உரிய நேரத்திற்கு ஆஜராக வேண்டும்

கோத்தாவை எச்சரித்தார் நீதிபதி

0 704

இலங்கை காணி மீட்பு மற்றும் அபி­வி­ருத்தி கூட்­டுத்­தா­ப­னத்­துக்கு சொந்­த­மான 33.9 மில்­லியன் ரூபா பணத்தை நம்­பிக்கை மோசடி செய்­தமை தொடர்பில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ உள்­ளிட்ட 7 பிர­தி­வா­தி­க­ளுக்கு எதி­ராக தொட­ரப்­பட்­டுள்ள வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு வந்தபோது, முதல் பிர­தி­வா­தி­யான கோத்தா மன்றில் ஆஜ­ராகி இருக்­க­வில்லை. அத்­துடன் ஆறாம் பிர­தி­வா­தியும் மன்றில் இருக்­க­வில்லை. இந் நிலையில் பெயர் வாசிக்­கப்பட்ட போது 2,3,4,5,7 ஆம் பிர­தி­வா­திகள் மட்­டுமே பிர­தி­ வாதிக் கூண்டில் ஏறினர்.

இதன்­போது 6 ஆம் பிர­தி­வா­திக்கு சத்­திர சிகிச்சை ஒன்று செய்­யப்ப்ட்­டுள்­ள­தாகக் கூறி அவ­ரது மருத்­துவ சான்­றிதழ் மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்­டது.
எனினும், கோத்தா மன்றில் ஆஜ­ரா­க­வில்லை. இந்­நி­லையில் வழ­க்கு விசா­ரணை ஆரம்­பிக்­கப்­பட்டு சிறிது நேரத்­தி­லேயே கோத்தா மன்­றுக்கு வரு­கை­தந்தார்.

வரும் வழியில் வாகன நெரிசல் கார­ண­மாக தன்னால் உரிய நேரத்­துக்கு மன்­றுக்கு வரு­கை­தர முடி­யாமல் போன­தாக கோத்தா தரப்பில் மன்­றுக்குத் தெரி­விக்­கப்­பட்­டது.

இதன்­போது, பிர­திவா­தி­யான கோத்­தாவை உரிய நேரத்தில் மன்றில் ஆஜ­ராக எச்­ச­ரிக்­கு­மாறு அரசின் சிரேஷ்ட பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் நீதி­ப­தி­களை கோரினார்.

இதனை ஏற்­றுக்­கொண்ட நீதி­மன்றின் தலைமை நீதி­பதி சம்பத் அபேகோன், அனைத்து பிர­தி­வா­தி­களும் வழக்கு விசாரணைகளின் போது உரிய நேரத்தில் மன்றில் ஆஜராக வேண்டுமென எச்சரித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.