அதிகளவு மாணவர்களை பல்கலைக்கழகம் செல்ல வழிவகுக்கும் பாடசாலைகளுக்கு உதவி

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவிப்பு

0 676

மாண­வர்கள் சிறந்த கல்விப் பெறு­பே­று­க­ளையும் அதி­க­ளவு மாண­வர்­களை பல்­க­லைக்­க­ழகம் செல்­வ­தற்கும்  வழி­வகை செய்யும் பாட­சா­லைக­ளுக்கு தங்கு தடை­யின்றி  தேவை­யான அனைத்து வளங்­க­ளையும் நாங்கள் வழங்கி வரு­கின்றோம். இப்­ப­டி­யான எங்­க­ளு­டைய பங்­க­ளிப்­புக்­க­ளுடன் வடமேல் மாகாணம் க.பொ.த. உயர்தரப் பெறு­பே­று­களின் மதிப்­பீட்டு அடிப்­ப­டையில் தற்­போது இரண்டு வரு­டங்­க­ளாக இரண்டாம் நிலையில் திகழ்­கி­றது. இதற்­கான முக்­கிய காரணம் கெகு­ணு­கொல்ல தேசிய பாட­சா­லை­யாகும் என்று கல்வி அமைச்சர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்தார்

கெகு­ணு­கொல்ல தேசிய பாட­ச­லையில்  ரூபா 25 மில்­லியன் செலவில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட வகுப்­பறைக் கட்­டிடத் தொகு­தியும் இப்­பா­ட­ச­லையில் கட­மை­யாற்றி விட்டு ஓய்வு பெற்றுச் சென்ற அதிபர் எம். டி. முஸம்­மிரை பாராட்டி கௌர­விக்கும் நிகழ்வும் பாட­சா­லையின் கேட்போர் கூடத்தில் அதிபர் எம். ஆர். சித்தீக் தலை­மையில் இடம்­பெற்­றது. இந்­நி­கழ்வில் பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொண்ட கல்வி அமைச்சர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் இவ்­வாறு இதனைத் தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசு­கையில்

கடந்த 2014 ஆம் ஆண்டு க. பொ. த உயர்தரப் பெறு­பே­று­களின் மதிப்­பீட்டு அடிப்­ப­டையில் வடமேல் மாகாணம் எட்டாம் இடத்தில் இருந்­தது. அது தற்­போது இரண்டு வரு­டங்­க­ளாக இரண்டாம் இடத்­திற்குத் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளது. அதுவும் தசம் கணக்கில் தான் இரண்டாம் நிலையை அடைந்­துள்­ளது. அதற்­கான முதன்­மை­யான காரணம் கெகு­ணு­கொல்ல  தேசிய பா­ட­சா­லையின் அதிபர் ஆவர். கெகு­ணு­கொல்ல முஸ்லிம் பாட­சா­லைக்கு குரு­நாகல் மாவட்­டத்தில் ஏனைய பாட­சா­லை­க­ளுக்கு வழங்­காத அதி சொகுசு கதி­ரைகள் கேட்போர் கூடத்­திற்கு வழங்­கி­யி­ருக்­கின்றோம்.

அதே­போன்று அரு­கி­லுள்ள பாட­சா­லை­க­ளுக்கு விஞ்­ஞானம் மற்றும் ஏனைய பாடங்­க­ளுக்கு ஆசி­ரியர் வெற்­றிடங்கள் நில­விய போதிலும்  அவற்­றை­யெல்லாம் கடந்து தம் பாட­சா­லைக்கு ஆசி­ரி­யர்­க­ளையும் வளங்­க­ளையும் பெற்றுக் கொள்­ளு­கின்ற நிர்­வாகத் திறன் அப்­பா­ட­சாலை  அதி­ப­ருக்கு இருக்­கி­றது. இப்­ப­டிப்­பட்ட ஆளுமைத் திறன் கொண்ட அதிபர் ஒரு­வரை நான் காண­வில்லை. இந்த அதிபர் கட­மை­யாற்றும் பாட­சா­லைதான் பெரு எண்­ணிக்­கை­யி­லான மாண­வர்­களை பல்­க­லைக்­க­ழகம் நுழைவு அனு­ம­திக்­கான வசதி வாய்ப்­புக்­களை ஏற்­ப­டுத்திக் கொடுக்­கின்ற பாட­சா­லை­யாகும். அதிபர் முஸம்மிர் ஓய்வு பெற்­றாலும் அவர் சமூக சேவையில் இருந்து ஓய்வு பெற மாட்டார் என்று நான் நம்புகின்றேன் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர்  எஸ். சஹாப்தீன், தொழிலதிபர் முஸ்லிம் சலாஹுதீன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.