பலஸ்தீனத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் 22 பேர் கைது

0 602

ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட  மேற்­குக்­க­ரையில் இரவு வேளையில் மேற்­கொள்­ளப்­பட்ட  சுற்­றி­வ­ளைப்பின் போது 22 பலஸ்­தீ­னர்கள் இஸ்­ரே­லியப் படை­யி­னரால் கைது செய்­யப்­பட்­ட­தாக  இஸ்­ரே­லிய இரா­ணுவம் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை  தெரி­வித்­தது.

பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளோடு  தொடர்­பு­பட்­டி­ருந்­ததன்  கார­ண­மாக இவர்கள் கைது செய்­யப்­பட்­ட­தாக  இரா­ணு­வத்­தி­னரால்   வெளி­யி­டப்­பட்ட அறிக்­கையில்  தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் எவ்­வ­கை­யான பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­களில்  அவர்கள் தொடர்பு பட்­டி­ருந்­தார்கள் என விப­ரிக்­கப்­ப­ட­வில்லை.

தேடப்­படும் பலஸ்­தீ­னர்­களை  பிடிப்­ப­தற்­காக சோத­னை­யிடல் என்ற போர்­வையில் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட  மேற்­குக்­க­ரையில்  இஸ்­ரே­லியப் படை­யினர் பர­வ­லான கைது நட­வ­டிக்­கை­களில் அடிக்­கடி ஈடு­பட்டு வரு­கின்­றனர்.  பலஸ்­தீனத் தரப்பு எண்­ணிக்­கையின் பிர­காரம் ஏரா­ள­மான பெண்கள் மற்றும் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் உள்ளடங்கலாக சுமார் 6,400 பலஸ்தீனர்கள் இஸ்ரேலிய சிறை களில் தடுத்து வைக்கப் பட்டுள்ளனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.