சவூதி அரேபியாவில் முதல் முறையாக பெண் ஒருவர் தூதுவராக நியமனம்

0 735

சவூதி அரே­பி­யாவின் அமெ­ரிக்கத் தூது­வ­ராக இள­வ­ரசி றீமா பிந்த் பந்தர் பின் சுல்தான் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

சவூதி அரே­பி­யா­வினால் தற்­போது அமெ­ரிக்கத் தூது­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ள இள­வ­ரசி றீமா பிந்த் பந்தர் பின் சுல்தான் நீண்ட கால­மாக அமெ­ரிக்கத் தூது­வ­ராகக் கட­மை­யாற்­றி­ய­வரின் மக­ளாவார்.

தனியார் துறையில் கட­மை­யாற்றி வந்த அவர் பின்னர் சவூதி அரே­பி­யாவின் பொது விளை­யாட்டு அதி­கார சபையில் இணைந்து கொண்டார். அங்கு விளை­யாட்­டுக்­களில் பெண்­களின் பங்­கு­பற்­று­தலில் அதிக ஆர்வம் காட்­டி­ய­தோடு அதில் வெற்­றியும் பெற்றார். பெண்­களை வலு­வூட்­டு­வது தொடர்பில் இவர் கூடிய கரி­சனை கொண்­டுள்ளார்.

இள­வ­ரசி றீமா அமெ­ரிக்கத் தூது­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­பது, சவூதி அரே­பி­யாவில் பெண்­க­ளுக்கு அதிக சுதந்­திரம் வழங்­கப்­பட வேண்டும் என்­பதன் ஆரம்­ப­மாகும். எனினும் சவூதி அரே­பி­யாவின் முக்­கிய பாது­காப்பு மற்றும் பொரு­ளா­தாரப் பங்­கா­ளி­யான அமெ­ரிக்­கா­வுடன் பதற்­ற­நிலை தீவி­ர­ம­டைந்­துள்­ளது.

சவூதி அரே­பிய முக­வர்­களால் மேற்கு நாடு­க­ளு­ட­னான உற­வு­களைச் சீர்­கு­லைக்கும் வகையில் கடந்த வருடம் ஊட­க­வி­ய­லாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்­யப்­பட்­ட­மை­யினால் உலகம் முழு­வ­திலும் இருந்து வந்த விமர்­ச­னங்­களை வெற்­றி­கொள்ளும் ஒரு முயற்­சி­யாக சவூதி அரே­பி­யா­வினால் இந்த நிய­மனம் வழங்­கப்­பட்­டுள்­ளது என சவூதி அரே­பிய உத்­தி­யோ­க­பூர்வ செய்­தித்­தா­பனம் தெரி­வித்­துள்­ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு தொடக்கம் அமெ­ரிக்கத் தூது­வ­ராகக் கட­மை­யாற்­றிய மொஹமட் பின் சல்­மானின் இளைய சகோ­த­ர­ரான இள­வ­ரசர் காலித் பின் சல்­மானின் இடத்­திற்கே இள­வ­ரசி றீமா பிந்த் பந்தர் பின் சுல்தான் நியமிக்கப்பட்டுள்ளார். இளவரசர் காலித் பின் சல்மான் தற்போது சவூதி அரேபியாவின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.