பங்களாதேஷின் தலைநகரான டாக்காவின் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று புதன்கிழமை இரவு தீவிபத்து ஏற்பட்டு 60 இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
டாக்காவின் பழைய பகுதியிலுள்ள சவ்க்பஜார் அடுக்குமாடி குடியிருப்பில் இரசாயனக் கிடங்காக பயன்படுத்தப்பட்டு வந்த கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது, அதனை தொடர்ந்து சூழ உள்ள கட்டிடங்களுக்கும் தீ பரவியுள்ளது.
மேலும் இத்தீ விபத்தில் 69 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு சுமார் 50 பேர் காயமடைந்துள்ளனர் என செய்தி நிறுவனங்களுக்கு தீ கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவித்தனர். இறப்பு எண்ணிக்கை உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தீ விபத்தானது சிலிண்டரில் ஏற்பட்ட கசிவிலிருந்தே உருவாகி உள்ளது. இந்த கட்டடத்தில் ரசாயன கிடங்கும் இருந்ததால் தீ வேகமாக பரவி உள்ளது” என்று தீயணைப்பு துறை தலைவர் அலி அஹமத் தெரிவித்துள்ளார்.