புனித ஹஜ் – உம்ரா யாத்திரைகள் செல்வதற்காக கைவிரல் அடையாளத்தை உறுதிப்படுத்தும் கண்டி, கல்முனை நிலையங்கள் மூடும் நிலையில்

0 703

சவூதி அரே­பிய அர­சாங்­கத்தின் சட்­டத்தின் கீழ் இலங்­கை­யி­லி­ருந்து ஹஜ் மற்றும் உம்ரா பய­ணத்தை மேற்­கொள்­ப­வர்கள் தங்­க­ளது கைவிரல் அடை­யா­ளங்­களை உறு­திப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்டும். அதற்­கான நிலை­யங்கள் கொழும்பு மற்றும் கண்டி, கல்­முனை ஆகிய பகு­தி­களில் நிறு­வப்­பட்­டி­ருந்­தாலும் நாடெங்­கி­லு­மி­ருந்து ஹஜ், உம்ரா பய­ணிகள் தங்கள் கைவிரல் அடை­யா­ளங்­களை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தற்கு கொழும்­புக்கே வரு­கி­றார்கள். இதனால் இலங்­கை­யி­லுள்ள சவூதி தூத­ரகம் கண்டி, கல்­முனை கிளை நிலை­யங்­களை மூடி­வி­டு­வது பற்றி ஆலோ­சித்து வரு­கி­றது என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் தெரி­வித்தார்.

கண்டி, கல்­மு­னையில் இயங்­கி­வரும் நிலை­யங்­களில் மத்­திய மாகாணம் மற்றும் கிழக்கு மாகா­ணத்தைச் சேர்ந்த ஹஜ், உம்ரா பய­ணி­கள் கண்டி, கல்­முனை நிலை­யங்­க­ளிலே தங்­க­ளது கைவிரல் அடை­யா­ளங்­களை உறு­திப்­ப­டுத்திக் கொள்­ள­வேண்டும்.

முக­வர்­களும் இது தொடர்­பி­ல் பய­ணி­களை அறி­வு­றுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.

கொழும்பு வெள்­ள­வத்தை காலி வீதியில் அமைந்­துள்ள நிலை­யத்தில் பெரு­ம­ள­வி­லா­ன­வர்­க­ளுக்கு இட­வ­சதி, இருக்கை வசதி என்­பன இல்­லாமை தொடர்­பாக தெரி­விக்­கப்­பட்­டு­வரும் முறைப்­பா­டுகள் தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்­துத்­தெ­ரி­விக்­கையில் கைவிரல் அடை­யா­ளங்­களை உறு­திப்­ப­டுத்தும் சவூதி அரே­பி­யாவின் இலங்கை முக­வ­ராக  VFS TASHEEL SL (Pvt) Ltd Supun நிறு­வனம் செயற்­ப­டு­கி­றது. இது வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்­ளது. இங்கு பெரு­ம­ள­வி­லா­னோ­ருக்கு இட­வ­ச­தி­யற்­றது.

இத­னைக்­க­ருத்தில் கொண்டே இதன் கிளைகள் கண்­டி­யிலும் கல்­மு­னை­யிலும் அமைக்­கப்­பட்­டுள்­ளன. எனவே இப்­ப­கு­தியைச் சேர்ந்­த­வர்கள் அக்­கி­ளை­களின் சேவையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். கண்டி மற்றும் கல்முனை நிலையங்களில் ஹஜ், உம்ரா பயணிகள் சேவையைப்பெற்றுக்கொள் ளாதவிடத்து அந்நிலையங் களை மூடிவிடுவதாக சவூதி தூதரகம் தெரிவித்துள்ளது என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.