பலஸ்தீனுக்கான ஆதரவை மீளவும் உறுதிப்படுத்தினார் சவூதி அரேபிய மன்னர்

0 590

மத்­திய கிழக்கில் சமா­தா­னமும் பாது­காப்பும் என்ற தலைப்பில் அமெ­ரிக்கா தலை­மையில் மாநாடு நடை­பெ­று­வ­தற்கு முன்­ன­தாக ‘கிழக்கு ஜெரூ­ச­லத்தைத் தலை­ந­க­ராகக் கொண்ட சுதந்­திர பலஸ்­தீன தேசம்’ என்­பதில் சவூதி அரே­பியா உறு­தி­யாக இருப்­ப­தாக சவூதி அரே­பிய மன்னர் சல்மான் தெரி­வித்தார்.

சவூதி அரே­பியத் தலை­நகர் றியா­திற்கு விஜயம் செய்­துள்ள பலஸ்­தீன ஜனா­தி­பதி மஹ்மூட் அப்­பாஸை நேற்று முன்தினம் சந்­தித்து சவூதி அரே­பிய மன்னர் அவ­ருடன் பேசினார். ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட கிழக்கு ஜெரூ­ச­லத்தைத் தலை­ந­க­ராகக் கொண்ட சுதந்­திர தேசத்­திற்­கான பலஸ்­தீ­னத்­தி­னதும் அதன் மக்­க­ளி­னதும் உரி­மைக்­காக தனது நாடு நிரந்­த­ர­மாக ஆத­ர­வுடன் இருக்கும் எனவும் மன்னர் சல்மான் தெரி­வித்தார்.

போலந்தின் தலை­நகர் வோர்­சோலில் நடை­பெறும் மாநாட்டில் இஸ்­ரே­லுக்கும் பலஸ்­தீ­னத்­திற்கும் இடை­யேயான சமா­தா­னத்­திற்­கான முன்­மொ­ழி­வினை அமெ­ரிக்கா பிரஸ்­தா­பிக்க எதிர்­பார்த்­தி­ருக்கும் நிலை­யி­லேயே இந்த உறு­தி­மொழி வழங்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த மாதம் இம் மாநாடு தொடர்பில் அறி­வித்த அமெ­ரிக்க இரா­ஜாங்க செய­லாளர் மைக் பொம்­பியோ, உலக நாடு­களின் வெளி­நாட்­ட­மைச்­சர்கள் பங்­கு­பற்றும் குறித்த மாநாட்டில் மத்­திய கிழக்கில் பல­வீ­னத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான ஈரானின் செல்­வாக்கு தொடர்பில் கவ­னத்தில் கொள்­ளப்­படும் எனத் தெரி­வித்­தி­ருந்தார்.

முக்­கி­ய­மான ஐரோப்­பிய நாடுகள் குறைந்­த­ளவே கரி­சனை காட்­டி­யதைத் தொடர்ந்து அமெ­ரிக்­காவும் போலந்தும் தமது நிகழ்ச்சி நிர­லி­லி­ருந்து பின்­வாங்கி இந்த ஒன்று கூடலில் ஈரான் தொடர்பில் மாத்­திரம் கருத்தில் கொள்­ளாது மத்­திய கிழக்கு என்ற அடிப்­ப­டையில் விரி­வாகக் கவனம் செலுத்­தப்­படும் எனத் தெரி­வித்­தன.

அப்பாஸ், சவூதி மன்­ன­ருக்கு பலஸ்­தீன ஆள்­புலப் பிர­தே­சங்­களில் தற்­போது காணப்­படும் நிலை­மைகள் பற்றி விளக்கிக் கூறி­ய­தோடு, பலஸ்­தீன மக்கள், நிலங்கள் மற்றும் புனித நக­ரங்­க­ளுக்கு எதி­ராக இஸ்­ரே­லினால் தொடர்ந்து மேற்­கொள்­ளப்­படும் வன்­மு­றை­களின் பின்­பு­லத்தில் அர­சியல் முன்­னெ­டுப்­புக்கள் மற்றும் நூற்­றாண்டு ஒப்பந்தம் என அழைக்கப்படும் ஒன்றை நிறைவேற்றிக்கொள்ள அமெரிக்கா எடுக்கும் பிரயத்தனங்கள் குறித்தும் கலந்துரையாடியதாக பலஸ்தீன உத்தியோகபூர்வ செய்தி முகவரகமான வபா தெரிவித்துள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.