துருக்கியில் உலங்கு வானூர்தி விபத்து நான்கு இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

0 672

கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று இஸ்­தான்­பூலில் உலங்கு வானூர்­தி­யொன்று அவ­ச­ர­மாகத் தரை­யி­றங்­கி­ய­போது ஏற்­பட்ட விபத்தில் குறைந்­தது நான்கு இரா­ணுவ வீரர்கள் பலி­யா­ன­தாக மாகாண ஆளுநர் தெரி­வித்தார்.

உள்ளூர் நேரப்­படி பிற்­பகல் 1.30 மணி­ய­ளவில் செக்­மெ­கோயி மாவட்­டத்தில் குடி­யி­ருப்புப் பகு­திக்­க­ருகில் இந்த உலங்கு வானூர்தி விபத்து நிகழ்ந்­துள்­ள­தாக அலி எர்­லி­காயா ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிடம் தெரி­வித்தார். விபத்­திற்­கான காரணம் இது­வரை தெரி­ய­வ­ர­வில்லை எனவும் அவர் தெரி­வித்தார்.

இறந்­தோரின் எண்­ணிக்­கை­யினை டுவிட்டர் மூலம் உறு­திப்­ப­டுத்­திய தேசிய பாது­காப்பு அமைச்சு விபத்து தொடர்பில் விசா­ரை­ணகளை ஆரம்­பித்­துள்­ளது. விரி­வான விசா­ர­ணை­களின் பின்னர் முடி­வுகள் வெளி­யி­டப்­படும் எனவும் அமைச்சு குறிப்­பிட்­டுள்­ளது.

துருக்­கிய ஜனா­தி­பதி ரிசெப் தைய்யிப் அாதுர்கான் விபத்து தொடர்பில் தனது அனு­தா­பத்­தினை வெளி­யிட்­டுள்ளார். எமக்கு ஏற்­பட்­டுள்ள இழப்பின் வலி­யினை தேசத்­துடன் இணைந்து அனு­ப­விக்­கின்றோம் என அவர் தனது அனு­தாபச் செய்­தியில் குறிப்­பிட்­டுள்ளார்.

பாரா­ளு­மன்ற சபா­நா­யகர் பினாலி இல்ட்ரிம் தனது கவ­லை­யி­னையும் அனு­தா­பத்­தி­னையும் டுவிட்டர் மூலம் வெளி­யிட்­டுள்ளார். பிர­தான எதிர்க்கட்சியான குடியரசு மக்கள் கட்சியின் தலைவரான கெமால் கிலிக்டாரோக்லுவும் தனது அனுதாபத்தை வெளியிட்டுள்ளார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.