பௌத்த புரா­தன சின்­னங்­களை மதிப்­பது தொடர்பில் பள்­ளிகள், பாட­சா­லை­களில் அறி­வு­றுத்த வேண்டும்

முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம்

0 695

முஸ்லிம் மாண­வர்கள், இளை­ஞர்கள் பௌத்த புரா­தன முக்­கி­யத்­துவம் வாய்ந்த தூபி­களில் ஏறுதல் மற்றும் புகைப்­ப­டங்­களை எடுப்­பது  தொடர்­பாக  இரு சம்­ப­வங்கள் அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளன. முஸ்லிம் சமயம் அடுத்த சம­யத்தை  மதித்து பேணி நடக்­கின்ற மார்க்­க­மாகும்.  நாங்கள் அடுத்த மக்­களின் கலா­சாரப் பண்­பு­க­ளையும் அடை­யா­ளங்­க­ளையும் அறிந்து நடந்­து­கொள்ள வேண்டும்.  இது தொடர்­பாக பள்­ளி­வா­சல்­க­ளிலும் முஸ்லிம் பாட­சா­லை­க­ளிலும் அரபுக் கல்­லூ­ரி­க­ளிலும் விழிப்­பு­ணர்­வூட்­டுதல் வேண்டும். எனினும் இவை திட்­ட­மி­டப்­பட்டு மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற செயல்கள் அல்ல என முஸ்லிம் சமய கலா­சாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­வித்தார்.

வெலம்­பொட கதீ­ஜதுல் குப்ரா பெண்கள் அரபுக் கல்­லூ­ரியின் முத­லா­வது பட்­ட­ம­ளிப்பு விழா பொல்­கொல்ல மஹிந்த ராஜபக் ஷ கேட்போர் கூடத்தில் கல்­லூ­ரியின் பணிப்­பாளர் ஏ. எம். எம். மன்சூர் தலை­மையில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்­றது. இந்­நி­கழ்வில் பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அமைச்சர் ஹலீம் இங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்,

விசே­ட­மாக இளம் வய­தினர் ஏனைய சமய புனித ஸ்தலங்­க­ளுக்கு சென்று அதில் ஏறிப் பட­மெ­டுப்­பது தொடர்­பாக சிலர் கைது செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். சிலர் கைது செய்­யப்­பட்டு விடு­த­லை­யாகி இருக்­கின்­றார்கள். இது விசே­ட­மாக திட்­ட­மி­டப்­பட்ட செயல் அல்ல. இருந்த போதிலும் எமது பள்­ளி­வா­சல்­க­ளிலும் பள்ளிக் கூடங்­க­ளிலும் இது தொடர்­பாக அறி­வூட்ட வேண்டும். எமது நாட்டைப் பொறுத்­த­வ­ரை­யிலும் நாங்கள் சிறு­பான்­மை­யி­ன­மாக வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்றோம்.  எனவே நாங்கள் பெரும்­பான்­மை­யின மக்­களை மதித்து வாழ வேண்டும். மிக முக்­கி­ய­மாக நாங்கள் புரிந்­து­ணர்­வுடன் நடந்­து­கொள்ள வேண்டும். எமது சிறார்­க­ளுக்கு பள்­ளி­வா­சல்கள், பாட­சாலை மூல­மாக அறி­வு­றுத்தல் விடுக்­கப்­பட வேண்டும்.

இன்று எமது நாட்டில் 450 இற்கும் மேற்­பட்ட அரபுக் கல்­லூ­ரிகள் இருந்த போதிலும் ஒரு­சில அரபுக் கல்­லூ­ரி­களே பிர­கா­சிக்­கின்­றன. சில அரபுக் கல்­லூ­ரி­க­ளுக்கு ஒழுங்­கான பாடத் திட்டம் இல்லை. பல­த­ரப்­பட்ட பிரச்­சி­னைகள் உள்­ளன. ஒரு பொது­வான பாடத் திட்டத்தினை அமுல்படுத்தி ஒரு பொதுப் பரீட்சையொன்றை நடத்தி எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு சான்றிதழை வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
-VIdivelli

Leave A Reply

Your email address will not be published.