உலகில் முதன்முறையாக காஸாவில் பட்டம் பெற்ற வெளிநாட்டுப் பெண்

0 839

பலஸ்­தீனப் பல்­க­லைக்­க­ழ­மொன்றில் முது­மா­னி­பட்­டத்தைப் பெற்­றுள்ள முத­லா­வது வெளி­நாட்­ட­வ­ராக துருக்­கியைச் சேர்ந்த இளம் பெண் றுகையா டேமிர் சாதனை படைத்­துள்ளார்.

27 வய­தான றுகையா டேமிர் தனது பட்­டத்­தினை காஸா பள்­ளத்­தாக்­கி­லுள்ள இஸ்­லா­மியப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் உள­வியல் சமூக சுகா­தாரப் பிரிவில் பூர்த்தி செய்தார்.

‘எனது ஆய்வுக் கட்­டுரை – காஸாவில் ஆண்­களால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்ள தொழில்­து­றையில் பெண்­களின் சுய­வி­ழிப்­பு­ணர்வும் தந்­தி­ரோபா­யங்­களை கைக்­கொள்­ளு­தலும்’ என்ற தலைப்பில் அமைந்­தி­ருந்­தது என துருக்­கிய ஊட­க­மொன்­றுக்கு வழங்­கிய பிரத்­தி­யேக நேர்­கா­ண­லின்­போது தெரி­வித்தார்.

தனது ஆய்­வுக்­கான மாதி­ரி­க­ளாக பலஸ்­தீனப் பெண் பொலி­ஸாரை தான் தேர்ந்­தெ­டுத்­த­தா­கவும் அவர் தெரி­வித்தார். ஏனைய இடங்­களில் அதே தொழிலைச் செய்­கின்­ற­வர்­களைப் போலல்­லாது பலஸ்­தீனப் பெண் பொலிஸார் இஸ்­ரேலின் தாக்­குதல் என்ற மேல­திக ஆபத்­தையும் தடை­யி­னையும் எதிர்­நோக்­கி­யுள்­ளனர் எனவும் றுகையா தெரி­வித்தார்.

காஸா­வி­லுள்ள பலஸ்­தீனப் பெண் பொலிஸார் தமது பணியை ஈடு­பாட்­டோடு செய்ய விருப்பம் கொண்­ட­வர்­க­ளாகக் காணப்­ப­டு­கின்­றனர் எனத் தெரி­வித்த அவர் பலஸ்­தீன அர­சாங்­கத்தால் அழைக்­கப்­படும் போது ஆண்­களால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்ள களத்தில் பெண்­களின் தேவை­களைப் பூர்த்தி செய்­ய­வ­தற்­காக பணி­யாற்­று­கின்­றனர் எனவும் குறிப்­பிட்டார்.

பலஸ்­தீனம் முழு­வ­திலும் குறிப்­பாக காஸாவில் உள்ள பெண்­க­ளுக்கு தேவை­யான உப­க­ர­ணங்கள் மற்றும் செல­வீ­னங்­களை அர­சாங்கம் வழங்க வேண்டும் எனவும் சுட்­டிக்­காட்­டினார்.

தென்­கி­ழக்கு துருக்­கியின் டியா­பாக்கிர் மாகா­ணத்தைச் சேர்ந்த றுகையா 2016 ஆம் ஆண்டு தனது முது­மானிப் பட்­டத்தைப் பெறு­வ­தற்­காக காஸாவைச் சென்­ற­டைந்தார்.

நான் பலஸ்­தீனர் ஒரு­வரைத் திரு­மணம் செய்­து­கொண்டேன், தொடர்ந்து காஸா பள்­ளத்­தாக்கில் வசிப்­ப­தற்கே விரும்­பு­கின்றேன். காஸாவில் பணி­யாற்­று­மாறு எனக்கு பல்­வேறு அழைப்­புக்கள் வந்­தன. எனினும் காஸா­வி­லுள்ள மக்­க­ளுக்கு உள­வளச் சேவை­யினை வழங்கும் சொந்தத் தொழி­லொன்றை ஆரம்­பிப்­பதே எனது திட்­ட­மாகும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

படிப்­ப­டி­யாக அரபு மொழியை சர­ள­மாகப் பேசக் கற்­றுக்­கொண்ட இளம் துருக்­கிய பெண் நான் காஸாவில் இருப்­ப­தி­லேயே மகிழ்ச்­சி­ய­டை­கின்றேன் எனத் தெரி­வித்தார்.

இஸ்­ரே­லிய ஆக்­கி­ர­மிப்­பி­லி­ருந்து ஜெரூ­சலம் விடு­விக்­கப்­படும் போது அங்­குள்ள பல்­க­லைக்­க­ழ­க­மொன்றில் எனது கலா­நிதிப் பட்­டத்தைப் பெறு­வ­தற்கு உத்­தே­சித்­துள்ளேன் எனவும் தெரிவித்தார்.

1967 ஆம் ஆண்டு தொடக்கம் இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஜெரூசலம் மத்திய கிழக்கு முரண்பாட்டின் மூலக்கல்லாகக் காணப்படுகின்றது. கிழக்கு ஜெரூசலத்தைத் தலைநகராகக் கொண்ட சுதந்திர பலஸ்தீன தேசம் என்பது பலஸ்தீன மக்களின் கனவாகும்
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.