மிஹிந்தலை தாதுகோபுரத்தில் ஏறி புகைப்படம் எடுத்த இரண்டு மாணவர்கள் நேற்று கைது

0 601

மிஹிந்­தலை ரஜ­மஹா விகாரை வளா­கத்­தி­லுள்ள  பிர­பல சைத்­தியம் ஒன்­றுக்கு அருகில் உள்ள புரா­தன வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த தாது­கோ­புரம் ஒன்றின் மேல் ஏறி புகைப்­படம் எடுத்­த­தாக கூறப்­படும் இரு மாண­வர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். 18,20 வய­து­களை உடைய – திஹா­ரிய பகு­தியிலுள்ள இஸ்லாமிய கல்வி நிலையம் ஒன்றில் கற்கும் மூதூர் பகு­தியைச் சேர்ந்த இரு­வரே இவ்­வாறு  மிஹிந்­தலை பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

மூதூர் அப்துல் லதீப் வீதியைச் சேர்ந்த 20 வய­தான ரஷீத் மொஹம்மட் ஜிப்­ரியும்,  நெய்தல் நகர், மூதூர் – 1 பகு­தியைச் சேர்ந்த 18 வய­தான  ஜலால்தீன் ரிப்தி அஹமட் எனும் மாண­வ­னுமே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­தாக பொலிஸார் கூறினர்.

இவ்­வி­ரு­வரும் தொல் பொருள் அதி­கா­ரி­களால் நேற்று காலை புகைப்­படம் எடுக்கும் போது பிடிக்­கப்­பட்டு பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­தா­கவும் அதன் பின்னர் அவர்­களைக் கைது செய்­த­தா­கவும் பொலிஸார் கூறினர்.

குறித்த இரு மாண­வர்­களும் தனிப்பட்ட தேவை ஒன்றின் நிமித்தம் மிஹிந்­த­லைக்கு வந்­துள்­ள­மையும், அவர்­களில் ஒருவர் அந்த தாது­கோ­புரம் மீது ஏறி­யுள்­ள­மையும் மற்­றைய மாணவன் அவரை புகைப்­படம் எடுத்­துள்­ள­மையும் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

இந் நிலையில் புகைப்­படம் எடுக்­கப்­பட்ட கைய­டக்கத் தொலை­பே­சியும் பொலிஸ் பொறுப்பில் எடுக்­கப்­பட்­டுள்ள நிலையில், அதில் தாது கோபு­ரத்தில் பிடிக்­கப்­பட்ட மூன்று புகைப்­ப­டங்கள் இருந்­துள்­ளன.  சம்­பவம் தொடர்பில் சந்­தேக நபர்­களை தொல் பொருள் சட்டத்தின் கீழ் இன்று அனுராதபுரம் நீதிவான் முன்னிலையில்  ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.