ஆயிரக்கணக்கான லொறிகளில் ஆயுதங்களை வழங்கி பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயற்படும் நோட்டோ நாடுகள், துருக்கி அந்நாடுகளிலிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கு கோரிக்கை விடுக்கும் போது அதனைப் புறந்தள்ளுவதாக துருக்கிய ஜனாதிபதி றிசெப் தைய்யிப் அர்துகான் குற்றம்சாட்டியுள்ளார்.
தென்மேற்குத் துருக்கியின் பத்ர் பிராந்தியத்தில் கடந்த திங்கட்கிழமை தேர்தல் பிரசாரமொன்றில் ஈடுபட்டிருந்த போது இது என்ன மாதிரியான நேட்டோ அமைப்பு எனக் கேள்வியெழுப்பினார்.
நீங்கள் 23,000 லொறிகளில் ஈராக் ஊடாக பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களையும் உபகரணங்களையும் வழங்குகிறீர்கள். ஆனால் நாம் ஆயுதங்களைக் கோரும் போது எங்களுக்கு விற்பனை செய்ய மறுக்கிறீர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
எமது நாடு சிரியாவுடன் 911 கிலோமீற்றர் நீளமான எல்லையைக் கொண்டுள்ளது. எமக்கு எந்த நேரத்திலும் அச்சுறுத்தல் காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
ஈராக்கினூடாக எந்த நாடு ஆயுத விநியோகத்தில் ஈடுபட்டது என அர்துகான் விபரமெதனையும் இதன்போது வெளியிடவில்லை.
-Vidivelli