காஸா பள்ளத்தாக்கிலுள்ள ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் மத்தியகிழக்கு சமாதான முன்னெடுப்புக்கான நோர்வேயின் விசேட தூதுவரான டோர் வென்னஸ்லேண்டைச் சந்திப்பதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளாரென தகவலறிந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. பலஸ்தீன ஆள்புலப் பிரதேசங்களுக்கு அண்மையில் விஜயமொன்றை மேற்கொண்டிருந்த வென்னஸ்லேண்ட் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாரைச் சந்திக்கக் கோரியிருந்தார் என தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பாத நபரொருவர் தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை பலஸ்தீன அரசாங்கத்தின் நிருவாகத் தலைநகரான ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை நகரான ரமல்லாவில் வென்னஸ்லேண்ட் பலஸ்தீனப் பிரதமர் ராமி அல்-ஹம்டல்லாஹ்வை அவரது அலுவலகத்தில் சந்திந்தித்தார்.
மறுப்புத் தொடர்பான அறிவிப்பை சின்வாரின் அலுவலகம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. கடந்த காலங்களில் சின்வார் பல தடவைகள் வென்னஸ்லேண்டை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.