யெமன் போரால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு பிரித்­தா­னிய பிர­தமர் தெரேசா நிதி­யு­தவி

0 790

யெமன் உள்­நாட்டுப் போரால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு 200 மில்­லியன் பவுண் உதவி வழங்­கு­வ­தற்கு பிரித்­தா­னிய பிர­தமர் தெரேசா மே உறு­தி­ய­ளித்­துள்ளார்.

இந்த யுத்­தத்தால் ஏற்­பட்­டுள்ள நெருக்­கடி மற்றும் துன்பம் முடி­வுக்கு வர­வேண்டும் எனவும் எகிப்தில் இடம்­பெறும் அரே­பிய மற்றும் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் முத­லா­வது கூட்டு மாநாட்டில் கலந்து கொண்­டுள்ள மே அழைப்பு விடுத்­துள்ளார்.

யெமன் போர் குறித்து தொடர்ந்து பேசிய பிர­தமர் தெரேசா மே கூறி­ய­தா­வது, இவ்­வி­ட­யத்தில் எமது பங்கை நாம் செய்­துள்ளோம், தொடர்ந்தும் செய்வோம், ஆனால் சர்­வ­தேச சமூகம் இன்னும் கூடு­த­லாக உத­வி­செய்ய முன்­வ­ர­வேண்டும்.

யெமன் போரில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு அவ­சி­ய­மான உத­வியை வழங்­கு­வ­தற்கு இம்­மா­நாட்டில் எமது ஐரோப்­பிய கூட்­டா­ளி­க­ளுக்கும் நான் அழைப்பு விடுக்­க­வுள்ளேன்.

அர­சியல் தீர்­வொன்றைக் காண்­பது மாத்­தி­ரமே இந்தப் போரால் ஏற்­பட்­டுள்ள நெருக்­க­டியை முடி­வுக்கு கொண்டு வரு­வ­தற்­கான வழி­யாகும்.

கைதிகள் பரி­மாற்­றத்­துக்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­துடன் இரு­த­ரப்­பி­னரும் யுத்தநிறுத்த உடன்­ப­டிக்கை விதி­களை மதிக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

ஐக்­கிய நாடுகள் சபை­யினால் முன்­னெ­டுக்­கப்­படும் சமா­தானப் பேச்­சு­வார்த்தை நட­வ­டிக்­கை­க­ளுக்கு பிரித்­தா­னியா முழு ஆத­ர­வையும் வழங்கும் எனவும் பிரித்­தா­னிய பிர­தமர் உறு­தி­ய­ளித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.