இனவாதிகளின் புலக்காட்சி

0 1,081
  • எம்.எம்.ஏ.ஸமட்

ஒரு­வரின் ஐம்­பு­லன்கள் ஒரு பொருளை அல்­லது சம்­ப­வத்தை எவ்­வாறு உணர்ந்து அறி­கி­றதோ அவ்­வாறே அப்­பொ­ருளும், சம்­ப­வமும் அவ­ருக்குப் புலப்­படும். உள­வியல் இதனை புலக்­காட்சி என வரை­வி­லக்­க­ணப்­ப­டுத்­து­கி­றது.  பொது­வாக பொருள்கள் அல்­லது சம்­ப­வங்கள்  பற்றி ஒரு மனிதன் பெறும் புலக்­காட்­சிகள் சரி­யா­ன­வை­யா­கவும் இருக்­கலாம். பிழை­யா­ன­வை­யா­கவும் இருக்­கலாம். மனித உள்­ளத்தின் இத்­த­கைய புலக்­காட்சி உணர்­வு­களே இவ்­வு­லகில் ஆக்­கங்­க­ளையும், அழி­வு­க­ளையும் ஏற்­ப­டுத்­து­கின்­றன.

பொருளை, தனி­ந­பரை அல்­லது அத்­த­னி­ந­பரைச் சமூகம் சார்ந்து  புலக்­காட்சி பெறுதல் முன்­னரே அப்­பொ­ருளை, அத்­த­னி­ந­பரை அல்­லது அவர்­சார்ந்த சமூ­கத்தைப் பற்றி கொண்­டுள்ள மனப்­பாங்­கி­லேயே தங்­கி­யுள்­ளது. ஒரு­வரை நல்­ல­வ­ராகக் கரு­தினால் அவர் செய்­வ­தெல்லாம் சரி­யா­கவே தோன்றும். அவ்­வா­றுதான் பிழை­யாகக் கரு­தினால் அவர் செய்­வ­தெல்லாம் பிழை­யா­கவே புலப்­படும்.

இவ்­வி­ரு­தோற்­றப்­பாடு மனித உள்­ளத்தில் தோன்றும் புலக்­காட்­சியின் வெளிப்­பா­டாகும். அந்த வகையில், உல­க­ளா­விய ரீதியில் என்­றாலும், இலங்­கையில் என்­றாலும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வா­தமும், இன­வா­தி­களும் தற்­கா­லத்தில் முஸ்லிம் தொடர்­பாகக் கொண்­டுள்ள புலக்­காட்சித் தோற்­றப்­பா­டா­னது முஸ்­லிம்­களை பல்­வேறு வகை­யி­லான அழுத்­தங்­க­ளுக்கும், நெருக்­க­டி­க­ளுக்கும் உள்­ளாக்கி வரு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

உலகில் இஸ்லாம் தோன்­றிய காலத்­தி­லி­ருந்து இஸ்­லாத்­துக்கும், முஸ்­லிம்­க­ளுக்கும் எதி­ரான செயற்­பா­டுகள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. இஸ்­லாத்தின் எதி­ரிகள் இஸ்­லாத்­தையும், முஸ்­லிம்­க­ளையும் அழிக்கும் செயற்­பா­டு­களை நேர­டி­யா­கவும், மறை­மு­க­மா­கவும் முன்­னெ­டுத்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். இவ்­வ­ழிப்பு நட­வ­டிக்­கைகள் அன்று முதல் பல்­வேறு கோணங்­களில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இப்­பா­சிஸ நட­வ­டிக்­கை­களின் தொடரில் இஸ்­லாத்தின் பெயர் தாங்­கிய ஆயுதக் குழுக்­களை உரு­வாக்கி, அவற்றின் மூலம் முஸ்­லிம்­களைக் கொன்­ற­ழிப்­ப­துடன்,  முஸ்­லிம்­களின் சமூக, பொரு­ளா­தார, அர­சியல் கட்­ட­மைப்­புக்கள், உள­வியல் ரீதி­யா­கவும், ஊடகப் பயங்­க­ர­வா­தத்­தி­னூ­டா­கவும், நேரடி ஆயுத மோதல்­களின் வாயி­லா­கவும் சின்­னா­பின்­ன­மாக்­கப்­பட்டுக் கொண்­டி­ருப்­பதை உல­க­ளவில் கண்­டு­கொண்­டி­ருக்­கின்றோம்.

அத்­தோடு, இஸ்­லாத்­தை­யும் முஸ்­லிம்­க­ளையும் உல­க­ளவில் கொச்­சைப்­ப­டுத்­து­வ­தையும் காண முடி­கி­றது, பயங்­க­ர­வா­தி­க­ளா­கவும், அடிப்­ப­டை­வா­தி­க­ளா­க­வும் மத­வெ­றி­யர்­க­ளா­கவும், கொலை­கா­ரர்­க­ளா­கவும் முஸ்­லிம்கள் உல­கிற்குக் காண்­பிக்­கப்­ப­டு­கி­றார்கள். இவற்றை ஊடகப் பயங்­க­ர­வாதம் கச்­சி­த­மாக நிறை­வேற்­றிக்­கொண்­டி­ருக்­கின்­றது.

மத்­தி­ய­கி­ழக்கு நாடு­களில் இவ்­வா­றான நிலையை உரு­வாக்­கி­யுள்ள இஸ்­லாத்தின் எதி­ரிகள் முஸ்­லிம்கள் எந்த நாடு­க­ளி­லெல்லாம் வாழு­கி­றார்­களோ அங்­கெல்லாம்  இஸ்­லாத்­தையும் முஸ்­லிம்­க­ளையும் அவர்­களின் சமூக, பொரு­ளா­தார, அர­சியல் கட்­ட­மைப்­புக்­க­ளையும் அழிப்­ப­தற்­கான பாசி­ஸ­வாத நிகழ்ச்சி நிரல்­களை பல்­வேறு முக­வர்­க­ளி­னூ­டாக முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

இவ்­வா­றா­ன­தொரு நிகழ்ச்சி நிரல் இலங்கை வாழ் முஸ்­லிம்கள் மீதும் அவ்­வப்­போது  கட்­ட­விழ்த்து விடப்­பட்­டாலும், மாவ­னெல்லை, புத்­தளம் சம்ப­வங்கள் தொடர்பில் இன­வாத எண்ணம் கொண்ட ஒரு­சில அர­சி­யல்­வா­தி­களும் அவர்­களின் ஊது­கு­ழல்­க­ளாகச் செயற்­ப­டு­கின்ற ஊட­கங்­களும் வெளிப்­ப­டுத்­து­கின்ற அறிக்­கை­களும், செய்தித் தொகுப்­புக்­களும் இந்­நாட்டு முஸ்­லிம்கள் தொடர்பில் ஏனைய சமூ­கத்­தி­லுள்ள கடும்­போக்­கா­ளர்கள் கொண்­டுள்ள பிழை­யான புலக்­காட்சித் தோற்­றப்­பாட்டை அதி­க­ரிக்கச் செய்யும் வகையில் அமை­வதை அண்­மைய நாட்­களில் அவ­தா­னிக்கக் கூடி­ய­தா­க­வுள்­ளன.

கடும்­போக்­கா­ளர்­களைக் கொண்ட அமைப்­புக்கள் உரு­வாக்­கப்­பட்ட 2010 மற்றும் 2012ஆம் ஆண்டு காலப்­ப­குதி முதல் கடந்த வருட இறுதி வரை இந்­நாட்டு  முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் பாசி­ஸ­வாதச் செயற்­பா­டுகள் இவர்கள் இந்­நாட்டு முஸ்­லிம்கள் தொடர்பில் கொண்­டுள்ள புலக்­காட்­சியை நன்கு புலப்­ப­டுத்­து­கின்­றன. ஏனெனில், கடந்த பல வரு­ட­கா­ல­மாக இவ்­வ­மைப்­புக்­க­ளினால் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற வெறுப்பு பேச்­சுகள், மத நிந்­த­னைகள், எதிர்ப்பு நட­வ­டிக்­கைகள் இந்­நாட்டில் வாழும் முஸ்­லிம்­களின் அமைதி வாழ்வைச் சீர்­கு­லைத்­துள்­ள­துடன், முஸ்­லிம்­களின் வர­லாற்­றையும் இந்­நாட்­டுக்­காக அவர்­களால் புரி­யப்­பட்ட தியா­கங்­க­ளையும் கேள்­விக்­குட்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது அல்­லது மறக்கச் செய்­யப்­பட்டு வரு­கின்­றன.

ஏறக்­கு­றைய மூவா­யிரம் வருட வர­லாற்றைக் கொண்ட இலங்­கையில்   முஸ்­லிம்­களின் வர­லாறும் பழமை வாய்ந்­தது. இலங்­கையின் மொத்த மக்கள் தொகையில் 9.7 வீதம் முஸ்­லிம்கள் வாழ்ந்­து­கொண்­டி­ருக்­கி­றார்கள்.  இவ்­வாறு வாழும் முஸ்­லிம்கள் அன்றும் இன்றும் இம்­மண்­ணுக்கு விசு­வா­ச­மா­கவே வாழ்ந்து வரு­கி­றார்கள்.  இந்­நாட்டின் அத்­தனை வளர்ச்­சி­யிலும் முஸ்­லிம்கள் பங்­க­ளிப்பு செய்­தி­ருக்­கி­றார்கள். இம்­மண்­ணுக்­காக உயிர்த்­தி­யா­கமும் புரிந்­தி­ருக்­கி­றார்கள். அவ்­வாறு தேசப்­பற்­றோடு வாழும் முஸ்­லிம்கள் தொடர்பில்  கடும்­போக்கு இன­வா­திகள் கொண்­டுள்ள புலக்­காட்­சி­யா­னது முஸ்­லிம்­களை நெருக்­க­டிக்­குள் தள்ளி வரு­வதை எந்­த­வ­கை­யிலும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. இருப்­பினும் இப்­பு­லக்­காட்சி ஏன் உரு­வா­கி­யது என்ற சுய­வி­சா­ர­ணையை ஒவ்­வொரு முஸ்­லிமும் மேற்­கொள்ள வேண்­டி­யதும் காலத்தின் அவ­சி­ய­மாகும்.

முஸ்­லிம்கள் தொடர்­பான எதிர்­மறை எண்­ணம்­கொண்ட கடும்­போக்­கா­ளர்­க­ளுக்கு இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாற்றைப் பற்­றியும், அவர்­களால் இந்­நாட்­டுக்­காக புரி­யப்­பட்ட தியா­கங்கள் குறித்தும் நிதா­னத்­துடன் தெளி­வு­ப­டுத்தி முஸ்­லிம்கள் குறித்த சரி­யான புலக்­காட்­சியை ஏற்­ப­டுத்­து­வது அர­சி­யல்­வா­தி­க­ளி­னதும், உலமாக்களினதும் முஸ்லிம் சிவில்  அமைப்­புக்­க­ளி­னதும் பொறுப்­பா­க­வுள்­ளது. இப்­பொ­றுப்பைச் செய்­வ­தற்கு முன்­ன­தாக முஸ்­லிம்­க­ளுக்­கி­டை­யி­லான தவ­று­களும், பிழை­களும் திருத்­தப்­ப­டு­வதும் அவ­சி­ய­மாகும்.

இன­வா­தமும் கடும்­போக்­கா­ளர்­களும்

இந்­நாட்டின் அமை­திக்கும் சமா­தா­னத்­திற்கும் சமாதி கட்டும் நோக்­கத்­திற்­காக பௌத்த கடும்­போக்­கா­ளர்­களைக் கொண்டு உரு­வான அல்­லது உரு­வாக்­கப்­பட்ட அமைப்­புக்கள் அவை தோன்­றிய ஆண்­டு­க­ளி­லி­ருந்து இந்­நாட்டில் வாழும் சிறு­பான்மை இனங்­க­ளுக்கு எதி­ரான இன­வாத நட­வ­டிக்­கை­களை அவ்­வப்­போது முன்­னெ­டுப்­பதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

இன நல்­லி­ணக்­கத்­தையும், அமை­தி­யையும், புரிந்­து­ணர்­வையும் நேசித்து வாழும் பெரும்­பான்மை பௌத்த மக்கள் மத்­தியில் சிறு­பான்மை சமூ­கங்கள் தொடர்­பான குறிப்­பாக, இந்­நாட்டில் வாழும் முஸ்­லிம்கள் குறித்த விஷ­மத்­த­ன­மான பொய்ப் பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்து முஸ்­லிம்­களை சிங்­கள பௌத்த மக்­களின் எதி­ரி­க­ளா­கவும் இந்­நாட்டின் இறை­மைக்கும் சிங்­கள பௌத்த மக்­களின் வளர்ச்­சிக்கும், அவர்­களின் வழி­பாட்­டுக்கும் முஸ்­லிம்கள் தடை­யாக இருப்­ப­தா­கவும், அடிப்­ப­டை­வா­தத்தை உரு­வாக்க முயற்­சிப்­ப­தா­கவும் என்ற பிழை­யான புலக்­காட்­சியை  ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வதைக் காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக 2012ஆம் ஆண்டு மே மாதம் குரு­நாகல் பள்­ளி­வா­சலில் தொடங்­கிய கடும்­போக்­கா­ளர்­களின் கடும்­போக்கு வெறுப்­பு­ணர்வு பேச்­சுக்­களும், எச்­ச­ரிக்­கை­களும், அறிக்­கை­களும் இன்னும் ஓய்ந்­து­வி­ட­வில்லை என்­பதை ஒரு­சில சம்­ப­வங்கள் நிரூ­பித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றன.

கடந்த ஆட்­சியில் பொது­ப­ல­சேனா அமைப்பு உட்­பட சில கடும்­போக்­கா­ளர்­க­ளினால் ஏறக்­கு­றைய 300க்கும் மேற்­பட்ட தாக்­குதல் சம்­ப­வங்கள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன. ஆனால், அதற்­கெ­தி­ராக எவ்­வித ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை. 2015ஆம் ஆண்டு உரு­வாக்­கப்­பட்ட ஆட்­சி­யிலும், இவ்­வாட்­சிக்­கால வரு­டங்­க­ளிலும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக 100க்கும் அதி­க­மான தாக்­குதல் சம்­ப­வங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. சட்­டமும், சட்­டத்தை நிறை­வேற்­று­ப­வர்­களும் ஒரு­சில சம்­ப­வங்­க­ளுக்கு எதி­ராக செயற்­பட்­டாலும் பல சம்­ப­வங்­க­ளுக்கு எதி­ராக எவ்­வித சட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை என்­பது  இந்­நாட்டில் வாழும் முஸ்­லிம்­களின் ஆதங்­க­மா­க­வே­யுள்­ளன.

முஸ்லிம் சமூ­கத்தின் மத்­தி­யி­லுள்ள ஒரு சிலர் புரி­கின்ற தவ­று­க­ளுக்கும், பிழை­க­ளுக்கும், குற்­றங்­களும் ஒட்­டு­மொத்த சமூ­கமும் குற்­ற­மி­ழைத்­த­தாக, தவ­றி­ழைத்­த­தாக, பிழை செய்­த­தாக  இதர சமூ­கங்­களின் மத்­தியில் போலி­யான புலக்காட்சிகளை தோற்­று­வித்து சுய­ந­லன்­களை வெற்­றி­கொள்­வதற்கு ஒரு சில அர­சி­யல்­வா­தி­களும் அவர்­களின் சகாக்­களும் முயற்­சித்து வரு­வ­தையும் காண­மு­டி­கி­றது.

முஸ்­லிம்கள் தவிர்ந்த இதர சமூ­கத்தின் மத்­தியில் இடம்­பெ­று­கின்ற அல்­லது புரி­கின்ற குற்­றங்­களை பொருட்­டாகக் கொள்­ளாத அதற்குப் பெய­ரி­டாத  கடும்­போக்கு அமைப்­புக்கள். முஸ்­லி­ம்கள் சில­ரினால் புரி­கின்ற குற்­றங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு முஸ்­லிம்கள் அடிப்­ப­டை­வா­திகள், அடிப்­ப­டை­வா­தத்தை இந்­நாட்டில் உரு­வாக்க முயற்­சிக்­கி­றார்கள் என்று பாரா­ளு­மன்­றத்­திற்­குள்ளும் வெளி­யிலும் இன­வாத அர­சி­யல்­வா­திகள் தொடர்ச்­சி­யாக தெரி­வித்து வரு­வது தொடர்பில், பதவி பட்­டங்­க­ளுக்­காக கனவு கண்டும் பேரம் பேசிக் கொண்­டு­மி­ருக்­கின்ற முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் உரிய பதில்­களை வழங்க வேண்டும் என்­பது முஸ்லிம் சமூ­கத்தின் அவா­வா­கவும், எதிர்­பார்ப்­பா­க­வு­முள்­ளன.

எவ்­வித பாரிய குற்­ற­மு­மி­ழைக்­காத இந்­நாட்டு முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இஸ்­லாத்­தி­னதும் முஸ்­லிம்­க­ளி­னதும் எதி­ரி­களின் நிகழ்ச்சி நிரல்­க­ளுக்­காக தன்னை அர்ப்­ப­ணித்து செயற்­பட்டுக் கொண்­டி­ருப்­ப­தாக சந்­தே­கிக்­கப்­படும் கடும்­போக்­கா­ளர்கள் இந்­நாட்­டுக்கு பேரி­டரை ஏற்­ப­டுத்தும் போதைப்­பொருள் வர்த்­த­கர்­களின் செயற்­பா­டுகள் இந்­நாட்டை போதைப்­பொருள் வர்த்­த­கத்தின் கேந்­திர தள­மாக மாற்றிக்கொண்­டி­ருப்­பது தொடர்பில் மௌனம் காத்து வரு­வ­தையும் அவ­தா­னிக்க முடி­கி­றது. இந்­நி­லையில், இந்­நாட்டு முஸ்­லிம்கள்  தொடர்­பான தவ­றான புலக்­காட்­சியை ஏனை­ய­வர்­க­ளி­ட­மி­ருந்து இல்­லாமல் செய்­வ­தற்கு நிதா­னத்­துடன் செயற்­பட வேண்­டிய காலத்­திற்குள் முஸ்­லிம்கள் தள்­ளப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

நிதா­னமும் செயற்­பா­டு­களும்

சிறு­பான்மை சமூ­கத்­துக்கு எதி­ராக இன­வா­தத்தின் இன அழிப்பு நட­வ­டிக்­கை­யாக 1915இல் நடை­பெற்ற முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான  கல­வ­ரமும் 1983ஆம் ஆண்டு தமி­ழர்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட ஜூலைக் கல­வ­ரமும் வர­லாற்றில் பதி­யப்­பட்­டி­ருக்­கி­ன்றன.

அழி­வுகள் பல­வற்றை எதிர்­கொள்ளச் செய்த இவ்­விரு ஆண்­டு­க­ளிலும் இடம்­பெற்ற இவ்­வி­னக்­க­ல­வ­ரங்கள் அக்­கா­லங்­க­ளி­லி­ருந்த அரச இயந்­தி­ரங்­களின் ஆசிர்­வா­தங்­க­ளு­ட­னேயே நடை­பெற்­றி­ருக்­கின்­றன என்­பதை மறுப்­ப­தற்­கில்லை. அவ்­வா­றா­ன­தொரு நிலைமை உரு­வா­காமல் பார்த்­துக்­கொள்ள வேண்­டிய பொறுப்பு சம­கா­லத்தில் ஒவ்­வொரு முஸ்­லி­மையும் சார்ந்­தது. இந்­நாட்டின் சட்­டத்தின் மீது இறுதி வரை நம்­பிக்கை வைத்து சட்­டத்­தி­னூ­டாக நமது இருப்­பையும் சொத்­துக்­க­ளையும் பாது­காப்­ப­தற்கு நம்மால் முடிந்த முயற்­சி­களை முன்­னெ­டுப்­பது ஒவ்­வொரு துறை­சார்ந்­தோரின் பொறுப்­பா­க­வுள்­ளது.

பிரபல்யத்தையே மூலதனமாகக் கொண்டு செயற்படும் அரசியல் தலைமைகள் மற்றும் தனிநபர்களிடம் இந்த அசாதாரண சூழ்நிலையிலிருந்து முஸ்லிம்களைப் பாதுகாக்கும் பொறுப்பை முழுமையாக வழங்காது சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் சமகால இச்சூழ்நிலை தொடர்பில் விழிப்படைவதும், விழிப்புணர்வூட்டப்படுவதும் அவசியமாகும்.

பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் தனித்துவ இனமான முஸ்லிம்களின் அரசியல், சமூக, பொருளாதார,  கல்வி, கலாசார, மத, பண்பாட்டு, வர்த்தக நடவடிக்கைகள் பிற  சமூகத்தினர் மத்தியில் குறிப்பாக இனவாதிகள் மத்தியில் காணப்படும் முஸ்லிம்கள் குறித்தான பிழையான புலக்காட்சிகளை விருத்தி செய்யாது சரியான புலக்காட்சியை ஏற்படுத்தக்கூடியதாக அமைய வேண்டும். அதற்கான மாற்றங்கள் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டும். பணத்திற்கும் பதவி பட்டங்களுக்கும் முன்னுரிமை வழங்கி அதற்காக நேர காலங்களை செலவழித்துக் கொண்டு மாற்றாந்தாய் மனப்பாங்குடன் முஸ்லிம்கள் செயற்படுவார்களேயானால் எதிர்காலமென்பது சூனியமாகவே அமையும் என்பதை முன்கூட்டியே நினைவூட்ட வேண்டியுள்ளது.

இருப்பினும், முறையற்ற முறையில், நிதானமிழந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள், செயற்பாடுகள் இனவாதத்தின் தீயிற்கு முஸ்லிம்களை இரையாக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆதலால், இனவாதத்திற்கு எதிராக நாம் முன்னெடுக்கின்ற எத்தகைய நடவடிக்கையாக இருந்தாலும் அதன் சமகால, எதிர்கால விளைவுகள் எத்தகையதாக இருக்கும் என்பதை சுய விசாரணைக்குட்படுத்தி நிதானத்துடன் செயற்படுவது  காலத்தின் அவசியமாகவுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.