பொலிஸ் கான்ஸ்­டபிள் மீது தாக்­குதல்: சமிந்த விஜே­சிறி எம்.பி.யை கைது­செய்ய நட­வ­டிக்கை

வீடு, அலு­வ­ல­கத்­திலும் சோதனை

0 709

பண்­டா­ர­வளை தபால் நிலையம் முன்­பாக வைத்து, போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்­டபிள் ஒருவர் மீது தாக்­குதல் நடாத்­திய குற்­றச்­சாட்டில் சந்­தே­கத்தின் பேரில் பதுளை மாவட்ட ஐ.தே.க. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சமிந்த விஜே­சி­ரியைக் கைது செய்ய விசேட நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்­துள்­ள­தாக பண்­டா­ர­வளை பொலிஸார் தெரி­வித்­தனர்.அதன்­படி நேற்று குறித்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரின் வீடு மற்றும் அலு­வ­ல­கத்தை சோத­னைக்­குட்­ப­டுத்­தி­ய­தா­கவும் எனினும் அவர் அப்­போது அங்­கி­ருக்­க­வில்லை எனவும் பொலிசார் கூறினர்.

இந்­நி­லையில் குறித்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பொலிஸ் நிலை­யத்தில் சர­ண­டை­யலாம் என நம்­பு­வ­தா­கவும் பொலிசார் கூறினர்.

அரச ஊழியர் ஒரு­வ­ருக்கு தடையை ஏற்­ப­டுத்தல், தாக்­குதல் நடாத்தி காயம் ஏற்­ப­டுத்தல் உள்­ளிட்ட குற்­றச்­சாட்­டுக்கள் சமிந்த விஜே­சிரி மீது சுமத்­தப்­பட்­டுள்­ளன.

நேற்று முன்­தினம் மாலை, பொலிஸ் போதைப்­பொருள் தடுப்புப் பிரிவின் கான்ஸ்­டபிள் செலுத்­திய ஜீப் வண்டி குறித்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரின் வாக­னத்தை முந்திச் சென்­றதால், எம்.பி.யின் வாகனம்  குறித்த ஜீப்பை வழி மறித்து நிறுத்­தி­யி­ருந்­தது. இத­னை­ய­டுத்து  குறித்த பொலிஸ் கான்ஸ்­டபிள் மீது தாக்­கு­தலும் நடாத்­தப்­பட்­ட­தாக முறைப்­பாட்டில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இது­தொ­டர்பில் சமிந்த விஜே­சிரி எம்.பி.யின் சாரதி கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பாராளுமன்ற உறுப்பினரையும் அவரது மெய் பாதுகாவலரையும் கைது செய்ய பொலிசார் தேடி வருகின்றனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.