சிறுவர் துஷ்­பி­ர­யோகம்: வருடாந்தம் 10000 முறைப்­பா­டுகள்

மகளிர் மற்றும் சிறுவர் விவ­கார அமைச்சர் சந்­தி­ராணி

0 1,172

சிறுவர் துஷ்­பி­ர­யோ­கங்கள், சிறுவர் துன்­பு­றுத்­தல்கள் தொடர்பில் வருடாந்தம் 9000 முதல் 10000 வரை­யான முறைப்­பா­டுகள் பதிவு செய்­யப்­ப­டு­வ­தாக மகளிர் மற்றும் சிறுவர் விவ­கார அமைச்சர் சந்­தி­ராணி பண்­டார தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற வாய் மூல விடைக்­கான வினா­வின்­போது பிர­தான எதிர்க்­கட்சி எம்.பி.ரஞ்சித் டி சொய்சா  எழுப்­பிய கேள்­விக்கு சபா பீடத்தில் சமர்ப்­பித்த பதி­லி­லேயே  இத­னைத்­தெ­ரி­வித்­துள்ள  மகளிர் மற்றும் சிறுவர் விவ­கார அமைச்சர் சந்­தி­ராணி பண்­டார  அதில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, இலங்­கையில் வருடாந்தம் சிறுவர் துஷ்­பி­ர­யோ­கங்கள், சிறுவர் துன்­பு­றுத்­தல்கள் தொடர்பில் 9 ஆயிரம் தொடக்கம் 10 ஆயிரம்  வரை­யான முறைப்­பா­டுகள் பதிவு செய்­யப்­ப­டு­கின்­றன.

இதில் கடந்த 2015 ஆம் ஆண்டு 1539 சிறுவர் துஷ்­பி­ர­யோ­கங்கள், 9193 சிறுவர் துன்­பு­றுத்­தல்­களும். கடந்த  2016ஆம் ஆண்டு 1275 சிறுவர் துஷ்­பி­ர­யோ­கங்கள், 8086 சிறுவர் துன்­பு­றுத்­தல்­களும், கடந்த  2017 ஆம் ஆண்டு 1175 சிறுவர் துஸ்­பி­ர­யோ­கங்கள், 7839 சிறுவர் துன்­பு­றுத்­தல்கள் என்­பன இவ்­வாறு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன.

இச் சம்­ப­வங்கள் தொடர்­பான விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்­தவும் குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­டனை வழங்­கவும் தேவை­யான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன. சிறுவர் துஷ்­பி­ர­யோ­கங்கள் தொடர்­பான சட்ட நட­வ­டிக்­கைகள் தாம­த­மாக சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­தி­ட­மி­ருந்து குற்­றப்­பத்­தி­ரி­கையை தாக்கல் செய்­வ­தற்கு தேவை­யான அறி­வு­ரைகள் கிடைப்­பதில் ஏற்­படும் இழுத்­த­டிப்­பு­களே கார­ண­மா­க­வுள்­ளன. இது தொடர்பில் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­துடன் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது.

சிறுவர் துஷ்­பி­ர­யோக வழக்கு நட­வ­டிக்­கை­க­ளின்­போது பாதிக்­கப்­பட்­ட­வர்கள் சார்பில் ஆஜ­ரா­வது  மற்றும் சில நட­வ­டிக்­கைகள் தாம­த­ம­டை­வதன் கார­ண­மாக வழக்­கு­களில் சிக்கல் ஏற்­படும் சந்­தர்ப்­பங்­களில் தேசிய சிறுவர் பாது­காப்பு அதி­கா­ர­சபை ஊடாக சட்­டத்­த­ர­ணிகள் உத­வியை  பெற்­றுக்­கொ­டுக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளின்போது பாதிக்கப்பட்ட சிறுவர்கள் இரு தடைவைகள் பாதிக்கப்படுவதனை தடுப்பதற்காக வீடியோ சாட்சிகளை ஒளிப்பதிவு செய்யும் இரண்டு நிலையங்கள் வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.