சூடானில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் நியாயமான குறிக்கோளினை உடையது

சூடான் பாதுகாப்பு அமைச்சர்

0 604

சூடா­னில்­இ­ளை­ஞர்கள் நடத்தி வரும் ஆர்ப்­பாட்­ட­ங்கள் நியா­ய­மான குறிக்கோளின் அடிப்­ப­டை­யி­லேயே நடத்­தப்­ப­டு­கி­ன்ற­தென கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று சூடான் பாது­காப்பு அமைச்சர் ஊட­கங்­க­ளிடம் தெரி­வித்தார்.

அர­சாங்­கத்தின் சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் கடந்த மூன்று நாட்­களில் வெளி­யிட்ட இரண்­டா­வது வெளிப்­ப­டை­யான நல்­லெண்ண சமி­க்ஞை­யாக இது பார்க்­கப்­ப­டு­கின்­றது.

கடந்த டிசம்பர் மாதம் 19 ஆம் திக­தி­யி­லி­ருந்து சூடானில் தினமும் பொரு­ளா­தார நெருக்­க­டி­யினால் விரக்­தி­யுற்ற மாண­வர்கள், செயற்­பாட்­டா­ளர்கள் மற்றும் ஏனை­யோரால் மூன்று தசாப்த கால­மாகப் பத­வி­யி­லி­ருக்கும் ஜனா­தி­பதி ஒமர் அல்-­ப­ஷீரைப் பதவி வில­கு­மாறு கோரி ஆர்ப்­பாட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

பாது­காப்பு அமைச்சர் அவாட் மொஹமட் அஹமட் இப்ன் அவ்ப் ஆர்ப்­பாட்டக் காரர்­களின் கரி­சனை தொடர்பில் நேர­டி­யாக எத­னையும் தெரி­விக்­காத போதிலும், நாட்டில் தற்­போ­துள்ள நிலைமை இளை­ஞர்­க­ளுக்கும் முதி­ய­வர்­க­ளுக்கும் இடை­யே­யான இடை­வெ­ளியைக் காட்­டு­வ­தாகத் தெரி­வித்தார்.

இதன் மூலம் தலை­மு­றை­க­ளுக்­கி­டை­யி­லான தொடர்­பாடல் மற்றும் இளை­ஞர்­களின் இலட்­சி­யங்­களை அறிந்து அவர்­க­ளது பிரச்­சி­னைக்­கான நியா­ய­மான தீர்வு தேவை என்­பதை அது விளக்­கு­கின்­றது எனவும் தெரி­வித்தார்.

அண்­மைக்­கால நிகழ்­வுகள் அர­சியல் அல­குகள், கட்­சிகள் மற்றும் முன்­னரை விட வேறு­பட்ட சிந்­தனைப் போக்­கு­ட­னான ஆயுத இயக்­கங்கள் என்­பன மீள வடி­வ­மைக்­கப்­பட வேண்டும் என்­பதை உணர்த்­து­கின்­றன என இரா­ணுவ அதி­கா­ரி­க­ளிடம் உரை­யாற்­றிய அமைச்சர் தெரி­வித்­த­தாக அமைச்சின் அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

என்ன வகை­யான மீள­மைப்பு தேவை என்பதை அமைச்சர் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. அத்துடன் ஆர்ப்பாட்டங்களுக்கு பின்னணியிலிருந்து செயற்படும் எதிர்க்கட்சிகள் உடனடியாக எந்தவித கருத்துக்களையும் வெளியிடவில்லை.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.