பைஸரே மாகாண சபை தேர்தலை பிற்போட்டார்

சு.க.வை சாடுகிறார் துஷார இந்துனில்

0 634

மாகாண சபை தேர்­தலை  கால­வ­ரை­ய­றை­யின்றி  பிற்­போ­டு­வ­தற்­கான ஏற்­பா­டு­களை முன்னாள் மாகாண சபை மற்றும் உள்­ளூராட்­சி­மன்ற அமைச்சர்   பைஸர்  முஸ்­த­பாவே முன்­னெ­டுத்தார். தற்­போது ஐக்­கிய தேசியக் கட்­சி­யிடம்  மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி மன்ற அமைச்சு பொறுப்­பாக்­கப்­பட்­டுள்­ளது.  தேர்தல் முறைமை தொடர்பில் காணப்­ப­டு­கின்ற முர­ண்பா­டு­களை  திருத்­திக்­கொண்டு இவ்­வ­ரு­டத்தின் இரண்டாம் காலாண்­டுக்குள் மாகாண சபை தேர்­தலை நடத்­து­வ­தற்கே முயற்­சிக்­கிறோம் என  குரு­நாகல் மாவட்ட ஐக்­கிய தேசிய கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் துஷார இந்­துனில் தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைமை காரி­யா­ல­யத்தில் நேற்று  புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்­து­ரைக்­கும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

மாகாண சபை தேர்­தலை ஐக்­கிய தேசியக் கட்சி பிற்­போ­டு­கின்­றது என்று கடந்த காலங்­களில் பொது­ஜன  பெர­முன  உறுப்­பி­னர்கள் குற்றம் சுமத்­தி­னார்கள் . தற்­போது இவர்­க­ளுடன் சுதந்­திரக் கட்­சி­யி­னரும் பங்­கா­ளி­க­ளாக இணைந்­து­கொண்டு   எம்­மீது   முறை­யற்ற விதத்தில் பழி சுமத்­து­கின்­றனர். மாகாண சபை தேர்­தலை இவர்கள் குறிப்­பி­டு­வது போன்று விரை­வாக நடத்த முடி­யாது. பழைய  தேர்தல் முறையில்  மாகாண சபை தேர்தல் நடத்­தப்­பட வேண்­டு­மாயின் அது  அனைத்து இன மக்­க­ளையும் திருப்­திப்­ப­டுத்தக் கூடி­ய­தாகக் காணப்­பட வேண்டும். ஆனால் பழைய தேர்தல் முறைமை ஒரு தரப்­பி­ன­ருக்கு அதி­ருப்­தி­யினை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவே காணப்­பட்­டது.

மாகாண சபை  தேர்­தலை  மையப்­ப­டுத்­தியே எல்லை நிர்­ணய அறிக்கை தயா­ரிக்­கப்பட்­டது. இவ்­வ­றிக்­கையும் பாரா­ளு­மன்­றத்­தினால் தோற்­க­டிக்­கப்­பட்­டது.  இவ்­வி­ட­யமும் தேர்தல் பிற்­போ­டு­வ­தற்­கான ஒரு கார­ணி­யா­கவே உள்­ளது. பல்­வேறு மாறு­பட்ட விட­யங்­களை முன்­னி­லைப்­ப­டுத்தி மாகாண சபை தேர்­தலை  முன்னாள் மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்­சி­மன்ற அமைச்சர் பைஸர் முஸ்­த­பாவே  பிற்­போ­டு­வ­தற்­கான வழி­மு­றை­களை ஏற்­ப­டுத்திக் கொடுத்­துள்ளார்.

தற்­போது ஐக்­கிய தேசியக் கட்­சியே தனித்து ஆட்சி செய்­கின்­றது. எமது பெரும்­பான்மை ஆத­ர­வுடன் அதி­கா­ரத்­திற்கு வந்­த­வர்கள் செய்த அர­சியல் துரோகம் பல அர­சியல் ரீதி­யான  பாடங்­களை கற்றுக் கொடுத்­துள்­ளது. மாகாண சபைகள் மற்றும்  உள்­ளூ­ராட்சி மன்ற அமைச்சு ஐக்­கிய தேசியக் கட்­சி­யிடம் பொறுப்­பாக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போது மாகாண சபை தேர்­தலை விரை­வாக நடத்­து­வ­தற்­கான  அனைத்து ஏற்­பா­டு­களும் இடம்­பெற்று வரு­கின்­றன. வெகு­வி­ரைவில்  முறை­யான ஒரு தேர்தல் திருத்த முறை­மையின் கீழ் அனைத்து மாகா­ணங்­க­ளுக்கும் ஒரே நாளில் மாகாண சபை தேர்தல் இடம் பெறும்.  முரண்­பா­டு­க­ளுக்கு மத்­தியில் தேர்­தலை நடத்­தினால் அதன் விளைவு முறை­யான ஒரு நிர்­வா­கத்தை ஏற்­ப­டுத்த தடை­யாக அமையும்.

பொது­மக்­க­ளுக்கு  சேவைகள் வழங்­கும்­போது  ஜனா­தி­பதி, பாரா­ளு­மன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் ஒன்­றுக்­கொன்று தொடர்­புப்­பட்­ட­தாக காணப்­பட வேண்டும். அப்­போதே முறை­யான சேவை­களை வழங்க முடியும். ஆனால் நடை­மு­றையில்  பாரிய முரண்­பா­டு­களே காணப்­ப­டு­கின்­றன. ஐக்­கிய தேசியக் கட்சி முன்­னெ­டுக்­கின்ற அனைத்து விட­யங்­க­ளிலும் ஜனா­தி­ப­தியும் அவர் தரப்­பி­னரும்  தடை­க­ளையே ஏற்­ப­டுத்­து­கின்­றனர். இதன் கார­ண­மா­கவே ஐக்­கிய தேசியக் கட்சி  முதலில் ஜனா­தி­பதி தேர்­தலை கோரு­கின்­றது. தேசிய அர­சாங்கம் தொடர்பில் ஜனா­தி­ப­தியும், எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த  ராஜபக் ஷவும் தெளிவில்லாமலே மாறுபட்ட கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்கள். அரசாங்கத்தை பலப்படுத்தி மாறுபட்ட ஓர் அரசியல் முறைமையினை உருவாக்கவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.  2015ஆம் ஆண்டு தேசிய அரசாங்கத்தின் ஊடாகவே சிலருக்கு அரசியல் அந்தஸ்து கிடைத்தது என்பதை ஒருபோதும் எவரும் மறந்துவிட முடியாது என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.