முஸ்லிம்கள் போதைப்பொருள் கடத்துவதாக நான் கூறவில்லை

மஹிந்த ராஜபக் ஷ குறிப்பிட்டதை சுட்டிக்காட்டினேன் என்கிறார் ரஞ்சன்

0 633

முஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் ஒரு­போதும் தெரி­விக்­க­வில்லை. கம்­பஹா மாவட்­டத்தில் இயங்கும்  சமூ­க­வ­லைத்­தளம் ஒன்று எனது பேச்சை திரி­பு­ப­டுத்தி செய்தி வெளி­யிட்­டுள்­ள­தென ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராம­நா­யக்க தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் கோப்­குழு அறிக்கை தொடர்­பான சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணையில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

தனியார் ஊட­க­மொன்றில் கலந்­து­கொண்டு அண்­மையில் போதைப்­பொருள் ஒழிப்பு சம்­பந்­த­மாக கலந்­து­ரை­யா­டினேன். இதன்­போது மஹிந்த ராஜபக் ஷ ஜனா­தி­ப­தி­யாக இருக்­கும்­போது, நீர்­கொ­ழும்பு பிர­தே­சத்தில் நிமல் லான்­சாவின் வீட்டை திடீ­ரென சுற்­றி­வ­ளைத்த அதி­ர­டிப்­ப­டை­யினர், அங்கு போதைப்­பொருள் கடத்­த­லுடன் தொடர்­பு­டைய ஒருரை கைது­செய்­துள்­ளனர்.

இது­தொ­டர்­பாக எஸ்.பி. திஸா­நா­யக்க மஹிந்த ராஜபக் ஷவிடம் போதைப்­பொருள் கடத்­தலை கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மெனத் தெரி­வித்­துள்ளார். இதற்கு மஹிந்த ராஜபக் ஷ எஸ்.பி. திஸா­நா­யக்­க­விடம், “அதி­ர­டிப்­ப­டை­யி­னரால் கைது செய்­யப்­பட்­டவர் போதைப்­பொருள் கொண்­டு­வ­ரு­பவர் அல்ல. அவர் விநி­யோ­கிக்கும் நட­வ­டிக்கை மாத்­தி­ரம்தான் மேற்­கொள்­கிறார். முஸ்­லிம்­களும் தமி­ழர்­களும் போரா இனத்­த­வர்­களும் போதைப்­பொருள் கொண்­டு­வந்து சம்­பா­திக்­கும்­போது சிங்­கள மக்கள் அதனை கொண்­டு­வந்து இலா­ப­மீட்­டினால் அதி­லி­ருக்கும் தவறு என்ன?” என்று மஹிந்த ராஜபக் ஷ கேட்­ட­தாக எஸ்.பி. திஸா­நா­யக்க எனக்குத் தெரி­வித்தார். அத­னைத்தான் நான் குறித்த தனியார் ஊடக கலந்­து­ரை­யா­டலில் தெரி­வித்தேன்.

ஆனால் எனது பேச்சை திரி­பு­ப­டுத்தி ‘கம்­பஹா சிங்­கயோ’ என்ற சமூ­க­வ­லைத்­தளம், முஸ்­லிம்­கள்தான் போதைப்­பொருள் கொண்­டு­வ­ரு­வ­தாக நான் தெரி­வித்­தாக செய்தி வெளி­யிட்­டுள்­ளது.  நான் ஒரு­போதும் இன­வா­த­மாக எந்தக் கருத்­தையும் தெரி­வித்­த­தில்லை. கம்பஹாவில் முஸ்லிம்களுடன் முரண்பட்டுக்கொள்ள வைக்கும் முயற்சியாகவே இது இருக்கலாம். அதனால் செய்திகளை திரிபுபடுத்தும் மோசமான நடவடிக்கைகளை சமூக வலைத்தளங்கள் மேற்கொள்ளக்கூடாது என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.