முதன் முறையாக பாகிஸ்தானுக்கு சவூதி பட்டத்து இளவரசர் விஜயம்

0 739

சவூதி அரே­பி­யாவின் பட்­டத்­திற்­கு­ரிய இள­வ­ரசர் மொஹமட் பின் சல்மான் முதன் முறை­யாக பாகிஸ்­தா­னுக்கு விஜயம் செய்­துள்ளார். 100 பேர் கொண்ட உயர்­மட்டத் தூதுக்­கு­ழு­வி­ன­ருடன் இஸ்­லா­மா­பாத்தில் அமைந்­துள்ள நூர்கான் விமான நிலை­யத்தை அவர் வந்­த­டைந்தார்.

அவ­ருக்கு செங்­கம்­பள வர­வேற்பு வழங்­கப்­பட்­ட­தோடு, பிர­தமர் இம்ரான் கான், இரா­ணுவத் தள­பதி ஜெனரல் கமர் பஜ்வா மற்றும் சிரேஷ்ட அமைச்­சர்கள் இள­வ­ர­சரை வர­வேற்­றனர்.

பட்­டத்­திற்­கு­ரிய இள­வ­ரசர் பய­ணித்த விஷேட விமானம் பாகிஸ்தான் வான்­ப­ரப்­பிற்குள் நுழைந்­த­வுடன் பாகிஸ்தான் விமா­னப்­படை ஜெட் விமா­னங்கள் வழித்­துணை வழங்­கி­ய­தா­கவும், மரி­யா­தையின் நிமித்­த­மாக 21 பீரங்கி வேட்­டுக்கள் தீர்க்கப் பட்­ட­தா­கவும் அரச தொலைக்­காட்சி தெரி­வித்­தது.

தூதுக்­கு­ழுவில் அங்கம் வகிக்கும் சவூதி அரே­பி­யாவின் வெளி­நாட்­ட­மைச்சர் அடெல் பின் அஹ்மட் அல்-­ஜு­பெயிர் பட்­டத்­திற்­கு­ரிய இள­வ­ரசர் இஸ்­லா­மா­பாத்­திற்கு வந்­த­டை­வ­தற்கு ஒரு மணித்­தி­யா­லத்துக்கு முன்னர் வந்து சேர்ந்தார். அவரை பாகிஸ்தான் வெளி­நாட்­ட­மைச்சர் ஷாஹ் மெஹ்மூட் குரைஷி வர­வேற்­ற­தா­கவும் அரச தொலைக்­காட்சி தெரி­வித்­தது.

மிகவும் பிர­ப­ல­மாக்­கப்­பட்ட இந்த இரண்டு நாள் விஜ­யத்தின் போது 20 பில்­லியன் அமெ­ரிக்க டொலர் பெறு­ம­தி­யான வியா­பார மற்றும் முத­லீட்டு உடன்­ப­டிக்­கை­களில் இரு நாடு­களும் கையொப்­ப­மிடும் என எதிர்­பார்க்கப் படு­கின்­றது.

நிதிப் பற்­றாக்­கு­றையால் திணறிக் கொண்­டி­ருக்­கின்ற இஸ்­லா­மா­பாத்­திற்கு றியா­தினால் கடந்த ஒக்­டோபர் மாதம் அறி­விக்­கப்­பட்ட 6 பில்­லியன் அமெ­ரிக்க டொலர் நிதி­யு­தவி வழங்­கப்­பட்­டது.

இதற்கு மேல­தி­க­மாக, சவூதி அரே­பி­யாவின் அக்வா சர்­வ­தேச மின்­சக்தித் திட்டம் பாகிஸ்­தானின் சக்தி வளத்­து­றையில் 4 பில்­லியன் அமெ­ரிக்க டொலர் வரை­யான முத­லீட்டைச் செய்­ய­வுள்­ள­தாக கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இஸ்­லா­மா­பாத்தில் பாகிஸ்தான் நிதி­ய­மைச்சர் ஆசாத் உம­ரு­ட­னான பேச்­சு­வார்த்­தையின் போது சவூதி அரே­பி­யாவின் சக்­தி­வள அமைச்சர் காலித் அல்-­பாலிஹ் அறி­வித்­தா­ரென அறிக்­கை­யொன்றில் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பாகிஸ்­தானின் எதிர்­காலம் பிர­கா­ச­மாக இருக்­கின்­றது. இம்ரான் கானின் தலை­மத்­து­வத்தின் கீழ் பாகிஸ்தான் மேலும் முன்­னேற்­ற­ம­டையும் எனவும் வர­வேற்பு நிகழ்வில் உரையாற்றிய பின் சல்மான் தெரிவித்தார்.

ஆரம்ப கட்டமாகவே சவூதி அரேபியா 20 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டினை பாகிஸ்தானில் மேற்கொள்கின்றது. எதிர்காலத்தில் இது மேலும் அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.