மாவனெல்லை சம்பவம்: சூத்திரதாரிகளை பாதுகாக்கும் முஸ்லிம் அரசியல்வாதியை உடன் கைது செய்க

சிங்கள ராவய கோரிக்கை

0 874

மாவ­னெல்­லையில் மற்றும் அண்­மித்த பகு­தி­களில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்­டமை உட்­பட வணாத்­த­வில்­லுவில் பயிற்சி முகாம் ஒன்று கண்­டு­பி­டிக்­கப்­பட்ட மையுடன் தொடர்­பு­டைய பிர­தான சந்­தேக நபர்கள் இருவர் தொடர்ந்தும் தலை­மறைவாகி இருக்­கி­றார்கள். இவர்கள் ஐ.எஸ். அமைப்­புடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என அறி­கிறோம்.  இவர்­களைக் கைது செய்ய வேண்டாம் நாம் ஆஜர்­ப­டுத்­து­கிறோம் என முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­யொ­ருவர் பிரதி பொலிஸ் மா அதி­ப­ரிடம் தொலை­பேசி மூலம் தெரி­வித்­துள்ளார். அந்த அர­சி­யல்­வாதி கைது­செய்­யப்­பட வேண்டும் என சிங்­கள ராவய அமைப்பின் தலைவர் அக்­மீ­மன தயா­ரத்ன தேரர் தெரி­வித்தார்.

மாவ­னெல்லை மற்றும் வணாத்­த­வில்லு சம்­ப­வங்கள் தொடர்பில் ஊட­கங்­க­ளுக்கு விளக்­க­ம­ளிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் விளக்­க­ம­ளிக்­கையில்;

‘மாவ­னெல்லை சிலை உடைப்பு சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­டைய சிலர் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்­தாலும் பிர­தான சந்­தேக நபர்கள் இருவர் தொடர்ந்தும் தலை­ம­றை­வா­கவே இருக்­கி­றார்கள். இவர்­க­ளுக்கு குறிப்­பிட்ட அர­சி­யல்­வா­தியின் ஆத­ரவு இருப்­ப­தா­கவே அறி­கிறோம். எனவே பொலிஸார் முதலில் அர­சி­யல்­வா­தியை கைது­செய்ய வேண்டும். அவ்­வாறு கைது செய்தால் பிர­தான சந்­தேக நபர்கள் இரு­வ­ரையும் அவர் மூல­மாகக் கைது­செய்­யலாம்.

இலங்­கையில் ஐ.எஸ். அமைப்பின் ஆத­ர­வா­ளர்கள் இருக்­கி­றார்கள் என பொது­ப­ல­சேனா உட்­பட நாமும் மேலும் பல அமைப்­பு­களும் தெரி­வித்து வந்­தன. ஆனால் அர­சாங்கம் அதனைப் பொருட்­ப­டுத்­த­வில்லை. தற்போது இது உறுதியாகியுள்ளது. இந்த வலையமைப்பைக் கண்டறிவதற்கு பிரதான சந்தேக நபர்கள் தாமதமில்லாமல் கைது செய்யப்படவேண்டும் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.