குண்டு வெடிப்பில் பதினெட்டு பேர் பலி

0 784

ஜம்மு – காஷ்மீர் மாநி­லத்தில் உள்ள புல்­வாமா மாவட்­டத்தில் இடம்பெற்ற தாக்­கு­தலில் பாது­காப்பு படை­யினர் 18 பேர் கொல்­லப்­பட்­டுள்­ள­துடன் 44 பேர் காய­ம­டைந்­துள்­ளனர்.

லேத்­போரா எனும் இடத்­துக்கு அருகில் ஜம்­மு-­ஸ்ரீ­நகர் நெடுஞ்­சா­லையில், மத்­திய ரிசர்வ் பொலிஸ் படையைச் சேர்ந்த வாக­னங்கள் சென்­ற­போது அங்கு ஐ.ஈ.டி குண்­டு­வெ­டிப்பு நிகழ்ந்­தது.

70 பேருந்­து­களில் சுமார் 2500 படை­யினர் பயணித்தாக உள்­துறை அமைச்­சகம் தெரி­வித்­துள்­ளது என ஏ.என்.ஐ செய்தி நிறு­வனம் தெரி­விக்­கி­றது. இந்தத் தாக்­கு­த­லுக்கு ஜெய்ஷ்-­, -மொ­ஹமத் அமைப்பு பொறுப்­பேற்­றுள்­ளது.

வெடி­பொ­ருட்கள் நிரம்­பிய வாகனம் ரிசர்வ் பொலிஸ் வாக­னங்கள் மீது மோதி இந்தத் தாக்­குதல் நடத்­தப்­பட்­ட­தா­கவும், பொலிஸார் அடை­யாளம் கண்­டுள்­ள­தாக பி.டி.ஐ செய்தி தெரி­விக்­கி­றது.

300 மைல் நீள­முள்ள அந்த நெடுஞ்­சாலை பாது­காப்பு முக்­கி­யத்­துவம் வாய்ந்­தது.

இந்­தி­யாவின் மத்­திய உள்­துறை அமைச்­ச­கத்தின் புள்­ளி­விபரங்­க­ளின்­படி, இந்த ஆண்டில் கடந்த ஆறு வாரங்­களில் 20 போராளிகள் காஷ்­மீரில் கொல்­லப்­பட்­டுள்­ளனர்.

அந்த மாநி­லத்தில் 2018 ஆம் ஆண்டு குறைந்­தது 250 போராளிகள், 84 பொலிஸ் படை­யினர் மற்றும் சுமார் 150 பொது­மக்கள் தாக்­குதல் சம்­ப­வங்­களில் கொல்­லப்­பட்­டுள்­ளனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.