ஐக்கிய அரபு அமீரகத்தில் உலக வங்கியின் புதிய கிளை அலுவலகம்

0 627

அபு­தா­பியில்  உலக வங்­கியின்  கிளை அலு­வ­லகம் ஒன்றை திறப்­பது தொடர்­பான  உடன்­ப­டிக்­கை­யொன்று கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ள­தாக  அந்­நாட்டு ஊட­கங்கள் தெரி­விக்­கின்­றன.

டுபாய் மதினத் ஜுமை­ராவில் உலக அர­சாங்­கங்­களின் உச்சி மாநாடு நடை­பெற்­றது. இந்த மாநாட்டில் 140 நாடு­களைச் சேர்ந்த 4 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட அரசுப் பிர­தி­நி­திகள் கலந்து கொண்­டனர்.

இந்த நிலையில், ஐக்­கிய அரபு அமீ­ரக நிதித்­துறை துணை அமைச்சர் ஒபைத் ஹுமைத் அல் தயார் மற்றும் உலக வங்கி குழும மத்­திய கிழக்கு பிராந்­தி­யத்­திற்­கான துணைத்­த­லைவர் பரித் பெல்கஜ் ஆகியோர் முன்­னி­லையில் அபு­தாபி  சர்­வ­தேச சந்­தைப்­ப­டுத்தல் தலைமை செயல் அலு­வலர் காலித் அல் சுவைதி மற்றும் உலக வங்கி வளை­குடா நாடு­க­ளுக்­கான இயக்­குனர் இசாம் அபு­சு­லைமான் ஆகியோர் ஒப்­பந்­தத்தி10ல் கையெ­ழுத்­திட்­டனர்.

இதன் மூலம் உலக வங்­கியின் கிளை அலு­வ­லகம் அபு­தாபி சர்­வ­தேச சந்­தையில் விரைவில் திறக்­கப்­படும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த அலு­வ­லகம் கொள்கை முடி­வுகள் தொடர்­பான ஆய்­வுகள், அர­சுத்­து­றை­களின் மேம்­பாட்டு திட்­டங்­க­ளுக்கு தேவை­யான தொழில்­நுட்ப உத­வியை வழங்­கு­வது உள்­ளிட்ட பல்­வேறு பணி­க­ளுக்கு ஏற்­ற­வ­கையில் இருக்கும்.

அமீ­ரக துணை அமைச்­சரும், அபு­தாபி சர்­வ­தேச சந்­தைப்­ப­டுத்தல் தலை­வ­ரு­மான அக­மது அலி அல் சயீக் இது­பற்றி கூறு­கையில், “உலக வங்­கியின் புதிய கிளை அலு­வ­லகம் அமீ­ரக பொரு­ளா­தார மேம்­பாட்­டுக்கு உதவியாக இருக்கும்.

மேலும் புதிய வேலைவாய்ப்பு களை உருவாக்கவும், சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளவும் உதவும்” என்று தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.