சாய்ந்தமருது தனி உள்ளூராட்சி சபை விவகாரம்: கலந்துரையாடலின் பின் தீர்மானம்

அமைச்சர் வஜிரவின் தலைமையில் ஹக்கீம், ரிசாத், ஹரீஸ் உள்ளிட்டோர் அடங்கிய விேசட குழு நியமனம்

0 708

சாய்ந்­த­ம­ரு­து­வுக்கு தனி­யான உள்­ளூ­ராட்சி மன்றம் ஒன்று நிறு­வு­வது தொடர்பில் அனைத்து இன மக்­க­ளு­டனும் கலந்­து­ரை­யாடி விரைவில் தீர்க்­க­மான முடி­வொன்று எட்­டப்­படும். இது தொடர்பில் பல கருத்­துக்கள், ஆலோ­ச­னைகள் முன்­வைக்­கப்­ப­டலாம். அனைத்து கருத்­துக்­களும் கவ­னத்தில் கொள்­ளப்­படும் என மாகாண சபைகள் உள்­ளூ­ராட்சி அமைச்சர் வஜிர அபே­வர்­தன தெரி­வித்தார்.

சாய்ந்­த­ம­ரு­து­வுக்கு தனி­யான உள்­ளூ­ராட்சி மன்றம் பெற்றுக் கொடுப்­பது தொடர்­பான கலந்­து­ரை­யா­ட­லொன்று நேற்று மாலை மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்­பெற்­றது.   அமைச்சர் வஜிர அபே­வர்­த­னவின் தலை­மையில் நடை­பெற்ற இக்­க­லந்­து­ரை­யா­டலில் அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதி­யுதீன், ïéÍmç«BV¦o[ …

மாகாண சபைகள் உள்­ளூ­ராட்சி இரா­ஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்றூப், பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நசீர், இஸ்மாயில் உள்ளிட்டடோரும் கலந்துக் கொண்­டி­ருந்­தனர்.

கலந்­து­ரை­யா­ட­லின்­போது அமைச்சர் வஜிர அபே­வர்­தன தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், புதி­தாக உள்­ளூ­ராட்சி மன்­ற­மொன்று நிறு­வும்­போது உள்­ளூ­ராட்­சி­மன்ற சட்­டத்­தி­னையும் கவ­னத்திற் கொள்ள வேண்­டி­யுள்­ளது. இது தொடர்பில் அப்­ப­கு­தியை சேர்ந்த மக்கள் அனை­வரும். தெளி­வு­ப­டுத்­தப்­ப­டு­வார்கள். இதற்கு சில மாதங்கள் தேவைப்­படும். சாய்ந்­த­ம­ருது, கல்­முனை பிரச்­சி­னை­களை தீர்த்து வைப்­பது தொடர்பில் கட்சித் தலை­வர்­க­ளு­டனும் கலந்­து­ரை­யாடி இருக்­கிறேன். சிங்­க­ளவர், தமிழர், முஸ்லிம், பர்கர் என்று அனைத்து மக்­களின் கருத்­துக்­களும் ஆலோ­ச­னை­களும் பெற்றுக் கொள்­ளப்­படும் என்றார்.

இங்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் கருத்து தெரி­விக்­கையில் சாய்ந்­த­ம­ருது கல்­முனை பிரச்­சினை தொடர்பில் அனைத்து தரப்­பி­ன­ரு­டனும் கலந்­து­ரை­யாடி ஒரு தீர்க்­க­மான முடி­வுக்கு வர­வேண்டும் என்ற நிலைப்­பாட்­டி­லேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் இருப்­ப­தாகத் தெரி­வித்தார்.

அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் கருத்து தெரி­விக்­கையில், அமைச்சர் வஜிர அபே­வர்­த­ன­வுடன் நீண்ட நேரம் பேச்­சு­வார்த்தை நடத்­தினோம். இப்­பி­ர­தே­சத்தில் மக்கள் எதிர்­கா­லத்தில்  பிரச்­சி­னைகள் இன்றி ஒற்­று­மை­யாக வாழும் வகையில் இப்­பி­ரச்­சினை தீர்க்­கப்­ப­ட­வேண்டும் என்­பதில் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் உறு­தி­யாக இருக்­கி­றது.இப்­பி­ரச்­சி­னைக்கு விரைவில் தீர்வு காணப்­பட வேண்டும் என்றார்.

இப்­பி­ரச்­சி­னையை தீர்ப்­ப­தற்­காக அமைச்சர் வஜிர அபே­வர்த்­தன தலை­மையில், இரா­ஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் உட்­பட அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்கீம், றிஷாத் பதி­யுதீன், அமைச்சின் செய­லாளர், கிழக்கு மாகாண பிர­தம செய­லாளர், அம்­பாறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அடங்­க­லாக விசேட உயர்­மட்ட குழு­வொன்று ஸ்தாபிக்­கப்­பட்­டது.

சாய்ந்­த­ம­ருது மக்கள் நீண்ட காலமாக தங்களுக்கென்று தனியான உள்ளூராட்சி மன்றமொன்றினைக் கோரி வருவது குறிப்பிடத்தக்கது. 2015 ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் சாய்ந்தமருதுவுக்கு சென்ற ரணில்விக்கிரமசிங்க தனியான உள்ளூராட்சி சபையை உருவாக்கித் தருவதாக உறுதியளித்திருந்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.