மாணவர்கள், வாலிபர்களுக்கு சின்னங்களை மதிக்க அறிவுறுத்துக

0 692

புராதன சின்னங்கள் அமைந்துள்ள தொல்பொருள் பிரதேசங்களில் முஸ்லிம் மாணவர்கள் நடந்துக்க கொண்ட முறையினை தாம் வன்மையாக கண்டிப்பதாகத் தெரிவித்துள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, இவ்வாறான உங்களில் நடந்துக் கொள்ள வேண்டிய முறைகள் பற்றி உலமாக்கள், பெற்றோர்கள், கதீப்மார்கள், புத்திஜீவிகள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் என்போர் சமூகத்துக்கு தெளிவுகளை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

அண்­மையில் முஸ்லிம் மாண­வர்கள் புரா­தன பௌத்த தூபிகள் மீதேறி புகைப்­படம் எடுத்­துக்­கொண்ட இரு சம்­ப­வங்கள் பதி­வாகி சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட்­டுள்­ளமை தொடர்பில் வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்­துள்­ளது.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பொதுச்­செ­ய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாறக் கையொப்­ப­மிட்டு வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

‘பல்­லின மக்கள் வாழ்ந்து வரும் இந்­நாட்டில் ஒவ்­வொரு இனத்­திற்­கு­மான தனித்­து­வங்­களும், வேறு­பட்ட கலா­சா­ரங்­களும் இருந்து வரு­வதை நாம் காண்­கிறோம். அவ்­வா­றான தனித்­து­வங்­களைப் பேணிப் பாது­காப்­பதில் ஒவ்­வொரு இனத்­த­வரும் கரி­சனை செலுத்தி வரு­கின்­றனர். இது ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் உரி­மை­யாகும்.

அர­சாங்கம் வர­லாற்றை நிரூ­பிக்கும் சின்­னங்­க­ளாக சில இடங்­களை அடை­யா­ளப்­ப­டுத்தி புரா­தன சின்­னங்­க­ளாகப் பாது­காத்­து­வ­ரு­கி­றது. இவ்­வா­றான இடங்­களில் நடந்­து­கொள்ள வேண்­டிய முறை­களை எமது இளை­ஞர்கள் சிலர் பேணத்­த­வ­றிய இரு சம்­ப­வங்கள் அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளன. இவ்­வா­றான செயல்கள் மாற்று மத சகோ­த­ரர்­களால் இன­வாத செயற்­பா­டு­க­ளாக நோக்­கப்­ப­டு­கி­றது. இதனால் அனைத்து முஸ்­லிம்­களும் பாதிப்­புக்­குள்­ளா­கின்­றனர். இவ்­வி­ட­யங்­களை உலமா சபை வன்­மை­யாகக் கண்­டிக்­கி­றது.

அனைத்து இனங்­களின் தனித்­துவ விட­யங்கள் தொடர்­பா­கவும், நாட்டின் புரா­தன சின்­னங்கள் தொடர்­பா­கவும் அவ்­வா­றான இடங்­க­ளுக்குச் செல்­லும்­போது நடந்து கொள்ள வேண்­டிய முறைகள் பற்­றியும் எமது சமூ­கத்­த­வ­ருக்கு தெளி­வு­களை வழங்­கு­வது அவ­சி­ய­மாகும். எமது வாலி­பர்­க­ளுக்கு இது தொடர்பில் தெளி­வூட்­டல்­களை வழங்­க­வேண்டும். இது விட­யத்தில் சமூ­கத்தை வழி நடத்­து­ப­வர்கள், பெற்றோர், உல­மாக்கள், கதீப்­மார்கள், புத்­தி­ஜீ­விகள், அதி­பர்கள் அனை­வரும் கவனம் செலுத்த வேண்டும் என உலமா சபை கோரு­கி­றது.
சுற்­று­லாக்­களை மேற்­கொள்ளும் பாட­சாலை மாண­வர்கள் உட்­பட அனை­வரும் இவ்­வா­றான இடங்­களை தரி­சிக்­கின்­ற­போது அவ்­வி­டங்­களில் நடந்து கொள்ளும் முறை­பற்றி அறிந்து செயற்­ப­ட­வேண்டும்.

மேலும் புரா­தன சின்­னங்கள் என அடை­யாளம் காணப்பட்டுள்ள இடங்களில் நடந்துகொள்ள வேண்டிய முறை தொடர்பான அறிவுறுத்தல் உள்ளடங்கிய பலகைகள் மும்மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என உரிய அதிகாரிகளிடம் உலமா சபை வேண்டுகோள் விடுக்கிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.அண்­மையில் முஸ்லிம் மாண­வர்கள் புரா­தன பௌத்த தூபிகள் மீதேறி புகைப்­படம் எடுத்­துக்­கொண்ட இரு சம்­ப­வங்கள் பதி­வாகி சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட்­டுள்­ளமை தொடர்பில் வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்­துள்­ளது.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பொதுச்­செ­ய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாறக் கையொப்­ப­மிட்டு வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

‘பல்­லின மக்கள் வாழ்ந்து வரும் இந்­நாட்டில் ஒவ்­வொரு இனத்­திற்­கு­மான தனித்­து­வங்­களும், வேறு­பட்ட கலா­சா­ரங்­களும் இருந்து வரு­வதை நாம் காண்­கிறோம். அவ்­வா­றான தனித்­து­வங்­களைப் பேணிப் பாது­காப்­பதில் ஒவ்­வொரு இனத்­த­வரும் கரி­சனை செலுத்தி வரு­கின்­றனர். இது ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் உரி­மை­யாகும்.

அர­சாங்கம் வர­லாற்றை நிரூ­பிக்கும் சின்­னங்­க­ளாக சில இடங்­களை அடை­யா­ளப்­ப­டுத்தி புரா­தன சின்­னங்­க­ளாகப் பாது­காத்­து­வ­ரு­கி­றது. இவ்­வா­றான இடங்­களில் நடந்­து­கொள்ள வேண்­டிய முறை­களை எமது இளை­ஞர்கள் சிலர் பேணத்­த­வ­றிய இரு சம்­ப­வங்கள் அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளன. இவ்­வா­றான செயல்கள் மாற்று மத சகோ­த­ரர்­களால் இன­வாத செயற்­பா­டு­க­ளாக நோக்­கப்­ப­டு­கி­றது. இதனால் அனைத்து முஸ்­லிம்­களும் பாதிப்­புக்­குள்­ளா­கின்­றனர். இவ்­வி­ட­யங்­களை உலமா சபை வன்­மை­யாகக் கண்­டிக்­கி­றது.

அனைத்து இனங்­களின் தனித்­துவ விட­யங்கள் தொடர்­பா­கவும், நாட்டின் புரா­தன சின்­னங்கள் தொடர்­பா­கவும் அவ்­வா­றான இடங்­க­ளுக்குச் செல்­லும்­போது நடந்து கொள்ள வேண்­டிய முறைகள் பற்­றியும் எமது சமூ­கத்­த­வ­ருக்கு தெளி­வு­களை வழங்­கு­வது அவ­சி­ய­மாகும். எமது வாலி­பர்­க­ளுக்கு இது தொடர்பில் தெளி­வூட்­டல்­களை வழங்­க­வேண்டும். இது விட­யத்தில் சமூ­கத்தை வழி நடத்­து­ப­வர்கள், பெற்றோர், உல­மாக்கள், கதீப்­மார்கள், புத்­தி­ஜீ­விகள், அதி­பர்கள் அனை­வரும் கவனம் செலுத்த வேண்டும் என உலமா சபை கோரு­கி­றது.
சுற்­று­லாக்­களை மேற்­கொள்ளும் பாட­சாலை மாண­வர்கள் உட்­பட அனை­வரும் இவ்­வா­றான இடங்­களை தரி­சிக்­கின்­ற­போது அவ்­வி­டங்­களில் நடந்து கொள்ளும் முறை­பற்றி அறிந்து செயற்­ப­ட­வேண்டும்.

மேலும் புரா­தன சின்­னங்கள் என அடை­யாளம் காணப்பட்டுள்ள இடங்களில் நடந்துகொள்ள வேண்டிய முறை தொடர்பான அறிவுறுத்தல் உள்ளடங்கிய பலகைகள் மும்மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என உரிய அதிகாரிகளிடம் உலமா சபை வேண்டுகோள் விடுக்கிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.