முஸ்லிம் பெண் பரீட்சார்த்திகளுக்கான உடை குறித்து சுற்று நிருபத்தில் உள்ளடக்க முஸ்தீபு

0 715

அர­சாங்க பரீட்­சை­க­ளுக்குத் தோற்றும் முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­தி­க­ளுக்­கான உடை எவ்­வாறு அமை­ய­வேண்டும் என்­பது தொடர்பில் ஆராய்ந்து அந்த உடையை கல்வி அமைச்சின் சுற்று நிரு­பத்தில் உள்­ள­டக்கிக் கொள்­வ­தற்கு முஸ்லிம் கல்வி மாநாடு, சிவில் சமூக அமைப்­புகள், அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை, ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் என்­பன திட்­ட­மிட்­டுள்­ளன. கடந்த காலங்­களில் பரீட்­சை­க­ளுக்குத் தோற்­றிய

முஸ்லிம் மாண­விகள் சிலர், அவர்­க­ளது ஆடை தொடர்பில் பரீட்சை மண்­டப அதி­கா­ரி­களால் அசௌ­க­ரியங்­க­ளுக்­குள்­ளாக்­கப்­பட்­டனர். நிகாப் அணிந்து சென்ற மாண­விகள் மற்றும் சில இடங்­களில் அபா­யா­வுக்கும் மறுப்புத் தெரி­விக்­கப்­பட்­டது. இதற்கு ஒரு தீர்வு பெற்­றுக்­கொள்­வ­தற்­கா­கவே  பரீட்­சை­க­ளுக்குத் தோற்றும் முஸ்லிம் மாண­வி­களின் ஆடை எவ்­வாறு அமைய வேண்­டு­மெனத்  தீர்­மா­னிக்­கப்­ப­ட­வுள்­ளது.

இது தொடர்­பான கூட்­ட­மொன்று எதிர்­வரும் சனிக்­கி­ழமை காலை 9 மணிக்கு வெள்­ள­வத்தை– இஸ்­லா­மிய கற்கை நிலைய மண்­ட­பத்தில் நடை­பெ­ற­வுள்­ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்­ஸிலின் தலைவர் என்.எம். அமீன் தலை­மையில் நடை­பெறும் இக்­கூட்­டத்தில் முஸ்லிம் கல்வி மாநாட்டின் தலைவர் பேரா­சி­ரியர் ஏ.ஜி.ஹுசைன் இஸ்­மாயில், முன்னாள் பரீட்சை ஆணை­யாளர் ஏ.எஸ்.மொஹமட் ஆகியோர் கருத்­து­களை வழங்­க­வுள்­ளனர்.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பிர­தி­நி­தி­களும் கருத்­து­களை முன்­வைக்­க­வுள்­ளனர். இக்­கூட்­டத்தில் பரீட்சை எழுதும் முஸ்லிம் மாண­விகள் இஸ்­லா­மிய கலா­சா­ரத்­துக்கு உட்­பட்ட எவ்­வா­றான ஆடை அணி­ய­வேண்டும் என்ற தீர்­மானம் ஒன்று எட்­டப்­ப­ட­வுள்­ளது.

தீர்­மா­னிக்­கப்­படும் ஆடை கல்­வி­ய­மைச்சின் அங்­கீ­காரம் பெறப்­பட்டு சுற்­று­நி­ருபம் மூலம் பரீட்சைத் திணக்­க­ளத்­துக்கு அனுப்பி வைக்­கப்­ப­டு­மெ­னவும், பரீட்சைத் திணைக்­களம் மூலம் பரீட்சை மண்­ட­பங்­களின் அதி­கா­ரி­க­ளுக்கு அனுப்­பப்­படுமெனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்­ஸிலின் தலைவர் என்.எம்.அமீன் தெரி­வித்தார்.

முஸ்லிம் மாணவிகள் பரீட்சை எழுதுவதற்கு செல்லும்போது பரீட்சை மண்டப அதிகாரிகளால் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கப்படுவது இதன் மூலம் நிவர்த்திக்கப்படுமெனவும் அவர் கூறினார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.