ஈராக்கில் முதன் முறையாக ஒரே சூலில் ஏழு குழந்தைகளை பிரசவித்த பெண்

0 758

ஈராக்­கிய வர­லாற்றில் முதன் முறை­யாக 25 வய­தான பெண்­ணொ­ருவர் ஒரே சூலில் ஏழு குழந்­தை­களைப் பிர­ச­வித்­த­தாக வைத்­தி­யர்கள் அறி­வித்­ததைத் தொடர்ந்து ஊட­கங்­களின் தலைப்புச் செய்­தி­களில் அந்தப் பெண் இடம்­பி­டித்­துள்ளார்.

கடந்த வாரத்தின் முற்­ப­கு­தியில் டையாலா மாகா­ணத்­தி­லுள்ள அல்-­பதொல் வைத்­தி­ய­சா­லையில் பெயர் வெளி­யி­டப்­ப­டாத பெண்­ணொ­ருவர் ஆறு பெண் குழந்­தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்­தை­யு­மாக ஏழு குழந்­தை­களைப் பிர­ச­வித்­துள்ளார்.

சுகப் பிர­ச­வத்தின் மூலம் குறித்த பெண்­ணுக்கு குழந்­தைகள் பிறந்­த­தா­கவும், அனைத்துக் குழந்­தை­களும் நல­முடன் இருப்­ப­தா­கவும் உள்ளூர் கா­தாரத் திணைக்­க­ளத்தின் உத்­தி­யோ­க­பூர்வ பேச்­சா­ள­ரான பிராஸ் அல்-­இஸ்­ஸாவி ஊட­கங்­க­ளுக்கு வெளி­யிட்ட அறிக்­கை­யொன்றில் தெரி­வித்­துள்ளார். ஏழு குழந்­தை­களும் மருத்­துவப் பரி­சோ­த­னைக்­குட்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவும், குழந்­தைகள் ஆரோக்­கி­ய­மாக இருப்­ப­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்­துள்ளார்.

ஈராக்கில் முதன்­மு­றை­யாக இவ்­வா­றான பிர­சவம் இடம்­பெற்­றுள்­ள­தென அல்-­இஸ்­ஸாவி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொண்டாடப் படும் இக் குழந்தைகளின் புகைப்படங்களை ஊடகங்கள் வெளியிட் டுள்ளன.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.