்­ளா­னது. அத்­துடன் அந்த மூன்­றரை அடி உய­ர­மான புத்தர் சிலை சேதப்­ப­டுத்­தப்­படும் அதே­நேரம் அதனை அண்­டிய பகுதியில் இருந்த மேலும் மூன்று சிறு சிலைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில்  அதேதினம்  அதிகாலை 4.00 மனியளவில்  மாவனெல்லை – திதுருவத்த சந்தியிலுள்ள புத்தர் சிலையும் தாக்கி  சேதபப்டுத்தப்பட்டுள்ளது. இதன்போதுதான் இந்த சிலை உடைப்பு விவகாரத்தில் அல்லது இவ்வருவருக்கத்தக்க சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தடயமும் கிடைத்திருந்தது.

திதுருவத்த சந்தியில் புத்தர் சிலையை தாக்க  மோட்டார் சைக்கிளில்  இருவர் வந்துள்ளனர். இவ்வாறு வந்ததாகக் கூறப்படும் இருவரில் ஒருவரை பிரதேசவாசிகள் துரத்திப் பிடித்து மாவனெல்லை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அது முதல் இது குறித்த விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையிலேயே தற்போது அவ்விடயத்தில் பல அதிர்ச்சியளிக்கும் விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-விடிவெள்ளி

Leave A Reply

Your email address will not be published.