கட்டாரில் அமைந்துள்ள தலிபான்களின் அரசியல் பணிமனையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முல்லா அப்துல் கானி பராடார் ஐக்கிய நாடுகள் சபையின் பிரயாணத் தடைகள் நீக்கப்பட்டதன் பின்னர் தோஹாவை வந்தடைந்ததாக அமைப்பின் தலைவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
முல்லா பராடார் ஏனைய தலிபான் பேச்சுவார்த்தையாளர்கள் சகிதம் தோஹாவை வந்தடைந்ததாக கட்டாரிலுள்ள சிரேஷ்ட தலிபான் தலைவர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.
அமெரிக்காவுக்கும் தலிபானுக்கும் இடையே இடம்பெறும் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தையில் அவர் கலந்து கொள்வதா இல்லையா என்பது தொடர்பில் அவரே தீர்மானிப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் பேச்சுவார்த்தை நடத்தும் குழுவினை அறிவிக்கும் கூட்டத்தில் முல்லா பராடார் பேச்சுவார்ததையில் பங்குபற்றமாட்டார் என அறிவித்ததாகவும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அக்குழுவுக்கு அவர் அதிகாரமளித்துள்ளதாகவும் தலிபான் பேச்சாளர் ஸபீஹுல்லாஹ் முஜாஹித் தெரிவித்திருந்தார்.
-Vidivelli