இவ்வருடம் ஹஜ்கடமையை மேற்கொள்வதற்காக முஸ்லிம் சமய, கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்டுள்ள ஹஜ் விண்ணப்பதாரிகள் குறுந்தகவல்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
13282 வரையிலான பதிவிலக்கங்களைக் கொண்ட விண்ணப்பதாரிகள் இவ்வருட ஹாஜ் கடமைக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய, கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தெரிவு செய்யப்பட்டுள்ள ஹஜ் விண்ணப்பதாரிகளுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு, பயணத்தை உறுதி செய்யும் கடிதங்களைக் கையளிக்கும் நிகழ்வும் நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஹஜ் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கும், ஹஜ் பயணத்தை உறுதி செய்யும் கடிதங்கள் வழங்கும் நிகழ்வும் பின்வருமாறு திட்டமிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் 2 ஆம் திகதி காலை 9 மணிக்கு கிண்ணியா– வாசிகசாலை மண்டபம் மற்றும் காலை 9 மணிக்கு அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல். பிற்பகல் 3 மணிக்கு காத்தான்குடி – ஹிஸ்புல்லாஹ் கலாசார நிலையம். மற்றும் கல்முனை –மஹ்மூத் மகளிர் வித்தியாலயம்.
மார்ச் 3 ஆம் திகதி காலை 9 மணிக்கு சம்மாந்துறை– அப்துல் மஜீத் நகர மண்டபம்.
மார்ச் 9 ஆம் திகதி காலை 10 மணிக்கு குருநாகல்– சாஹிரா கல்லூரி. காலை 10 மணி மாவனெல்லை ராலியா வரவேற்பு மண்டபம். பிற்பகல் 3 மணி புத்தளம் பிரதேச செயலாளர் காரியாலய மண்டபம். பிற்பகல் 3 மணி மடவளை மதீனா தேசிய பாடசாலை.
மார்ச் 14 ஆம் திகதி காலை 9.30 முதல் பிற்பகல் 3 மணிவரை, கொழும்பு மாவட்டம்– தபால் மத்திய நிலையம் கேட்போர் கூடம்.
மார்ச் 17 ஆம் திகதி காலி, மாத்தறை, வெலிகம அரபா தேசிய பாடசாலை. பிற்பகல் 4 மணி பேருவளை ஹுமைசரா தேசிய பாடசாலை.
(மாற்றங்களுக்கு இடமுண்டு.)