கெய்ரோவில் தற்கொலைதாரிகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் இரு பொலிஸார் பலி

0 604

எகிப்­திய தலை­நகர் கெய்­ரோவில் அமைந்­துள்ள அல்-­அஸ்ஹர் பள்­ளி­வா­சலின் பின்னால் கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று  நப­ரொ­ருவர் தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­த­லொன்றை  மேற்­கொண்­ட­தாக உள்ளூர் ஊட­கங்கள் தெரி­வித்­தன.

அல்–தார்ப் அல்–-அஹ்­ம­ருக்கு அருகே இடம்­பெற்ற குறித்த தற்­கொலை குண்டுத் தாக்­கு­தலில் இரண்டு பொலிஸார் உயி­ரி­ழந்­த­தோடு  மேலும் இருவர் காய­ம­டைந்­த­தாக  உள்­துறை அமைச்சு அறிக்­கை­யொன்றில்  தெரி­வித்­துள்­ளது.

சந்­தே­கத்­திற்­கி­ட­மான  முறையில் நட­மா­டிய ஒரு­வரை துரத்­திச்­சென்ற பொலிஸார் அவரைச் சுற்றி வளைத்­த­போதே இத்­தாக்­குதல் இடம்­பெற்­றுள்­ளது.

தாக்­கு­தலை நடத்­திய நபர் அதே பிராந்­தி­யத்தில் வசித்த 37 வய­தான அல்–ஹஸன் அப்­துல்லாஹ் என அடை­யாளம் காணப்­பட்­டுள்­ள­தாக உள்ளூர் செய்தி இணை­யத்­த­ள­மான எகிப்து டுடே செய்தி வெளி­யிட்­டுள்­ளது. குறித்த நபர் கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஜிஸா ஆளுநர் பிர­தே­சத்தில் அல் – -­இஸ்­தி­காமாஹ் பள்­ளி­வா­ச­லுக்கு அருகில் மேம்­ப­டுத்­தப்­பட்ட வெடிக்கும் சாத­னத்தைப் பொருத்தி மேற்­கொள்­ளப்­பட்ட  தாக்­கு­த­லு­டனும் தொடர்­பு­பட்­ட­வ­ரென அமைச்சு தெரி­வித்­துள்­ளது. சுன்னி இஸ்­லா­மிய கற்­கையில் உலகில் பெரும் ஆத­ர­வினைப் பெற்ற அல்–அஸ்ஹர்  பல்­க­லைக்­க­ழகம் கடந்த செவ்­வா­யன்று இத் தாக்­கு­தலைக் கண்­டித்து அறிக்­கை­யொன்றை வெளி­யிட்­டது.

சந்­தேக நப­ருடன் மோதலில் ஈடு­பட்ட பொலிஸ் அதி­கா­ரிகள் பாரிய அனர்த்­த­மொன்றைத் தவிர்த்­துள்­ளனர் எனவும் அவ்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நாட்டின் பாது­காப்பு மற்றும் ஸ்திரத்­தன்­மை­யுடன் பயங்­க­ர­வாத அமைப்­புக்­களால் ஈடு­கொ­டுக்க முடி­ய­வில்லை எனத் தெரி­வித்து எகிப்தின் முப்தி அலு­வ­லகம் கண்­டனம் தெரி­வித்­துள்­ளது.

இரு நிறு­வ­னங்­களும் மர­ணித்­த­வர்­க­ளுக்கு இறை­வனின் கருணை கிடைக்க வேண்டும் எனத் தெரி­வித்­துள்­ள­தோடு மரணித்தவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபங்களையும் தெரிவித்துள்ளது. எகிப்தின் சட்டமா அதிபர் ஜெனரல் நாபில் சாடெக் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.