ஈராக் – பலூஜாவின் வீதியோர குண்டு வெடிப்பில் மூவர் பலி

0 561

ஈராக்கின் மேற்கு நக­ரான பலூ­ஜாவில் கடந்த செவ்வாய்க் கிழ­மை­யன்று இடம்­பெற்ற வீதி­யோர குண்டு வெடிப்பில் மூன்று ஈராக்­கியப் பணி­யா­ளர்கள் கொல்­லப்­பட்­ட­தாக உள்ளூர் பொலிஸ் அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்தார்.

பலூ­ஜா­வுக்கு மேற்கே நைமியா மாவட்­டத்தில் பணி­யா­ளர்­களை ஏற்­றிக்­கொண்டு வாக­ன­மொன்று வந்து கொண்­டி­ருந்த போது இக்குண்டு வெடித்­துள்­ளது. இதன்­போது மூன்று பணி­யா­ளர்கள் கொல்­லப்­பட்­ட­தோடு மேலும் மூவர் காய­ம­டைந்­தனர் என பொலிஸ் தலை­மை­ய­தி­காரி அஹ்மட் அல்-­து­லைமி தெரி­வித்தார்.

ஐ.எஸ். கிளர்ச்சி அமைப்­பினர் இங்கு செயற்­பட்டு வரு­கின்­றனர். அவர்கள் அவ்­வப்­போது பொது­மக்கள் மீதும் பாது­காப்புப் படை­யினர் மீதும் தாக்­கு­தல்­களை நடத்தி வரு­கின்­றனர் எனவும் அல்-­து­லைமி தெரி­வித்தார்.

ஐ.எஸ். அமைப்பின் இறு­தி­யான பெரிய கட்­டுப்­பாட்டுப் பிர­தே­ச­மாக இருந்த மௌசூல் வீழ்ச்­சி­ய­டைந்­த­தோடு மூன்று வருட யுத்தம் முடி­வுக்கு வந்­த­தை­ய­டுத்து பயங்­க­ர­வாத ஐ.எஸ். அமைப்பு தோற்­க­டிக்­கப்­பட்­ட­தாக 2017 ஆம் அண்டின் பிற்­ப­கு­தியில் பக்தாத் பிர­க­டனம் செய்­தது.

எனினும், ஈராக்­கிய இரா­ணு­வத்­தினர் ஐ.எஸ். அமைப்பின் எஞ்­சிய பிரி­வி­னரை இலக்கு வைத்து தாக்­கு­தல்­களை தொடர்ந்து நடத்தி வரும் அதேவேளை நாட்டின் சில பகுதிகளில் ஐ.எஸ். அமைப்பினர் வீரியததோடு காணப்படுவதாக சில அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.