180 ஐ.எஸ்.அங்கத்தவர்களை ஈராக் கைது செய்தது

0 620

ஈராக்கின் மேற்கு அன்பார் மாகா­ணத்தில் 180 ஐ.எஸ்.அங்­கத்­த­வர்­களை ஈராக் பாது­காப்புப் படை­யினர் கைது செய்­த­தாக கடந்த திங்­கட்­கி­ழமை அந்­நாட்டின்  உள்­துறை அமைச்சு தெரி­வித்­தது.

தாம், எல்பு நெம்ர் பழங்­கு­டியைச் சேர்ந்த பொது­மக்கள் பல­ரையும், முஸ்­தபா எல்- அஸ்­ஸாரி என்ற இரா­ணுவ வீர­ரையும் பயங்­க­ர­வா­திகள் கொன்­ற­தா­கவும் பொது­மக்கள் மற்றும் இரா­ணு­வத்­தி­னரை இலக்கு வைத்து குண்டுத் தாக்­கு­தல்­களை மேற்­கொண்­ட­தா­கவும் பயங்­க­ர­வா­திகள் ஏற்­றுக்­கொண்­டுள்­ளனர். அதனைத் தொடர்ந்து அனைத்து பயங்­க­ர­வா­தி­க­ளுக்கும் மர­ண­தண்­டனை விதிக்­கப்­பட்­ட­தாக உள்­துறை அமைச்சுப் பேச்­சாளர் ஒருவர் தெரி­வித்தார்.

2014 ஆம் ஆண்டு கோடை காலத்தின் போது ஈராக்கின் இரண்­டா­வது பெரிய நக­ர­மான மௌசூல் உள்­ள­டங்­க­லாக வடக்கு மற்றும் மேற்கு ஈராக்கின் பெரும்­பா­லான பகு­தி­களை ஐ.எஸ்.பயங்­க­ர­வா­திகள் கைப்­பற்­றினர்.

2017 ஆம் ஆண்டு பயங்­க­ர­வாதக் குழு­வுக்கும் அமெ­ரிக்க கூட்டுப் படையின் ஆத­ர­வு­ட­னான ஈராக்­கிய இரா­ணு­வத்­தி­ன­ருக்கும் இடை­யே­யான மூன்­றாண்டு கால யுத்தத்தினைத் தொடர்ந்து ஐ.எஸ். தோற்கடிக்கப்பட்டதாக பக்தாதில் அதிகாரிகள் பிரகடனம் செய்தனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.