யெமன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க பாராளுமன்றம் தீர்மானம்

0 620

யெமனில் நடந்து வரும் உள்­நாட்டுப் போரை முடி­வுக்குக் கொண்டு வர வேண்டும் என்று அமெ­ரிக்க பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இணைந்து ஒரு தீர்­மா­னத்­தினை கொண்டு வந்­துள்­ளனர்.

தென்­மேற்கு ஆசிய நாடான யெமன் நாட்டில் சுன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்­நாட்டுப் போர் நடை­பெற்று வரு­கி­றது. இதில் அதிபர் மன்­சூ­ருக்கு ஆத­ர­வாக சவூதி அரே­பியா செயற்­ப­டு­கி­றது.

ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆத­ரவு அளிக்­கி­றது.சவூதி அரே­பியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்­சி­யா­ளர்கள் மீது குறி­வைத்து யெமனில் தாக்­குதல் நடத்தி வரு­கி­றது.

கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்கு ஈரான் ஆத­ரவு அளித்து வரு­கி­றது. யெமன் அர­சுடன் இணைந்து சவூதி நடத்தும் தாக்­கு­தலை ஐக்­கிய நாடுகள் சபை முன்­னரே கண்­டித்­தது.

யெம­னி­லி­ருந்து அமெ­ரிக்கா தனது படை­களை திரும்பப் பெற வேண்டும் என்று நீண்ட நாட்­க­ளா­கவே உலக நாடுகள் வலி­யு­றுத்தி வரு­கின்­றன.

இந்­நி­லையில், அமெ­ரிக்க பாராளு­மன்ற அவையில் குடி­ய­ரசுக் கட்சி, ஜன­நா­யகக் கட்­சியைச் சேர்ந்த இரு  பாராளு­மன்ற உறுப்­பி­னர்­களும் யெமனில் போரை நிறுத்த வேண்டும் என்று தீர்­மானம் கொண்டு வந்­துள்­ளனர்.

இது­கு­றித்து கலி­போர்­னியா ஜன­நா­யகக் கட்­சியைச் சேர்ந்த பர்­பாரா லீ கூறும்­போது, ”நாங்கள் உலகின் மிகப்­பெ­ரிய மனி­தா­பி­மான நெருக்­க­டிக்கு உள்­ளா­கி­யுள்­ள­வர்­க­ளுக்கு உதவி இருக்­கிறோம். யெமன் போரில் அமெ­ரிக்கப் படைகள் பங்­கேற்று இருப்­பது அவ­மா­ன­க­ர­மா­ன­துதான்” என்றார்.

மேலும், ஈராக், சிரி­யா­வி­லி­ருந்து அமெ­ரிக்கப் படை­களை வெளியே கொண்­டு­வர அமெ­ரிக்க அதிபர் ட்ரம்ப் ஆர்­வ­மாக இருக்­கிறார். ஆனால் யெம­னி­லி­ருந்து அமெ­ரிக்கப் படைகள் வெளியேறுவது குறித்து அவர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்று அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.