மாகாணசபை தேர்தலை நடத்துவது குறித்து நாளை கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்

சகல கட்சிகளுடனும் உடனடியாக கலந்துரையாடுமாறு பிரதமர் பணிப்பு

0 647

மாகா­ண­சபை தேர்தல் குறித்த அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கையை தீர்­மா­னிக்க நாளை கூடும் கட்சித் தலைவர்கள் கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­ப­டு­மென சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான லக் ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்­துள்ளார். சகல கட்­சி­க­ளையும் அழைத்து உட­ன­டி­யாகத் தீர்­வு­காண பிர­தமர் பணித்­துள்­ள­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

மாக­ாண­சபை தேர்தல் மற்றும் அர­சி­ய­ல­மைப்பு பேரவை முரண்­பா­டுகள் குறித்து அவர் தெரி­விக்­கை­யி­லேயே இதனைக் குறிப்­பிட்டார்.  இது குறித்து அவர் மேலும் கூறு­கையில்,

மாகா­ண­சபை தேர்­தலை ஐக்­கிய தேசிய கட்­சியே தடுப்­ப­தாக கூறு­கின்­றனர். ஆனால் நாம் ஆரம்­பத்­தி­லி­ருந்தே தேர்­தலை பழைய முறை­மையில் நடத்­துவோம் என கூறினோம். ஆனால் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியே தேர்­தலை புதிய முறை­மையில் நடத்த வேண்டும் என கூறி­ய­துடன் அவர்­களே தேர்­தலை பிற்­போ­டவும் கார­ண­மாக இருந்­தனர். அவர்­களின் அமைச்­சரே எல்லை நிர்­ணய அறிக்­கையை தயா­ரித்து இறு­தியில் வாக்­கெ­டுப்பில் அவரே  எதி­ராக வாக்­க­ளித்தார். எவ்­வாறு இருப்­பினும் இந்தப் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்­வு­களை உட­ன­டி­யாகப் பெற­வேண்டும். ஆகவே அடுத்த பாரா­ளு­மன்ற அமர்­வு­களின் போது சகல கட்­சி­க­ளையும் அழைத்து மாகா­ண­சபை தேர்தல் குறித்து பேச்­சு­வார்த்தை நடத்த வேண்டும் என பிர­தமர் அறி­வுரை வழங்­கி­யுள்ளார். ஆகவே அடுத்த கட்சித் தலைவர் கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­படும். நாளை மறு­தினம் (நாளை) கூடும் கட்சி தலைவர் கூட்­டத்தில் இது குறித்து தீர்­மானம் எடுக்­கப்­படும். அதேபோல்  அர­சி­ய­ல­மைப்பு பேரவை  குறித்து இன்று முரண்­பா­டான  கருத்­துக்­களை முன்­வைத்­த­போ­திலும் அன்று இந்த யோசனை முன்­வைக்­கப்­பட்­ட­போது பாரா­ளு­மன்­றத்தில் அனை­வரும் இதனை அங்­கீ­க­ரித்­தனர். அவ்­வாறு அனை­வ­ருமே அங்­கீ­க­ரித்த ஒரு விட­யத்தில் இன்று எவ்­வாறு தவ­றென வாதா­டு­வது? மஹிந்த ராஜபக் ஷ உள்­ளிட்ட எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் உள்­ளனர். ஆகவே அவர்­களே இதனை விமர்­சிக்க முடி­யாது. கடந்த நான்கு ஆண்­டு­களில் எமது அமைச்­ச­ர­வையில் வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்க பல்­வேறு சிர­மங்­களை எதிர்­கொள்ள வேண்­டிய நிலைமை ஏற்பட்டது. முக்கியமான தருணங்களில் எம்மை தடுக்கும் சூழ்ச்சிகளே இடம்பெற்றன. அதனையும் மீறியே நாம் மக்களுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.