காதி நீதிமன்ற கட்டமைப்பு சீரமைக்கப்பட வேண்டும்

0 1,018

எமது நாட்டில் தற்­போது 1951 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டமே அமுலில் உள்­ளது. இச்­சட்­டத்தில் காலத்­துக்­கேற்ற திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டு­மென கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்­ட­த­னை­ய­டுத்து 2009 ஆம் ஆண்டு அப்­போ­தைய நீதி­ய­மைச்­ச­ராக இருந்த மிலிந்த மொர­கொ­ட­வினால் இச்­சட்­டத்தில் தேவை­யான திருத்­தங்­களைச் சிபா­ரிசு செய்­வ­தற்­காக குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டது. குழுவின் தலை­வ­ராக முன்னாள் நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் நிய­மிக்­கப்­பட்டார்.

சுமார் பத்து வரு­டங்கள் கடந்­து­விட்ட நிலையில் தற்­போதே முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்­கான இறுதி முயற்­சிகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ர­ள­விடம் சமர்ப்­பிக்­கப்­பட்ட முஸ்லிம் விவாக, விவா­க­ரத்­துச்­சட்ட திருத்த சிபா­ரி­சுகள் அடங்­கிய அறிக்கை இறுதி தீர்­மா­னத்­துக்­காக முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.  அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள இந்தப் பொறுப்­பினை முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் வழங்­கி­யுள்ளார்.

சலீம் மர்சூப் தலை­மை­யி­லான சட்ட திருத்த சிபா­ரிசு குழு கடந்த 9 வரு­டங்­க­ளாக  பல அமர்­வு­களை நடாத்தி சிவில் சமூக அமைப்­புகள், புத்­தி­ஜீ­விகள் உட்­பட பொது­மக்­களின் கருத்­துக்­க­ளையும் உள்­வாங்கி அறிக்­கையை தயா­ரித்த அறிக்கை தயா­ரிக்­கப்­பட்ட போது சில விட­யங்­களில் குழு அங்­கத்­த­வர்­க­ளுக்­கி­டையே கருத்து முரண்­பா­டுகள் உரு­வா­ன­தை­ய­டுத்து குழு இரண்­டாக பிள­வுப்­பட்­டமை தவிர்க்க முடி­யாமல் போனது.

குழுவின் அங்­கத்­த­வர்கள் சலீம் மர்சூப் தலை­மை­யிலும், ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா தலை­மை­யிலும் பிள­வு­பட்­டனர். அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய அதன் தலை­வரும், செய­லா­ளரும் பாயிஸ் முஸ்­த­பாவின் குழுவைச் சார்ந்­தனர். இதனால் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் 10 விட­யங்­களில் இவர்கள் முரண்­பட்­டனர். பாயிஸ் முஸ்­தபா தலை­மை­யி­லான குழு தங்­க­ளது கருத்­து­களை உள்­ள­டக்கி தனி­யான அறிக்­கையை தயா­ரித்து குழுவின் தலைவர் சலீம் மர்­சூப்­பிடம் வழங்­கி­யது. இந்த அறிக்­கை­களே  நீதி­ய­மைச்­ச­ரிடம் கைய­ளிக்­கப்­பட்­டன. அறிக்­கையைப் பெற்றுக் கொண்­டதும் நீதி­ய­மைச்சர் பிள­வு­பட்­டி­ருந்த குழு­வி­னரை அழைத்து சட்ட திருத்­தங்­களில் ஒரு இணக்­கப்­பாட்­டினை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு முயற்­சித்தார். ஆனால் அம்­மு­யற்சி தோல்­வி­யிலே முடிந்­தது.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை ஷரீ­ஆ­வுக்கு உட்­பட்டே திருத்­தங்கள் இடம்­பெற வேண்­டு­மென வலி­யு­றுத்­தி­யது. பெண்கள் காதி­நீ­தி­ப­தி­க­ளாக நிய­மிப்­பது உட்­பட தலாக், பல­தார மணம், வொலி, மார்க்க பிரிவு போன்ற விட­யங்­களில் சலீம் மர்சூப் தலை­மை­யி­லான குழுவின் சிபா­ரி­சு­களில் மாற்­றங்கள் செய்­யப்­பட வேண்­டு­மென உலமா சபை வாதிட்­டது.

இந்தச் சூழ்­நி­லையில் இறுதித் தீர்­மானம் ஒன்­றினை எட்ட முடி­யாத நிலை­யிலே இப்­பொ­றுப்­பினை அமைச்சர் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் வழங்­கி­யுள்ளார். முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஏனைய சமூகம் சார்ந்த விட­யங்­களில் அசி­ரத்­தை­யாக இருப்­பது போன்று இவ்­வி­ட­யத்­திலும் இருக்­கக்­கூ­டாது. இது எமது சட்­டத்தில் திருத்­தங்­க­ளுக்­கான  சந்­தர்ப்பம், உட­ன­டி­யாக செயலில் இறங்க வேண்டும். கால­தா­ம­தங்கள் ஏற்­பட்டால் அர­சியல் மாற்­றங்கள் எமது சட்­டத்தில் திருத்­தங்­களை ஸ்தம்­பிக்கச் செய்து விடலாம்.

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் சட்­டத்­த­ர­ணி­களும் இருக்­கி­றார்கள். நாம் விரைவில் ஒன்­று­கூடி தீர்­மா­னங்­களை மேற்­கொள்வோம் என அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் தெரி­வித்­துள்­ளார்.

சட்­டத்தில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­ப­டும்­போது காதி­நீ­தி­மன்ற கட்­ட­மைப்பு சீர் செய்­யப்­ப­ட­வேண்டும். காதிநீதிபதிகளுக்கு நாளாந்தம் சில நூறு ரூபாய்களே தற்போது கொடுப்பனவாக வழங்கப்படுகின்றது. நீதிமன்ற கட்டட வசதிகள் வழங்கப்படவில்லை. போக்குவரத்து கொடுப்பனவுகள், காரியாலய வசதி, காரியாலய உதவியாளர் வசதி எதுவும் வழங்கப்படவில்லை. அவர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படுவதில்லை. அதனால் நிர்வாகக் கட்டமைப்பு சீரமைக்கப்பட்டாலே சட்டத்தில் திருத்தங்களை அமுல்படுத்துவதில் உச்ச நிலையினை எய்த முடியும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.