வக்பு சட்டத்தில் புதிய திருத்தங்கள்: விரைவில் ஓய்வுபெற்ற நீதிபதியொருவரின் தலைமையில் குழு நியமனம்

அமைச்சரவை பத்திரமொன்றை தாக்கல் செய்யவும் அமைச்சர் ஹலீம் முஸ்தீபு

0 654

36 வருட கால­மாக எவ்­வித மாற்­றங்­க­ளுக்கோ திருத்­தங்­க­ளுக்கோ உட்­ப­டுத்­தப்­ப­டாத வக்பு சட்­டத்தில் காலத்­துக்­கேற்ற நவீன சீர்­தி­ருத்­தங்கள் கொண்டு வரப்­ப­ட­வுள்­ளன. இதற்­கான அமைச்­ச­ர­வையின் அங்­கீ­கா­ரத்தைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் அடுத்­த­வாரம் அமைச்­ச­ரவைப் பத்­தி­ர­மொன்­றினை அமைச்­ச­ர­வைக்குச் சமர்ப்­பிக்­க­வுள்ளார்.

வக்பு சட்­டத்தில் தேவை­யான திருத்­தங்­களை வரைபு செய்­வ­தற்­காக ஓய்­வு­பெற்ற நீதி­ப­தி­யொ­ரு­வரின் தலை­மையில் 7 பேர் கொண்ட குழு­வொன்றும் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளது.

வக்பு சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளுக்குப் பொறுப்­பாக இருக்கும் முன்னாள் நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்பு அமைச்சின் பிரதிச்  செய­லாளர் எம்.எச். மொய்­னுதீன் இது தொடர்பில் கருத்து தெரி­விக்­கையில்,

1956 ஆம் ஆண்டு அமு­லுக்கு வந்த வக்பு சட்டம் 1962 ஆம் ஆண்­டிலும் 1982 ஆம் ஆண்­டிலும் இரு தட­வைகள் திருத்­தங்­க­ளுக்கு உள்­ளா­கி­யது. அதன் பின்பு கடந்த 36 வரு­டங்­க­ளாக மாற்­றங்­க­ளுக்­குள்­ளா­க­வில்லை.

வக்பு சட்­டத்தில் காலத்­துக்­கேற்ற மாற்­றங்கள் தேவை.

பள்­ளி­வாசல் நிர்­வா­கங்­களை ஒரு கட்­ட­மைப்­புக்குள் கொண்டு வரு­வ­தற்கும் வக்பு சொத்­து­களைப் பாது­காப்­ப­தற்கும் வக்பு சட்­டத்தில் திருத்­தங்கள் தேவைப்­ப­டு­கி­றது. தற்­போ­துள்ள வக்பு சட்டம் காலத்­துக்­கேற்­ற­தாக இல்லை.

ஓர் ஊரில் இன்று 10 , 15 பள்­ளி­வா­சல்கள் இயங்­கினால் பள்­ளி­வா­சல்கள் இணைந்து சம்­மே­ள­ன­மொன்­றினை அமைத்­துக்­கொண்டு செயற்­ப­டு­கி­றார்கள்.

இவ்­வாறு பள்­ளி­வா­சல்கள் ஒன்­றி­ணைந்து சம­மே­ளனம் உரு­வாக்­கிக்­கொள்­வது தொடர்­பாக தற்­போ­துள்ள சட்­டத்தில் எதுவும் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

சில இடங்­களில் வக்பு சொத்­துக்கள் அத்­து­மீறி கையேற்­கப்­பட்­டுள்­ளன. இவ்­வா­றான சந்­தர்ப்­பங்­களில் சட்­டத்தை அமுல்­ப­டுத்­து­வதில் சில பிரச்­சி­னைகள் இருக்­கின்­றன. சில கட்­டுப்­பா­டுகள் இருக்­கின்­றன.

வக்பு சட்­டத்தின் கீழ் வக்பு சபையும் வக்பு ட்ரிபி­யு­னலும் இயங்கி வரு­கின்­றன. வக்பு ட்ரிபி­யு­னலில் விசா­ர­ணை­களின் பின்பு வழங்­கப்­படும் தீர்ப்­பு­க­ளுக்கு எதி­ராக மேன்­மு­றை­யீடு செய்­ய­மு­டியும். பள்­ளி­வாசல் நிர்­வாக சபை தெரி­வு­க­ளுக்கு எதி­ராக மேன்­மு­றை­யீடு செய்யும் பழைய நிர்­வாகம் தொடர்ந்தும் பத­வியில் இருக்கும் நிலை இன்று நில­வு­கி­றது.

பழைய நிர்­வாகம் மேன்­மு­றை­யீடு செய்­வதால் அதைத் தடை செய்­வ­தற்கு வக்பு ட்ரிபி­யு­ன­லுக்கு அதி­கா­ர­மில்லை.

வக்பு சொத்துகளைப் பாதுகாப்பதற்கும் பள்ளிவாசல்களில் முறையான நிர்வாகக் கட்டமைப்பினை நிலை நிறுத்துவதற்கும் வக்பு சட்டத்தில் திருத்தங்கள் அவசியமாகும்.

இச் சட்டத்தில் திருத்தங்கள் இவ் வருடத்துக்குள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக் கப்படுகின்றன என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.