பலஸ்தீன கைதிகளில் இஸ் ரேல் மருந்துகளைப் பரீட்சிக்கின்றது

பேரா­சி­ரி­யை­ நாதெரா ஊடகங்ளுக்கு தகவல்

0 543

அரபு மற்றும் பலஸ்­தீன கைதி­களில் மருந்­து­களைப் பரீட்­சிப்­ப­தற்கு மருந்­தாக்கல் நிறு­வ­னங்­க­ளுக்கு இஸ்ரேல் அதி­கா­ரிகள் அனு­மதி வழங்­கி­யுள்­ள­தாக கடந்த வியா­ழக்­கி­ழ­மை­யன்று இஸ்­ரே­லியப் பேரா­சி­ரி­யை­யான நாதெரா ஷல்­ஹெளப் வெவேக்­கியான் தெரி­வித்­த­தாக பெலிஸ்டீன் ஊடகம் தகவல் வெளி­யிட்­டுள்­ளது.

இஸ்­ரே­லிய இரா­ணுவ நிறு­வ­னங்கள் ஆயு­தங்­களை பலஸ்­தீனச் சிறுவர்கள் மீது பரீட்சிப்பதாகவும் இவ்வாறான சோதனைகளை ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட ஜெரூ­ச­லத்­திற்கு அரு­கி­லுள்ள பலஸ்­தீ­னத்தில் மேற்­கொள்­வ­த­கவும் ஹீப்ரு பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யா­ள­ரான அவர் தெரி­வித்தார்.

நியூயோர்க் நகரில் அமைந்­துள்ள கொலம்­பியா பல்­க­லைக்­க­ழ­கத்தில் உரை­யாற்­றிய ஷல்­ஹெளப் வெவேக்­கியான் ஹீப்ரு பல்­க­லைக்­க­ழ­கத்தில் ஆய்வுப் பணியில் ஈடு­பட்­டி­ருந்­த­வே­ளையில் தான் அந்தத் தர­வு­களைச் சேக­ரித்­த­தா­கவும் தெரி­வித்தார்.

பலஸ்­தீனப் பிர­தேசம் ஆய்­வு­கூ­ட­மா­கவே காணப்­ப­டு­கின்­றது எனத் தெரி­வித்த ஷல்­ஹெளப் வெவேக்­கியான், அரச ஆத­ர­வு­ட­னான பாது­காப்புக் கூட்­டுத்­தா­ப­னங்­களின் உற்­பத்­திகள் மற்றும் சேவை­களின் கண்­டு­பி­டிப்பு நீண்ட கால ஊர­டங்குச் சட்டம் மற்றும் இஸ்­ரே­லிய இரா­ணு­வத்­தினால் பலஸ்­தீ­னர்­களின் மீதான அழுத்­தங்கள் கார­ண­மாக ஏற்­பட்­ட­வை­யாகும் எனவும் தெரி­வித்தார்.

தொந்­த­ர­வுக்­குள்­ளாகும் இடங்கள் – பலஸ்­தீன ஜெரூ­ச­லத்தின் தொழில்­நுட்ப வன்­மு­றைகள் என்ற தலைப்பில் உரை­யாற்­றிய அவர் மேலும் தனது உரையில் எந்த குண்டைப் போடு­வது எனப் பரீட்­சிக்­கின்­றனர். வாயுக் குண்­டு­களைப் போடு­வதா? துர்­நாற்றம் வீசும் குண்­டு­களைப் போடு­வதா என்றும், பிளாஸ்ரிக் சாக்­கு­களில் போடு­வதா அல்­லது துணி­யி­லா­லான சாக்­கு­களில் போடு­வதா என்றும் துப்­பாக்­கி­யினால் தாக்­கு­வதா அல்­லது சப்­பாத்துக் கால்­க­ளினால் உதைப்­பதா என்றும் அவர்கள் பரீட்­சிக்­கின்­றனர் எனவும் அவர் தெரி­வித்தார்.

கடந்த வாரம், பல்­வேறு நோய்கள் ஏற்­பட்­டதன் கார­ண­மாக இஸ்­ரே­லிய சிறை­யினுள் மர­ணித்த பாரிஸ் பரௌட்டின் உடலை வழங்­கு­வ­தற்கு இஸ்­ரே­லிய அதி­கா­ரிகள் மறுத்­து­விட்­டனர்.

அத்­த­கைய பரி­சோ­த­னை­க­ளுக்கு அவர் உட்­ப­டுத்­தப்­பட்­டிருக்கலாம் எனவும் பிரேத பரி­சோ­த­னையில் அது வெளிப்­பட்­டு­விடும் என இஸ்ரேல் அஞ்­சு­வ­தா­கவும் அவ­ரது குடும்ப உறுப்­பி­னர்கள் கரு­து­கின்­றனர்.

இஸ்­ரே­லிய சுகா­தார அமைச்சு மருந்­தாக்கல் நிறு­வ­னங்­க­ளுக்கு அவர்­க­ளது மருந்­து­களை பரீட்­சிப்­ப­தற்கு கைதி­களைப் பயன்­ப­டுத்திக் கொள்­வ­தற்­கான அனு­ம­தியை வழங்­கி­யதை பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவின் தலை­வ­ரான டாலியா இட்ஸிக் ஏற்­றுக்­கொண்­ட­தாக கடந்த 1997 ஆம் ஆண்டு ஜுலை மாதம் யெதியோத் அஹ்­ரநோர்த் என்ற இஸ்­ரே­லிய செய்­தித்தாள் தகவல் வெளி­யிட்­ட­தோடு, ஐயா­யிரம் சோத­னைகள் இடம்­பெற்­றி­ருப்­ப­தா­கவும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளது.

காஸா­வி­லுள்ள மக்கள் பட்­டி­னி­போட்டு சாக­டிக்­கப்­ப­டு­கின்­றார்கள், நஞ்­சூட்­டப்­ப­டு­கின்­றனர், சிறு­வர்கள் அவர்­க­ளது உள்­ளு­றுப்­புக்­க­ளுக்­காக கடத்­தப்­பட்டு கொல்­லப்­ப­டு­கின்­றனர் என 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெல்­ஜி­யத்தின் ஏ.சீ.ஓ.டி தொழிற்­சங்­கத்தின் கலா­சார செய­லா­ள­ரான ரேபெர்ச்ட் வெண்­டர்­பீக்கென் எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்தார்.

இதற்கு முன்­ன­தாக ஐக்­கிய நாடுகள் சபைக்­கான பலஸ்­தீனத் தூதுவர் றியாத் மன்சூர் ஒரு எச்­ச­ரிக்­கை­யி­னை வெளி­யிட்­டி­ருந்தார். அதாவது, இஸ்ரேலியப் படையினரால் கொல்லப்படும் பலஸ்தீனர்களின் உடல்கள் கண்களின் கருவிழிகள் மற்றும் ஏனைய உடல் பாகங்கள் இல்லாத நிலையிலேயே ஒப்படைக்கப்படுவதாக தெரிவித்திருந்தார். ஆக்கிர

மிப்புச் சக்திகளால் உடலுறுப்புக்கள் அறு வடை செய்யப்படுவது மீண்டும் ஒரு தடவை நிரூபண மாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.