ஐ.எஸ். இயக்கத்திலிருந்து மீண்ட பெண் நாடு திரும்ப அமெரிக்கா தடை விதிப்பு

0 664

ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்­கத்­தி­லி­ருந்து மீண்டு வந்த ஹூடா முதானா தனது சொந்த நாடான அமெ­ரிக்கா திரும்ப விருப்பம் தெரி­வித்­துள்ள நிலையில் அந்­நாட்டு ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் அதற்குத் தடை விதித்­துள்ளார்.

ஹூடா முதானா அமெ­ரிக்­காவின் அல­பாமா மாகா­ணத்தைச் சேர்ந்­தவர். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஐ.எஸ். இயக்­கத்தில் சேர்ந்தார்.

தற்­போது ஐ.எஸ்­ஸி­ட­மி­ருந்து மீண்ட அவர், ”ஐ.எஸ்­ஸிடம் சேர்ந்­தது தவ­றுதான். எனது மக­னுடன்  தனது தாய்­நாட்­டுக்குச் செல்ல விரும்­பு­கிறேன்” என்று தெரி­வித்­துள்ளார்.

ஆனால், அவரை மீண்டும் அமெ­ரிக்­கா­வுக்கு அழைக்க முடி­யாது என்று ட்ரம்ப் தலை­மை­யி­லான அரசு தெரி­வித்­துள்­ளது.

இதுகுறித்து கடந்த புதன்­கி­ழமை ட்ரம்ப் பேசும்­போது, ”நான்  வெளி­யு­ற­வுத்­துறை அமைச்­ச­ருக்கு முதா­னாவை அமெ­ரிக்­கா­வுக்கு மீண்டும் அனு­ம­திக்கக் கூடாது என்ற எனது கருத்தை தெரி­வித்­து­விட்டேன். அவரும் ஒப்புக் கொண்டார்” என்றார்.

இந்­நி­லையில் இது­கு­றித்து வெளி­யு­றவுத் துறை அமைச்சர் பாம்­பியோ கூறும்­போது, ”முதானா அமெ­ரிக்கக் குடி­மகள் இல்லை.

அவர் அமெ­ரிக்­காவில் பிறக்­க­வில்லை.

நாங்கள் அவரை அமெ­ரிக்­காவில் அனு­ம­திக்க முடி­யாது. அவ­ரிடம் அதி­கா­ர­பூர்­வ­மான கட­வுச்­சீட்டு கூட இல்லை” என்று தெரி­வித்தார்.

ஆனால், முதா­னாவின் உற­வி­னர்கள் அவர் அமெ­ரிக்­கா­வில்தான் பிறந்தார் என்றும் அவ­ரிடம் முறை­யான கட­வுச்­சீட்டு இருக்­கி­றது என்றும் தெரி­வித்­துள்­ளனர்.

எனினும்  அவ­ரது பெற்­றோர்­களின் பிறந்த இடங்களை சுட்டிக் காட்டி இதனை ஏற்க அமெரிக்க அரசு மறுக்கிறது என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.