நுரைச்­சோலை வீடு­களை பகிர்ந்­த­ளிக்க நட­வ­டிக்கை

0 668

அம்­பாறை மாவட்­டத்­தி­லுள்ள நுரைச்­சோலை சுனாமி வீட்டுத் திட்­டத்தின் வீடு­களை தகுதி உடை­ய­வர்­க­ளுக்கு விரைவில் பகிர்ந்­த­ளிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தாக  அம்­பாறை மாவட்ட செய­லாளர் டி.எம்.எல்.பண்­டா­ர­நா­யக தெரி­வித்தார்.

அம்­பாறை மாவட்­டத்­தி­லுள்ள பிர­தேச செய­ல­கங்கள்  தோறும் வீடுகள் கேட்டு விண்­ணப்­பித்­த­வர்­க­ளுக்­கான காணிக் கச்­சேரி நேர்­முகத் தேர்வு இடம்­பெற்று வரு­வ­தா­கவும் அர­சாங்க அதிபர் மேலும் தெரி­வித்தார்.

அம்­பாறை, அக்­க­ரைப்­பற்று பிர­தேச செய­ல­கத்­திற்­குட்­பட்ட நுரைச்­சோலை சுனாமி 500 வீட்டு த்திட்­டத்­தினை அம்­பாறை மாவட்ட மக்­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்­கு­மு­க­மாக சாய்ந்­த­ம­ருது பிர­தேச செய­ல­கத்தில் இடம்­பெற்ற காணி கச்­சே­ரியில் 660 விண்­ணப்­ப­தா­ரிகள் கலந்து கொண்­டனர். சாய்ந்­த­ம­ருது பிர­தேச செய­லகப் பிரிவில்  நுரைச்­சோலை வீடுகள் கோரி விண்­ணப்­பித்­த­வர்­க­ளுக்­கான நேர்­முகத் தேர்வு  சாய்ந்­த­ம­ருது பிர­தேச செய­லக கூட்ட மண்­ட­பத்தில் கடந்த வெள்ளியன்று இடம்­பெற்­றது.

இந் நேர்­முகத் தேர்­வுக்கு அம்­பாறை மாவட்ட உதவிக் காணி ஆணை­யாளர் திரு­மதி ஏ.எல்.ஐ.பானு, மாவட்ட காணி உத்­தி­யோ­கத்தர் எம்.கே.எம்.முசம்மில், சாய்ந்­த­ம­ருது பிர­தேச செய­லக காணி உத்­தி­யோ­கத்தர் ஜே.ஏ.ஹஸ்மி, அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­தர்­க­ளான ஏ.சுதா, எம்.ஜெய்­சங்கர், முகா­மைத்­துவ உத­வி­யாளர் ஏ.எம்.ஹம்சார் உள்­ளிட்ட கிராம உத்­தி­யோ­கத்­தர்கள், பொது­மக்கள்  எனப் பலரும் கலந்து கொண்­டனர்.

சவூதி அர­சினால் நிர்­மா­ணித்துக் கொடுக்­கப்­பட்ட நுரைச்­சோலை சுனாமி 500 வீடு­களைக் கொண்ட இவ்­வீட்­டுத்­திட்­டத்­தினை பெற்­றுக்­கொள்ள சாய்ந்­த­ம­ருது பிர­தேச செய­லகப் பிரி­வி­லி­ருந்து 660 பேர் விண்­ணப்­பித்து நேர்­முகத் தேர்­வுக்குத் தோற்­றி­யமை குறிப்­பி­டத்­தக்­கது.

அனைத்து பிர­தே­சங்­க­ளிலும் விண்­ணப்­பங்கள் கோரப்­பட்டு  விண்­ணப்­பித்­த­வர்­க­ளுக்­கான காணிக் கச்­சே­ரிகள் இடம்­பெற்று வரு­வ­தா­கவும்.  இவை நிறைவு பெற்றதன் பின்னர் தகுதி உடையவர்களுக்கும் சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் விரையிவில் பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அம்பாறை மாவட்ட செயலாளா் டி.எம்.எல்.பண்டாரநாயக தெரிவித்துள்ளார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.