முஸ்லிம் அடிப்­ப­டை­வாதம் தலை­தூக்கும் அபா­ய­முள்­ளது

பாரா­ளு­மன்றில் பத்ம உத­ய­சாந்த தெரி­விப்பு

0 701

வணாத்­த­வில்லு பிர­தே­சத்தில் கண்­டெ­டுக்­கப்­பட்ட வெடி­பொருட்களின் பின்­ன­ணியை கண்­டு­பி­டிக்கத் தவறினால் முஸ்லிம் அடிப்படைவாதம் நாட்டில் தலை­தூக்கும் அபாயம் இருக்­கின்­றது என தேசிய சுதந்­திர முன்­னணி உறுப்பினர் பத்ம உத­யசாந்த தெரி­வித்தார்.பாரா­ளு­மன்­றத்தில் நேற்­று­முன்­தினம் புத்­தளம் வணாத்­த­வில்லு பிர­தே­சத்தில் கண்­டெ­டுக்­கப்­பட்ட வெடி­பொ­ருட்கள் தொடர்பில் சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணையை முன்­வைத்து உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

30 வருட யுத்­தத்­துக்கு முகம்­கொ­டுத்த எமது நாடு, அதன் மூலம் அனைத்து இன மக்­களும் பல்­வேறு வித­மாக பாதிக்­கப்­பட்­டனர். அத­ுபோன்­ற­தொரு நிலை மீண்டும் தலை­தூக்­கு­வதை இந்த நாட்­டி­லி­ருக்கும் எந்த இனமும் அனு­ம­திக்­கப்­போ­வ­தில்லை. ஆனால் முஸ்லிம் அடிப்­ப­டை­வாத அமைப்பு உலகம் பூரா­கவும் பரவி வரு­கின்­றது. அதன் தாக்கம் இலங்­கை­யிலும் வந்­து­வி­டக்­கூ­டாது என்­ப­தற்­கா­கவே இந்த பிரே­ர­ணையை முன்­வைத்தேன்.

அத்­துடன் மாவ­னெல்லை பிர­தே­சத்தில் புத்தர் சிலையை சேத­மாக்­கி­ய­வர்கள் என்ற சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளிடம் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணையின் அடிப்­ப­டையில் புத்­தளம் வணாத்­த­வில்லு பிர­தே­சத்தில் 100 கிலோ கிராம் கொண்ட வெடி­பொ­ருட்கள் குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வி­னரால் கைப்­பற்­றப்­பட்டுள்­ளன. இந்த சம்­ப­வத்தின் பின்­ன­ணியில் இருப்­ப­வர்களை கைது­செய்து இதற்கு முற்­றுப்­புள்ளி வைக்­கா­விட்டால் எமது நாட்­டிலும் முஸ்லிம் அடிப்­ப­டை­வாத இயக்கம் தலை­தூக்கும் அபாயம் இருக்­கின்­றது.

அதனால் அன்று அல்பர்ட் துரை­யப்­பாவை கொலை செய்­ததை மறைக்க நட­வ­டிக்கை எடுத்­ததால் பிர­பா­கரன் தோன்றி ஆயு­த­போ­ராட்­டமே இடம்­பெற்­றது. அதே­போன்று இன்று புத்­தளம் வணாத்­த­வில்லு பிர­தே­சத்தில் வெடி­பொ­ருட்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட சம்­ப­வத்தின் பின்­ன­ணியில் இருக்கும் இப்­ராஹிம் சகோ­த­ரர்­களை பாது­காக்க நட­வ­டிக்கை எடுத்தால் அதன் பெயரில் முஸ்லிம் அடிப்­ப­டை­வாத இயக்கம் தலை­தூக்கும் அச்சம் இருக்­கின்­றது.

அதனால் தலை­ம­றை­வாக இருக்கும் குறித்த நபர்­களை மேல்­மா­காண அர­சி­யல்­வாதி ஒருவர் பாது­காப்­ப­தாக தெரிவிக்கப் படுகின்றது. அவ்வாறு செயற்பட்டால் எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகத்துக்கே இது பாதிப்பாக அமையும். அதனால் நாட்டில் மீண்டும் அடிப்படைவாத அமைப்புக்கள் தலைதூக்காமல் இருக்க நாங்கள் அனைவரும் இணைந்து செயற்படவேண்டும் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.