பால்மா விவகாரம்: மாறுபட்ட கருத்துக்களால் மக்களுக்கு அசௌகரியம்

0 596

வெளி­நாட்­டி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்­மாவில் பன்­றிக்­கொ­ழுப்பு மற்றும் தாவர எண்ணெய் உள்­ள­டங்­கி­யுள்­ள­தாக பிர­தி­ய­மைச்சர் புத்­திக பத்­தி­ரண பகி­ரங்­கப்­ப­டுத்­தி­ய­தை­ய­டுத்து ஜனா­தி­ப­தியும், சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரத்­னவும் மற்றும் நுகர்வோர் அதி­கார சபையும் முரண்பட்ட கருத்­து­களை தெரி­வித்­துள்­ளதால் பால்மா பாவ­னை­யா­ளர்கள் பல்­வேறு அசௌ­க­ரி­யங்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளனர். எனவே அர­சாங்கம் தொடர்ந்தும் மக்கள் இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்­மாவை நுக­ர­லாமா? அல்­லது தவிர்க்­க­லாமா? என்­பதை தெளி­வு­ப­டுத்த வேண்டும், நிரந்­தர தீர்வு காண­வேண்டும் என நோயா­ளர்­களைப் பாது­காக்கும் தேசிய இயக்கம் (NOPS) கோரிக்கை விடுத்­துள்­ளது.

நோயா­ளர்­களைப் பாது­காக்கும் தேசிய இயக்­கத்தின் செய­லாளர் தம்­மிக்க எதி­ரி­சிங்க கையொப்­ப­மிட்டு வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கை­யிலே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

குறிப்­பிட்ட அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

பிர­தி­ய­மைச்சர் புத்­திக பத்­தி­ரண வெளி­நாட்­டி­லி­ருந்து இறக்­கு­மதி செய்யும் பால்­மாவில் பன்­றிக்­கொ­ழுப்பு மற்றும் தாவர எண்ணெய் அடங்­கி­யுள்­ள­தாகக் குறிப்­பிட்­டுள்ளார். இதே­வேளை, சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரத்ன பால்மா பாவ­னைக்கு எந்தப் பிரச்­சி­னையும் இல்லை. சுகா­தார அமைச்சு பால்­மா­வினை ஆய்­வுக்-­குட்­ப­டுத்­தி­யதில் அவ்­வா­றான கலப்­ப­டங்கள் எது­வு­மில்லை என உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது என தெரி­வித்­துள்ளார்.

இந்­நி­லையில் நுகர்வோர் அதி­கார சபையின் விசா­ரணை அதி­கா­ரி­களின் சங்கம், பால்­மாவில் அடங்­கி­யுள்ள கலப்­ப­டங்­களை ஆய்வு செய்­வ­தற்கு அர­சாங்க ஆய்வு நிறு­வனம் மறுப்பு தெரி­வித்­துள்­ளது. அத்­தோடு இவ்­வா­றான ஆய்­வு­களை மேற்­கொள்­வ­தற்கு நுகர்வோர் அதி­கார சபை­யிடம் வளங்­களும் இல்லை எனத் தெரி­வித்­துள்­ளது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பால்மா இந்­நாட்­டுக்கு உகந்­த­தல்ல. தான் சுகா­தார அமைச்­ச­ராக இருந்த காலத்தில் பால்மா நிறு­வன அதி­கா­ரி­களை எனது காரி­யா­ல­யத்­துக்குள் அனு­ம­திப்­ப­தில்லை என்று அண்­மையில் கருத்து வெளி­யிட்­டுள்ளார். இவ்­வா­றான முரண்­பா­டான கருத்­துகள் மக்­களை பால்மா தொடர்பில் அசெ­ள­க­ரி­யங்­க­ளுக்கு உள்­ளாக்­கி­யுள்­ளன.

ஜனா­தி­பதி சுகா­தார அமைச்­ச­ராக இருந்­த­போது ஏன் பால்மா இறக்­கு­ம­தியின் தரத்­தினை உறுதி செய்து கொள்­ள­வில்லை. இறக்­கு­ம­தியை கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை? பால்­மாவில் 26% பால் கொழுப்பு இருக்க வேண்­டு­மென எமது நாட்டின் துறைசார் நிபு­ணர்கள் தெரி­விக்­கின்­றார்கள். இலங்­கைக்கு இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்­மாவில் 26% கொழுப்பு அடங்­கி­யி­ருந்­தாலும் அது இயற்­கை­யான பால் கொழுப்பு அல்ல எனவும் மிருக கொழுப்­புகள், எண்ணெய் கொழுப்­புகள், மெலமைன் என்­பன உள்­ள­டக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் துறைசார் நிபு­ணர்கள் தெரி­விக்­கின்­றார்கள்.

பிரித்­தா­னிய ஆய்வு கூடத்­துக்கு பால்மா மாதி­ரி­களை அனுப்பி பெற்­றுக்­கொண்ட அறிக்­கையின் படியே அவர்கள் இந்த தக­வல்­களைத் தெரி­விக்­கின்­றனர். இது உண்­மை­யென்றால் இலங்கை நுகர்வோர் இது­வரை காலம் நுகர்ந்­தது பால்மா அல்ல அல்லவா?

வருடாந்தம் 400 மில்லியன் ரூபா வெளிநாடுகளுக்கு செலுத்தி இறக்குமதி செய்யப்படுவது இயற்கை பால்மா இல்லையே. இலங்கையின் பொருளாதாரத்தை பால்மா நிறுவனங்கள் அல்லவா கொள்ளையிடுகின்றன.

இவ்வாறு பால்மா பாவனையாளர்கள் குழம்பிப்போயிருக்கும் நிலையில் அரசாங்கம் இதற்கு உடனடித் தீர்வு காணவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.